❒ அரசியலில் ரஜினி! | H | ❒ பதிவர்களுக்கு கொண்டாட்டம்!

Thursday, 12 July 2007

❒ ஜெயா டிவியில் பாலபாரதி

சரியாக 12 மணி அளவில் பொன்ஸ் தகவலைச் சொன்னார். எழுதிய பதிவை ப்ப்ளிஷ் செய்து தமிழ்மணத்தில் இணைத்து விட்டு சென்று தொலைக்காட்சியை போடுவதற்குள் ஆரம்பமாகி இருந்தது. மொட்டைத் தலையில் கொஞ்சமே முடிவளர்ந்து இருந்தது. தொலைபேசியில் நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டு தலைவர் கம்பீரமாக அமர்ந்திருந்தார்.

தமிழில் வலைப்பதிவுகள் பற்றி கேள்விகள்.

வலைப்பதிவு துவங்குவது, ஆட்சென்ஸ், மாணவர்கள், குழந்தைகளுக்கான பதிவுகள் என்று கேள்விக் கணைகளை அவருக்கே உரிய சிரிப்புடன் எதிர்கொண்டார். அவ்வப்போது மொக்கை போடவும் தவறவில்லை. சில கேள்விகள் அவருக்கு புரியவில்லை போல தோன்றியது.

தமிழ்99 பற்றி ஆரம்பத்தில் கூறியவர் இறுதியில் தமிழில் எளிமையாக தட்டச்சுவது பற்றி கேட்ட போது தமிங்கிலம் பற்றியே அதிகம் விளக்கம் கூறி கொஞ்சம் சொதப்பியதில் கொஞ்சம் வருத்தமுண்டு. (அதுக்காகத்தான் தல சீக்கிரமாக அதை அனுபவ பூர்வமாக கற்றுக் கொள்ளணும்னு சொல்றது.)

இருந்தாலும் வலைப்பதிவு ஆரம்பிப்பது பற்றி நிறைய விசயங்களை புதியவர்களுக்கு எடுத்துச் சொன்னார். சம்பந்தமில்லாத கேள்வி கேட்டவர்களை நிகழ்ச்சி முடிந்த பிறகு தொடர்பு கொள்ள சொன்னார்.

விரிவாக வீடியோ பதிவே வரும். அப்போ எல்லோரும் தவறாமல் பாருங்க.

ஆமா...சென்னை வலைப்பதிவர் பட்டறை பற்றி சொன்னீங்களா தல? ஆரம்பம் பார்க்க முடியாததால் உறுதிப் படுத்திக்க முடியலை.

தமிழ் வலைப்பதிவுகளை இன்னொரு தளத்திற்கு முன்னேற்றும் அவரது இலட்சியத்துக்கு இது ஒரு சிறப்பான வளர்ச்சிப் படியாக இருக்கும். பாலபாரதியின் இந்த பேட்டியால் நிச்சயமாக நிறைய புதிய தமிழ்வலைப்பதிவுகள் உருவாக வழி பிறக்கும். தமிழ் வலைப்பதிவுகளுக்கு மீடியா வெளிச்சம் கிடைக்க காரணமாக இருக்கும் தல பாலாவுக்கு எல்லோரும் ஓ போடுங்க


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

11:35 Posted in வலைப்பதிவு | Permalink | Comments (25) | Email this | Tags: blog, jaya tv, ஜெயா டிவி |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. இந்த பதிவுக்கு கொஞ்சம் கேள்விக்குறி அதிகமாக விழுவது போல் இருக்கிறதே!
    :-))

    கூறுவது: வடுவூர் குமார் | Thursday, 12 July 2007

  2. குமார் வாங்க

    கேள்விக்குறி? புரியலை

    கூறுவது: ☆ சிந்தாநதி | Thursday, 12 July 2007

  3. பெரிய ஓ போட்டாச்சு

    கூறுவது: முத்துகுமரன் | Thursday, 12 July 2007

  4. முன்பே சொல்லாதது ரொம்ப அநியாயம்..
    எங்கே பார்த்துட்டு கிண்டல் எதுவும் செய்துவிடுவார்களோ என்று யாராவது பயமுறுத்திட்டாங்களா...நாங்க கேக்கலையே என்ன பேசினார்ன்னு/ :(

    கூறுவது: முத்துலெட்சுமி | Thursday, 12 July 2007

  5. எங்க வீட்ல இருந்து போன் செய்து பேசுவது தல தானான்னு உறுதி படுத்திகிட்டதுக்குப் பிறகுதான் தெரியும் அவரு இன்றைக்கு டி.வில வராருன்னு. ஏங்க முன்னாடியே இதைப் பற்றி சொல்லி இருக்கக் கூடாதா... சரி விடுங்க கண்டிப்பா வீடியோ பதிவைப் போடவும்.

    கூறுவது: அயன் | Thursday, 12 July 2007

  6. ஒரு மணி நேர நிகழ்ச்சி. முன்கூட்டியே சொல்லி இருந்தால் நல்லா இருந்திருக்கும்.

    ஆனால் அதில் ஒரு சிக்கல உண்டு. அப்படி சொல்லி இருந்தால் நிறைய வலைப்பதிவர்கள் ஆர்வமாக தொலைபேசி மொக்கை போட்டிருப்பாங்க. அப்புறம் புதிய, வலைப்பதிவு பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு பேச லைன் கிடைச்சிருக்காதுங்க. அதனால் அவர் சொல்லாம விட்டதை தப்பு சொல்ல முடியாது.

    கூறுவது: ☆ சிந்தாநதி | Thursday, 12 July 2007

  7. ஒரு பதிவு... ஒரே ஒரு பதிவு... ஒகே ஒக மின்னல் பதிவு போடாம விட்டுட்டாரே... ஜெயா டி.வியிலே மறு ஒளிபரப்பேல்லாம் உண்டா...? அதுக்காவது announcement வருமா

    கூறுவது: தீபா | Thursday, 12 July 2007

  8. வார நாட்களின் நிகழ்ச்சிகளுக்கு மறு ஒளிபரப்பு இல்லை என்று நினைக்கிறேன்.

    கூறுவது: ☆ சிந்தாநதி | Thursday, 12 July 2007

  9. அப்புறம் ஒரு முக்கியமான விசயம். இது பதிவு செய்யப் பட்ட நிகழ்ச்சி இல்லை. நேரடி ஒளிபரப்பு.

    பக்கத்தில் ஒரு அழகான பெண்ணும் தொலைபேசி வழியாக நேயர்களும் கேட்ட கேள்விகளுக்கு பாலபாரதி நேரடியாக பதில் சொல்லும் நிகழ்ச்சி.

    கூறுவது: ☆ சிந்தாநதி | Thursday, 12 July 2007

  10. அப்போ நடந்த நிகழ்ச்சியை ரெகார்ட் பண்ணியிருப்பாங்களே.. அதை கூடவா மறு ஒளிபரப்பு செய்ய மாட்டாங்க...:(

    கூறுவது: தீபா | Thursday, 12 July 2007

  11. முடிஞ்சா வலையேத்தி விடுங்க. நாங்களும் பார்த்துக்குவோம்.

    கூறுவது: துளசி கோபால் | Thursday, 12 July 2007

  12. முன்னதாகத் தெரிவிக்காதற்குக் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.......
    பொன்ஸிடம் தொலைபேசியபொழுதுகூட,அவரும் தெரிவிக்கவில்லை......

    ஒருவேளை, இது நேரடி ஒளிபரப்பு;இங்கேயும் பா.க.ச வினர்
    வரக்கூடும் என்று பயந்துவிட்டாரோ?

    கூறுவது: sivagnanamji | Thursday, 12 July 2007

  13. இங்க லண்டனிலை ஜெயா டிவி நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டில் நடந்த அடுத்த நாள் இங்கு போடுறவை.. நிகழ்ச்சிக்கு என்ன பேருங்க ...சிலவேளை இங்கு போட்டால் பார்க்கலாம்

    கூறுவது: sinnakuddy | Thursday, 12 July 2007

  14. நிகழ்ச்சியின் பெயர் Dial Jaya TV

    கூறுவது: ☆ சிந்தாநதி | Thursday, 12 July 2007

  15. தலை அவர்கள் பேசுறார் என்று தெரிந்தவுடன் அரைநாள் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக்கிட்டு போயிட்டேன்...

    அருமையாக கலக்கினார்.....

    கூறுவது: செந்தழல் ரவி | Thursday, 12 July 2007

  16. ஆஹா... அதுக்குள்ளாற பதிவும் போட்டாச்சா? அது சரி.. சொல்லாம போனதற்கே இந்த மாதிரி பதிவு போடுற ஆட்கள் இருக்குற பூமியில..( இதுல சங்கத்தைப் பத்தி ஏன் சொல்லலைன்னு கொலை மிரட்டல் வேற வந்துகிட்டு இருக்கு) முன்னாடியே சொல்லி இருந்தா அவ்வளவு தான். மேலும் பல பிபுதியவர்களை வலை உலகிற்கும்..., தமிழ் கணிணி உலகிற்கும் கொண்டு வரும் என் ஆசைகளில் இது ஒரு படியே!

    நிறைய அழைப்புகள் வந்தன. திட்டமிட்டவை தாண்டி பேசியவர்களை சமாளித்து அனுப்பியாச்சு. ஆனா... இந்த நிகழ்வின் வீடியோ பதிவு கிடைக்க வில்லை. :(

    வலை உலக வாசிகள் தப்பித்தார்கள். :)

    பதிவுக்கு நன்றி சிந்தாநதி.

    கூறுவது: யெஸ்.பா | Thursday, 12 July 2007

  17. //தமிழ்99 பற்றி ஆரம்பத்தில் கூறியவர் இறுதியில் தமிழில் எளிமையாக தட்டச்சுவது பற்றி கேட்ட போது தமிங்கிலம் பற்றியே அதிகம் விளக்கம் கூறி//
    அப்படியா... அவர் தமிழ்99 பற்றித்தான் அதிகம் பேசிய மாதிரி இருந்தது. நான் கூட நாமளும் (phonetic keyboard user) சீக்கிரமே மாறனும்னு யோசிச்சிகிட்டு இருந்தேன்.

    எதேச்சையா பார்த்த நிகழ்ச்சி. நல்ல பயனுள்ள நிகழ்ச்சி.

    மூத்த பதிவர்கள் பற்றிய கேள்விக்கு ஒரு பெரிய பட்டியல் போடுவார்னு நினச்சேன். கார்த்திக் ராமாஸ் பற்றி மட்டும் சொல்லிட்டு அப்பீட்டு ஆயிட்டார் :-))

    கூறுவது: Sridhar Venkat | Thursday, 12 July 2007

  18. பாய் ,

    சொல்லவே இல்லே :(

    கூறுவது: ப்ரியன் | Friday, 13 July 2007

  19. பாய் ,

    சொல்லவே இல்லே :(

    கூறுவது: ப்ரியன் | Friday, 13 July 2007

  20. சிந்தாநதி
    உங்கள் பதிவை திறக்கும் போதே மேலிருந்து கேள்விக்குறிகள் கீழே விழுந்துகொண்டிருப்பதை அப்படி சொன்னேன்.
    ஆனால் இப்போது உள்ள ஒரு கணினியில் பொட்டி பொட்டியாக விழுகிறது.(இந்த கணினியை கணக்கில் எடுத்துக்கொள்ளாதீர்கள்)

    கூறுவது: வடுவூர் குமார் | Friday, 13 July 2007

  21. ஓ... அவை யூனிகோடு கேரக்டர் மூலம் பூக்கள் வடிவம் விழும்படி இருக்கிறது. உங்கள் கணினிகளில் அதற்கான எழுத்துரு இல்லாமல் இருக்கலாம் அதனால் தான் கேள்விக்குறி, பெட்டி எல்லாம்.

    கூறுவது: ☆ சிந்தாநதி | Friday, 13 July 2007

  22. உங்கள் எழுத்து மிகவும் நன்றாக இருக்கிறது.

    கூறுவது: Murugesan | Friday, 13 July 2007

  23. //ஆனால் அதில் ஒரு சிக்கல உண்டு. அப்படி சொல்லி இருந்தால் நிறைய வலைப்பதிவர்கள் ஆர்வமாக தொலைபேசி மொக்கை போட்டிருப்பாங்க. அப்புறம் புதிய, வலைப்பதிவு பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு பேச லைன் கிடைச்சிருக்காதுங்க. அதனால் அவர் சொல்லாம விட்டதை தப்பு சொல்ல முடியாது.//

    மிகச் சரியாக சொன்னீர்கள்... அமுக காரங்க கும்மியடிச்சிருக்கலாம்.

    சில விசயங்கள் ரகசியகமாத்தான் செய்யனுங்கறத கரெக்டா செய்றார்.

    தல பாராட்டுக்கள்...

    கூறுவது: மாஹிர் | Monday, 16 July 2007

  24. //ஆனால் அதில் ஒரு சிக்கல உண்டு. அப்படி சொல்லி இருந்தால் நிறைய வலைப்பதிவர்கள் ஆர்வமாக தொலைபேசி மொக்கை போட்டிருப்பாங்க. அப்புறம் புதிய, வலைப்பதிவு பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு பேச லைன் கிடைச்சிருக்காதுங்க. அதனால் அவர் சொல்லாம விட்டதை தப்பு சொல்ல முடியாது.//

    மிகச் சரியாக சொன்னீர்கள்... அமுக காரங்க கும்மியடிச்சிருக்கலாம்.

    சில விசயங்கள் ரகசியகமாத்தான் செய்யனுங்கறத கரெக்டா செய்றார்.

    தல பாராட்டுக்கள்...

    கூறுவது: மாஹிர் | Monday, 16 July 2007

  25. பாலாண்ணாவா/
    சொல்லவேயில்லை :)

    கூறுவது: Thooya | Tuesday, 17 July 2007

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)