☜ ❒ தமிழ்மணத்தில் அதிரடி | H | ❒ பார்த்த ஞாபகம் இல்லையோ? [1] ☞
Friday, 11 May 2007
❒ வட்டாரத் தமிழில் நூல்கள் கூடாது-அன்பழகன்
சென்னை தமிழ், மதுரை தமிழ்,கோவைத் தமிழ், நெல்லைத் தமிழ் என தமிழை வட்டார வழக்கின் அடிப்படையில் பிரிக்கக் கூடாது. வட்டாரச் சொற்களைக் கொண்டு நூல்களை இயற்றவும் கூடாது என்று நிதியமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.
காஞ்சி மணிமொழியார் தமிழ்ப் பேரவை சார்பில் மணிமொழியார் 108வது பிறந்த நாள் விழாவும், பெரியாண்டவனின் சிந்தாமணித் திறன் நூல் வெளியீட்டு விழாவும் சென்னையில் நடந்தது.
எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன் தலைமை தாங்கினார். அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிந்தாமணித் திறன் நூலை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் அன்பழகன் பேசுகையில், எண்ணங்களை வெளியிட உரைநடை போல எதுவும் இல்லை. தற்போது மண்ணின் வாசனையுடன் தமிழில் நூல்கள் வருகின்றன. ஆனால் சமீப காலமாக வெளியிடப்படும் நூல்களில் வட்டாரச் சொற்கள் அதிகம் தலை தூக்குகின்றன.
இப்படி எழுதுவதால் தமிழ் பல தமிழாக பிரியும் நிலை ஏற்படும். பின்னர் எந்தத் தமிழ் சிறந்த தமிழ் என்ற தேவையில்லாத விவாதங்களும் ஏற்படலாம். கடைசியில் தவறான மொழி உச்சரிப்பு உடையதே நல்ல தமிழ் என்ற நிலையும் ஏற்படலாம்.
சென்னை தமிழ், மதுரை தமிழ்,கோவை தமிழ், நெல்லை தமிழ் என தமிழைப் பிரிக்கக் கூடாது. அந்த வட்டாரங்களில் புழங்கும் சொற்களைக் கொண்டு நூல் எழுதக் கூடாது. அதுபோன்ற வட்டாரச் சொற்கள் இடம் பெற ஊக்கம் தரக் கூடாது. தமிழைத் தமிழாக, பிழையில்லாமல் அச்சில் ஏற்ற வேண்டும்.
தமிழ் இனம் பண்பாட்டை வைத்துத்தான் மதிக்க வேண்டுமே தவிர பதவிகளை வைத்து மதிக்க்க கூடாது.
தமிழ் இலக்கியத்திலேயே கடினமான இலக்கியம் எது என்றால் அது சீவக சிந்தாமணிதான். அந்த நூலை தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் ஆய்வு நடத்தி சொல் வண்ணங்களைக் கொண்டு அச்சுக்குக் கொண்டு வந்தார்.
அந்த நூலை அச்சுக்குக் கொண்டு வர அவர் எவ்வளவு பாடுபட்டு இருப்பார். சிலப்பதிகாரம், மணிமேகலையைக் காட்டிலும் மக்களை இந்த நூல் மிகவும் கவர்ந்தது. உலக வாழ்க்கையின் உண்மையை வெளிக் கொண்டு வருவதாக இந்த நூல் அமைந்துள்ளது என்றார் அன்பழகன்.
செய்தி: தட்ஸ்தமிழ்
-oOo-
தலையெழுத்த்து...!
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
08:35 Posted in இலக்கியம் | Permalink | Comments (7) | Email this
| Tags: tamil, தமிழ், இலக்கியம் |
del.icio.us
|
|
Digg
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
மேட்டர விட டிஸ்கி சூப்பர்.. அதுக்காக ஒரு ரிப்பீட்டே.. :)
சென்ஷிகூறுவது: சென்ஷி | Friday, 11 May 2007
-
//:( இதுக்குத்தான் சொல்வாங்க தன் தலையில் தானே மண் போட்டுக்கறது ன்னு... படிச்சு வித்தியாசம் சொல்லுங்கன்னு கேட்டேன்ல..அதான்..//
இவங்க காமெடி பண்றதுக்கு வேற ஏரியா கிடைக்கலையா :)
எனக்கென்னமோ தமிழ்ங்கற இடத்துல எல்லாம் வாரிசுன்னும், நூல்ங்கற இடத்துல எல்லாம் பதவின்னும் போட்டு படிச்சு பாருங்க. சூப்பரா இருக்குது :))கூறுவது: சென்ஷி | Friday, 11 May 2007
-
:( இதுக்குத்தான் சொல்வாங்க தன் தலையில் தானே மண் போட்டுக்கறது ன்னு... படிச்சு வித்தியாசம் சொல்லுங்கன்னு கேட்டேன்ல..அதான்..//
இது முத்துலக்ஷ்மியக்கா பதிவுல போட்ட பின்னூட்டம். மாறி இங்கயும் ஒட்டிக்குச்சு. படிச்சுப்பாத்தா இதுவும் நல்லாத்தான் இருக்குது :))
சென்ஷிகூறுவது: சென்ஷி | Friday, 11 May 2007
-
பெரியவருக்கு வயசாயிடுச்சு...ஓய்வு பெற வேண்டி நேரம் வந்தாச்சுன்னு தெரியுது.
கூறுவது: ☆ சிந்தாநதி | Friday, 11 May 2007
-
டிஸ்கிக்கு இன்னுமொரு ரிப்பீட்டே!!!!
கூறுவது: பொன்ஸ் | Friday, 11 May 2007
-
தமிழ் மொழியில் தான் இலக்கியங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
வட்டார வழக்கு என்பது பகுதிசார் மொழியாக மட்டுமே பார்க்கவேண்டும். அதன் வீச்சு என்பது உண்மையில் பொது மொழியினை விட அதிகம். அதனால் அப்படியான படைப்புக்களை வரக்கூடாது என்பதோ, வளரக்கூடாது என்பதோ.. கறிக்கு உதவாத பேச்சு.
எந்த சூழ்நிலையிலும் என் வட்டார வழக்கு தான் சிறந்தது என்று எவனும் போட்டி போடமாட்டான்.
//பெரியவருக்கு வயசாயிடுச்சு...ஓய்வு பெற வேண்டி நேரம் வந்தாச்சுன்னு தெரியுது.//
ரிப்பீட்டே!கூறுவது: யெஸ்.பாலபாரதி | Friday, 11 May 2007
-
சென்ஷி சொல்றார்... பாலாஜி முடிக்கிறான்: வட்டார வாரிசுகளுக்கு பதவிகள் கூடாது - அன்பழகன் « Snap Judgment
கூறுவது: Bala Subra | Friday, 11 May 2007
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



