❒ அப்துல் கலாமின் சிபாரிசு | H | ❒ அரசியலில் ரஜினி!

Tuesday, 10 July 2007

❒ ஆரியம் எங்கே போனது?

ஜாலிஜம்பர் என்பவர் ஒரு பதிவு இட்டிருந்தார்.

==========================

தமிழ்த்தாய் வாழ்த்து-இடை உருவல்

தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து ஒரு வரி நீக்கப்பட்டுள்ளது.
நீக்கப்பட்ட அந்த வரி,

ஆரியம் போல் உலகவழக்கு அழிந்து படாது இருக்கும்
உந்தன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!

இந்த நீக்கத்தின் பின்ணனி தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

===========================

முதலில் இந்த தமிழ்த்தாய் வாழ்த்து எப்படி வந்தது என்று பார்ப்போம். இது தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்தாகவே எழுதப் பட்டது அல்ல.

மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை தனது மனோன்மணீயம் நாடகத்தின் பாயிரமாக கடவுள் வணக்கம் என ஒரு கடவுள் வாழ்த்தையும் கூடவே தமிழ்த் தெய்வ வணக்கம் என்ற தலைப்பில் இன்னொரு பாடலையும் எழுதி இருந்தார்.

அந்தப் பாடல் இது தான்.

-oOo-

தமிழ்த் தெய்வ வணக்கம்
(பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா)

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே.


பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடுனும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையா
உன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே


கடல்குடித்த குடமுனியுன் கரைகாணக் குருநாடில்
தொடுகடலை யுனக்குவமை சொல்லுவதும் புகழாமே.

ஒரு பிழைக்கா அரனார்முன் உரையிழந்து விழிப்பாரேல்
அரியதுன திலக்கணமென் றறைவதுமற் புதமாமே.

சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே.

வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு
காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே.

கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையாருன் வாசகத்தி லொருபிரதி கருதினதே.

தக்கவழி விரிந்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை
மிக்கநலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே.

வடமொழிதென் மொழியெனவே வந்தவிரு விழியவற்றுள்
கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே.

வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்
கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார்.

கலைமகடன் பூர்வதிசை காணுங்கா லவள் விழியுள்
வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார்.

பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே.

வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக் கொருநீதி

மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.

எனவாங்கு

நிற்புகழ்ந் தேத்துநின் நெடுந்தகை மைந்தர்
பற்பலர் நின்பெரும் பழம்பணி புதுக்கியும்
பொற்புடை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும்
நிற்பவர் நிற்க நீபெறும் புதல்வரில்
அடியேன் கடையேன் அறியாச் சிறியேன்
கொடுமலை யாளக் குடியிருப் புடையேன்
ஆயினும் நீயே தாயெனுந் தன்மையின்
மேயபே ராசையென் மீக்கொள ஓர்வழி
உழைத்தலே தகுதியென் றிழைத்தவிந் நாடகம்
வெள்ளிய தெனினும் விளங்குநின் கணைக்காற்கு
ஒள்ளிய சிறுவிர லணியாக்
கொள்மதி யன்பே குறியெனக் குறித்தே.

அவையஞ்சின நெஞ்சொடு கிளத்தல்.

(நேரிசை வெண்பா)
அமைய அருளனைத்தும் ஆட்டுமேல் நெஞ்சே
சுமைநீ பொறுப்பதெவன் சொல்வாய் - நமையுமிந்த
நாடகமே செய்ய நயத்தால் அதற்கிசைய
ஆடுவம்வா நாணம் அவம்.

பாயிரம் முற்றிற்று.

-oOo-

தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்தை தேர்வு செய்ய பல பாடல்கள் பரிசீலிக்கப் பட்ட போது இந்தப் பாடலும் அந்தப் பரிந்துரையில் இருந்தது. இறுதியில் இந்தப் பாடலின் முதல் இரு பத்திகள் தேர்வு செய்யப் பட்டன. எனினும் இரண்டாம் பத்தியின் பொருள்

இடைவிடாது பல உயிர்கள், பல உலகம் படைத்தளித்துக்கொண்டே இருந்தாலும் பரம்பொருளாகிய இறைவன் முன் இருந்தபடியே (சோர்வின்றி) இருப்பது போல

கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு என பலமொழிகள் உன்னிடமிருந்து பிறந்தாலும் ஆரிய மொழியாகிய சமற்கிருதம் போல வழக்கொழிந்து போய்விடாமல் என்றும் இளமையுடன் புதுமை குன்றாமல் இருக்கும் உன் திறனை வாழ்த்துவோம்


என்பதாக வருகிறது.

எனவே 'பிறமொழிகளைப் பற்றிய ஒப்பீடு அவசியமில்லை, முதற்பத்தி மட்டுமே போதும்' எனக் கருதி கூடவே அதற்கு முத்தாய்ப்பாக 'இரண்டாம் பத்தியின் இறுதி வரி'யை மட்டும் தேர்வு செய்தார் அன்றைய முதல்வராக இருந்த இன்றைய முதல்வர் கருணாநிதி.

எனவே கிட்டத்தட்ட ஐம்பது வரிகள் இருந்த பாடலில் இருந்து மொத்தம் ஏழுவரிகள் மட்டுமே இறுதியாக தேர்வு செய்யப் பட்டன.

இடையில் (பரிந்துரை செய்யப் பட்ட இரு பத்திகளில்) என்று பார்த்தாலும் நீக்கப் பட்டது ஒருவரி அல்ல. இரண்டாம் பத்தியின் ஐந்து வரிகள் நீக்கப் பட்டு ஒரு வரி மட்டுமே தேர்வு செய்யப் பட்டது.


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

07:50 Posted in இலக்கியம் | Permalink | Comments (11) | Email this | Tags: tamil, தமிழ், வாழ்த்து |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. Thums is wrong Thumbs is right .Pl correct tamila!!!!

    கூறுவது: Raj | Tuesday, 10 July 2007

  2. Raj வாங்க

    இந்த பிழையை முன்பே கவனித்தேன். நிரலில் வேறு ஒரு பிழை காரணமாக இப்போது template திருத்தங்கள் செய்ய முடியவில்லை.

    கூறுவது: ☆ சிந்தாநதி | Tuesday, 10 July 2007

  3. காதல் கவிதைப் போட்டி

    இப்போட்டிக்கான கடைசி நாள்: மே 10.

    Posted by ✪சிந்தாநதி
    at 4/30/2007 10:23:00 AM

    ****
    **

    *
    **
    *
    **

    ✪சிந்தாநதி said...

    தாமதத்திற்கு மன்னியுங்கள்...
    May 25, 2007 7:38 PM

    ---------------

    இது பற்றி எனது பதிவும் இங்குhttp://thamili.blogspot.com/2007/06/blog-post_27.html

    கூறுவது: தமிழி | Tuesday, 10 July 2007

  4. நன்றி தமிழி. உங்கள் பதிவில் மறுமொழி இட்டிருக்கிறேன்.

    அனைவருக்கும்...

    மீண்டும் தாமதத்திற்கு மன்னிக்கவும்.

    போட்டி முடிவுகள் 16-07-07 அன்று வெளியாகும்.

    கூறுவது: ☆ சிந்தாநதி | Tuesday, 10 July 2007

  5. முழுமையான தகவல்கள்...நன்றி...!!!

    கூறுவது: செந்தழல் ரவி | Tuesday, 10 July 2007

  6. வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ரவி :)

    கூறுவது: ☆ சிந்தாநதி | Tuesday, 10 July 2007

  7. மிக்க நன்றி சிந்தாநதி.

    கூறுவது: ஜாலிஜம்பர் | Thursday, 12 July 2007

  8. Excellent Post!

    Thanks for Sharing!

    கூறுவது: Sivabalanv | Thursday, 12 July 2007

  9. ஜாலிஜம்பர், சிவபாலன் நன்றி

    கூறுவது: ☆ சிந்தாநதி | Thursday, 12 July 2007

  10. விளக்கத்திற்கு நன்றி

    கூறுவது: Cheena ( சீனா) | Saturday, 08 March 2008

  11. மிகவும் அருமையான பதிவு.

    கூறுவது: Kannan | Saturday, 22 August 2009

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)