❒ இட்லிவடையும் பறக்கும் பாவையும்! | H | ❒ விஜயகாந்த் வில்லன்: அழகுராஜா

Thursday, 24 May 2007

❒ வேர்டிலும் பவர்பாயிண்டிலும் தமிழ்

வேர்டிலும் பவர்பாயிண்டிலும் தமிழ் ஒழுங்காக தெரியவில்லையா?

இகலப்பை மூலம் வேர்டிலும் பவர்பாயிண்டிலும் எழுதும்போது பலரும் தமிழ் கட்டம் கட்டமாக மாறிப்போவதை கவனித்திருப்பீர்கள். இதன் காரணம் மற்றும் தீர்வு என்ன?

இயல்பாக விண்டோஸ் கணினியின் டிபால்ட் எழுத்துருவான லதாவே வேர்டிலும் வரும். அந்த எழுத்துரு ஆபீஸ் தொகுப்பு செயலிகளில் ஒழுங்காக வேலை செய்வதில்லை.

ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆபீஸ் தொகுப்பில் தமிழுக்காக தந்திருக்கும் எழுத்துரு Arial Unicode MS.

உங்கள் வேர்டு அல்லது பவர்பாயிண்ட் செயலியை திறந்து கொள்ளுங்கள். அதில் format - font சுட்டினால் வரும் பெட்டியில் Latin text font மற்றும் compex script font பகுதியில் Arial Unicode MS என்று செட் செய்து கீழே இருக்கும் default சுட்டியை தட்டவும். (பவர்பாயிண்டில் ok தட்டவும்.)

இப்போது நீங்கள் செயலியை மூடிவிட்டு மீண்டும் புதிதாக திறந்து எழுத ஆரம்பிக்கும் போது எல்லாம் ஒழுங்காக வரும்.

இகலப்பை மூலம் எழுத தமிழ் அழகாக வரும்.

தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து இந்திய மொழிகள் மற்றும் ஏராளமான உலக மொழிகளை வேறு எந்த எழுத்துருவும் பதிவிறக்காமல் இந்த Arial Unicode MS எழுத்துரு மூலம் எழுதலாம். அந்தந்த மொழிகளுக்கான விசைப்பலகை செயலி மட்டுமே தேவை. தமிழுக்கு எகலப்பை வேண்டும்.

உங்கள் கணினியில் MS ஆபீஸ் பொதி இருந்தும் Arial Unicode MS எழுத்துரு font folder ல் இயல்பாக நிறுவப் பட்டிருக்கவில்லை என்றால் பின்வரும் வழிமுறைப்படி அதை நிறுவ வேண்டும்.

முதலில் கணினியில்

Control Panel க்கு செல்லவும்.

விண்டோஸ் xp அல்லது 2000 எனில்

Change or Remove Programs

இதில்

Microsoft Office தேர்வு செய்து Change கிளிக் செய்யவும் (தவறுதலாக Remove கிளிக் செய்துவிடக் கூடாது.)

(விண்டோஸ் 98, Me எனில்

Install/Uninstall பட்டையில் Microsoft Office தேர்வு செய்யவும்.

Add/Remove கிளிக் செய்யவும்.)

புதிதாக வரும் Features to install பெட்டியில்

1. next கிளிக் செய்யவும்.

2. expand Office Shared Features கிளிக் செய்யவும்.

3. expand International Support கிளிக் செய்க.

4. Universal Font அருகில் உள்ள ஐகானை கிளிக் செய்யவும்.

5 . கிளிக் Run all from My computer on the shortcut menu.

6. கிளிக் Update.

இப்போது font folder ல் Arial Unicode MS நிறுவப் பட்டிருக்கும்.

-oOo-

குறிப்பு: Arial Unicode MS எழுத்துரு இல்லை என்றாலும் அதற்குப் பதிலாக வேறு ஏதேனும் ஒரு தமிழ் யூனிகோடு எழுத்துருவைப் பயன்படுத்தலாம். ஆனால் பல யூனிகோடு எழுத்துருக்கள் கணினியில் இருந்தாலும் இந்த குறிப்பிட்ட செய்முறையின் போது format - font பெட்டியில் சில குறிப்பிட்ட எழுத்துருக்கள் மட்டுமே செயல்படக்கூடியதாக இருக்கும். பெரும்பாலும் TSCu எனத்துவங்கும் யூனிகோடு எழுத்துருக்கள் செயல்படுவனவாக இருக்கும். அதில் TSCu_Paranar என்னும் எழுத்துரு நன்கு செயல்படுவதாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர். ஏரியல் யூனிகோடுக்கு மாற்றாக நான் சோதித்த போதும் அந்த எழுத்து சரியாக செயல்படுகிறது.

எனவே Arial Unicode MS இல்லை என்றால் அதற்கு பதிலாக TSCu_Paranar என்ற எழுத்துருவைப் பயன்படுத்தி மேற்கண்ட வழிமுறையின்படியே செயல்பட்டால் எழுத்துக்கள் சரியாக தெரியும்.


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

08:40 Posted in கணித்தமிழ் | Permalink | Comments (40) | Email this | Tags: word, ekalappai, tamil, தமிழ், எகலப்பை, வேர்ட் |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. மிகவும் நன்றி நன்பரே.

    கூறுவது: கார்த்திக் | Thursday, 24 May 2007

  2. atin text font மற்றும் compex scripts font இரண்டிலும் Arial Unicode MS செட் செய்ய வேண்டும்.
    //

    arial
    arial black
    arial narrow
    arial rounded MT bold

    மட்டுமே உள்ளது

    (ms office 2003)

    கூறுவது: மின்னுது மின்னல் | Thursday, 24 May 2007

  3. நல்ல தகவல்....

    கூறுவது: மயூரேசன் | Thursday, 24 May 2007

  4. நல்ல தகவல் நன்றி
    ஆனால் 'மின்னல்' சொன்னது போல்
    எனக்கும் 'Arial Unicode MS '
    இல்லையே ! என்ன செய்வது ?

    கூறுவது: இப்னுஜுபைர் | Thursday, 24 May 2007

  5. வோர்ட் 2000 த்தில் தமிழ் வருகிறது. ஆனால் கொம்புகள் மாறி வருகின்றன. என்ன செய்வது?

    கூறுவது: வினையூக்கி | Thursday, 24 May 2007

  6. மேலே உள்ள வழிமுறை ஆபீஸ் xp யில் சோதிக்கப் பட்டது.

    பிற வெர்சன்களில் ஏரியல் யூனிகோடு இல்லை எனில் TheneeUniTx அல்லது TSCu எனத் தொடங்கும் ஏதேனும் எழுத்துருவை மேலே உள்ள வழிமுறைகளின்படி செட் செய்து சோதித்து பாருங்கள்...

    கூறுவது: ☆ சிந்தாநதி | Thursday, 24 May 2007

  7. //
    பிற வெர்சன்களில் ஏரியல் யூனிகோடு இல்லை எனில் TheneeUniTx அல்லது TSCu எனத் தொடங்கும் ஏதேனும் எழுத்துருவை மேலே உள்ள வழிமுறைகளின்படி செட் செய்து சோதித்து பாருங்கள்...
    ///

    TSCu paranar யில் நன்றாக வேலை செய்கிறது

    நன்றி
    நன்றி
    நன்றி

    கூறுவது: மின்னுது மின்னல் | Thursday, 24 May 2007

  8. TSCu paranar யில் நன்றாக வேலை செய்கிறது

    எனக்கும்.

    கூறுவது: வடுவூர் குமார் | Thursday, 24 May 2007

  9. தகவலுக்கு நன்றி, சிந்தாநதி!

    நன்றாக வேலை செய்கிறது!

    கூறுவது: தென்றல் | Thursday, 24 May 2007

  10. நன்றி நண்பர்களே.

    பெரும்பாலானவர்களுக்கு மேற்கண்ட வழிமுறை மூலம் தீர்வு கிடைத்துள்ள போதிலும் ஆபீஸ் 2000 பயன்படுத்துகிறவர்களுக்கு இன்னும் பிரச்சினை இருப்பதாக தெரிகிறது. எனவே அதில் தீர்வு கண்டவர்கள், எந்த எழுத்துரு சரியாக வேலை செய்கிறது என்ற விவரம் தந்தால் இன்னும் பலருக்கு உதவியாக இருக்கும்.

    கூறுவது: ☆ சிந்தாநதி | Thursday, 24 May 2007

  11. miga nalla pathivu

    கூறுவது: Balasubramanian | Friday, 08 June 2007

  12. Thank you verymuch. It is very useful for me.

    கூறுவது: Mujibur | Monday, 18 June 2007

  13. Thank you verymuch. It is very useful for me.

    கூறுவது: Mujibur | Monday, 18 June 2007

  14. தகவலுக்கு நன்றி ..உபயோகமாயுள்ளது.

    கூறுவது: முத்துலெட்சுமி | Monday, 18 June 2007

  15. thank you! it is very useful.

    கூறுவது: saranya | Thursday, 21 June 2007

  16. நன்றி மிக்க நன்றி.

    கூறுவது: மரியா | Thursday, 21 June 2007

  17. நண்றி நண்பரே.....

    இதை பயன்படுத்தி என்னா தமிழ் வார்த்தைகளை ஒட்டத்தான் முடிகிறது ல் எழுத முடியவில்லை. இன்னும் விளக்கமாகச்சொன்னால் நல்லயிருக்கும்...

    கூறுவது: சாரல்.... | Saturday, 28 July 2007

  18. MS Office 2003 by default does not install Arial Unicode MS font. You can click the following link and find out how to install Arial Unicode MS font.

    http://support.microsoft.com/kb/287247

    கூறுவது: Chandran | Saturday, 28 July 2007

  19. //எனவே Arial Unicode MS இல்லை என்றால் அதற்கு பதிலாக TSCu_Paranar என்ற எழுத்துருவைப் பயன்படுத்தி மேற்கண்ட வழிமுறையின்படியே செயல்பட்டால் எழுத்துக்கள் சரியாக தெரியும்.//

    இது போலவே எந்த ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்தினாலும் சரியாக தெரியும். நான் பெரும்பாலும் தேனீ எழுத்துருவைப் பயன்படுத்துகிறேன். ஏனெனில் அதில் 'க்ஷ' மற்றும் 'ஸ்ரீ' போன்ற எழுத்துக்களின் rendering மிகச் சரியாக இருக்கிறது.


    //வோர்ட் 2000 த்தில் தமிழ் வருகிறது. ஆனால் கொம்புகள் மாறி வருகின்றன. என்ன செய்வது?//

    இது Indic பிரச்சனை என நினைக்கிறேன். இதைச் சரி செய்ய என்ற சுட்டியில் உள்ளபடி செய்யவும். (Arial Unicode MS எழுத்துரு இல்லாதவர்களும் இதை செய்து பார்த்து பின்னூட்டமிடுங்கள். Indic நிறுவும் போது சில எழுத்துருக்களும் நிறுவப்படும். அவற்றுள் Arial Unicode MS எழுத்துரு உள்ளதா எனத் தெரியவில்லை)

    கூறுவது: கோபி | Saturday, 28 July 2007

  20. //எனவே Arial Unicode MS இல்லை என்றால் அதற்கு பதிலாக TSCu_Paranar என்ற எழுத்துருவைப் பயன்படுத்தி மேற்கண்ட வழிமுறையின்படியே செயல்பட்டால் எழுத்துக்கள் சரியாக தெரியும்.//

    இது போலவே எந்த ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்தினாலும் சரியாக தெரியும். நான் பெரும்பாலும் தேனீ எழுத்துருவைப் பயன்படுத்துகிறேன். ஏனெனில் அதில் 'க்ஷ' மற்றும் 'ஸ்ரீ' போன்ற எழுத்துக்களின் rendering மிகச் சரியாக இருக்கிறது.


    //வோர்ட் 2000 த்தில் தமிழ் வருகிறது. ஆனால் கொம்புகள் மாறி வருகின்றன. என்ன செய்வது?//

    இது Indic பிரச்சனை என நினைக்கிறேன். இதைச் சரி செய்ய [http://www.higopi.com/ucedit/unicodeenable.html] என்ற சுட்டியில் உள்ளபடி செய்யவும். (Arial Unicode MS எழுத்துரு இல்லாதவர்களும் இதை செய்து பார்த்து பின்னூட்டமிடுங்கள். Indic நிறுவும் போது சில எழுத்துருக்களும் நிறுவப்படும். அவற்றுள் Arial Unicode MS எழுத்துரு உள்ளதா எனத் தெரியவில்லை)

    கூறுவது: கோபி | Saturday, 28 July 2007

  21. //இதைச் சரி செய்ய என்ற சுட்டியில் உள்ளபடி செய்யவும்.//

    சுட்டி: http://www.higopi.com/ucedit/unicodeenable.html

    கூறுவது: கோபி | Saturday, 28 July 2007

  22. கோபி,

    இது இண்டிக் பிரச்சினை அல்ல. இண்டிக் எழுத்துக்கள் நிறுவப் பட்ட பின்னும் வேர்டில் வரும் சிறப்பு பிரச்சினை.

    இண்டிக் எழுத்துக்களில் Arial Unicode இல்லை . ஆனால் MS ஆபீஸ் தொகுப்பில் தான் அது இருக்கிறது. ஆபீஸ் தொகுப்பில் அது இருந்தாலும் சில வேளை இயல்பாக நிறுவப் பட்டிருக்காது என்று Chandran தந்திருக்கும் சுட்டியில் இருந்து தெரிகிறது. (அந்த வழிமுறை தேவையான குறிப்புகள் தமிழாக்கம் செய்து விரைவில் இணைக்கிறேன்.)

    அது போல எல்லா யூனிகோடு எழுத்துருவும் ஆபீஸ் செயலிகளில் வேலை செய்யவில்லை. TSCu எழுத்துருக்கள் அனைத்தும் வேலை செய்கின்றன, பரணர் தெளிவாக இருக்கிறது. தேனி சில நேரங்களில் வரவில்லை.

    கூறுவது: ☆ சிந்தாநதி | Saturday, 28 July 2007

  23. சாரல்

    //இதை பயன்படுத்தி என்னா தமிழ் வார்த்தைகளை ஒட்டத்தான் முடிகிறது ல் எழுத முடியவில்லை. இன்னும் விளக்கமாகச்சொன்னால் நல்லயிருக்கும்...//

    உங்களிடம் எகலப்பை இருந்தால் தான் தமிழில் எழுத முடியும். எகலப்பை இருந்தும் எழுத முடியவில்லையா? விவரம் சொல்லுங்கள்.

    கூறுவது: ☆ சிந்தாநதி | Saturday, 28 July 2007

  24. Arial Unicode நிறுவும் முறை இணைத்து விட்டேன்.

    கூறுவது: ☆ சிந்தாநதி | Saturday, 28 July 2007

  25. இது குறித்து தமிழ் விக்கிபீடியாவில் தீர்வொன்றை திறம்பட எழுதியுள்ளேன் பார்க்க http://ta.wikipedia.org/w/index.php?title=user:redirect/e-kalappai

    கூறுவது: உமாபதி | Wednesday, 26 September 2007

  26. Fantastic blog. Immense.

    கூறுவது: chandran | Thursday, 04 October 2007

  27. மிக்க நன்றி
    MS office ல் ARIAL UNICODE MS select
    பண்ணியவுடன் நன்றாக தமிழ் font வருகிறது.
    Thanks a lot.
    Bye bye

    கூறுவது: kalpaa | Sunday, 16 December 2007

  28. மிக்க நன்றி. தகவல்கள் மிகவும் உதவியாக இருந்தது.


    “ உங்கள் வேர்டு அல்லது பவர்பாயிண்ட் செயலியை திறந்து கொள்ளுங்கள். அதில் format - font சுட்டினால் வரும் பெட்டியில் Latin text font மற்றும் compex script font பகுதியில் Arial Unicode MS என்று செட் செய்து கீழே இருக்கும் default சுட்டியை தட்டவும்.’’

    ஆனால் என்னுடைய அலுவலக computer- ல் format - font சுட்டினால் , compex script font பகுதி வரவில்லை. என்ன காரணம்?

    Windows-XP, word-2000 பயன்படுத்துகிறேன்.

    கூறுவது: கிரி | Friday, 11 January 2008

  29. very much usefull. Thanks a lot . Continue spreading knowledge.

    கூறுவது: b.palaniappan | Thursday, 24 January 2008

  30. //என்னுடைய அலுவலக computer- ல் format - font சுட்டினால் , compex script font பகுதி வரவில்லை. என்ன காரணம்?//

    word 2000 ல் ஒரே பிரிவாக உள்ளது அதில் மாற்றம் செய்தாலே போதும்.

    கூறுவது: ☆ சிந்தாநதி | Thursday, 24 January 2008

  31. useful information. thanks for everyone who contributed.

    கூறுவது: Kumanan | Saturday, 19 April 2008

  32. ayya,
    tamil unicode converter i en computoril niruva enena than muyandraalum iyalavillai
    enna seyvathu
    konjam vizakkamaha mail panna mudiyuma

    nandri

    kaleel

    கூறுவது: kaleel | Tuesday, 03 June 2008

  33. நன்றி

    கூறுவது: வணி | Friday, 18 July 2008

  34. I Dont No

    கூறுவது: Guruprasad | Monday, 18 August 2008

  35. good information thank you

    கூறுவது: Dheepa | Thursday, 25 September 2008

  36. hai nallaytu irunthathu.......

    கூறுவது: chitra | Saturday, 01 November 2008

  37. வணக்கம்,

    வேர்ட் தற்பொது,சரியாக இயங்குகிறது.நன்றி,தவிர,toolbarல் எழுத்துக்கள் மாறாமல் கட்டமாகவே வருகிறது. என்ன செய்வது என ஆலோசனை சொல்வீர்களா? நன்றி

    கூறுவது: ஜெயகாந்தன் | Tuesday, 04 November 2008

  38. good

    கூறுவது: k.velusamy | Monday, 30 March 2009

  39. மிகவும் பயனுள்ள தகவல்...
    மிக்க நன்றிகள்.

    கூறுவது: முஹம்மது ஸாபிர் | Thursday, 21 May 2009

  40. I am very happy now on getting Tips from this Site.
    Thank you !

    கூறுவது: R.G.Ragavi | Wednesday, 16 September 2009

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)