❒ வட்டாரத் தமிழில் நூல்கள் கூடாது-அன்பழகன் | H | ❒ பெரியார்: விமர்சனம்

Friday, 11 May 2007

❒ பார்த்த ஞாபகம் இல்லையோ? [1]

Image and video hosting by TinyPicந்தக் கிழவர் அங்கே காத்திருக்கத் தொடங்கி சரியாக ஆறு மணி நேரம் ஆகிறது. யாரைத்தேடி இருக்கிறார் என்று தெரியவில்லை. அந்த வழியாக பேருந்து வரும் ஓசை கேட்டால் உடனடியாக அவர் எழுந்து அது அங்கே நிற்குமா என்று ஆவலோடு பார்ப்பார். பேருந்து நிற்கும் போது அவரது முகத்தில் ஒரு ஆர்வமும் பரபரப்பும் தொற்றிக் கொள்ளும். பேருந்தில் இருந்து இறங்குபவர்களை ஒவ்வொருவராக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். இது வரை எந்த முகமும் அவர் தேடிய முகமாக இல்லாததால் ஏமாற்றத்தோடு திரும்பிப் போய் தான் அமர்ந்திருந்த அந்த ஆலமர நிழலில் இருந்த பாறாங்கல்லில் மறுபடி போய் அமர்ந்து கொள்வார். ஒரு வெற்றிலையை எடுத்து வாயில் இட்டுக் குதப்பிக் கொண்டே மோன நிலையில் மறுபடி அடுத்த பேருந்துக்கான காத்திருப்பு.

பேருந்து நிற்கா விட்டாலும் அதே மோனநிலையும் தவமும் மறுபடி தொடர்ந்து கொண்டிருந்தது.

பக்கத்து பெட்டிக் கடைக்காரன் சோமுவுக்கு அவரைப்பார்க்க ஆச்சரியமாக இருந்தது. அந்த ஆறு மணி நேரத்தில் அவர் ஒரு முறை கூட அன்ன ஆகாரம் உண்ணவில்லை. சிறுநீர் கழிக்கக் கூட அப்புறம் நகரவில்லை என்பதை கவனித்தான். வெற்றிலைச்சாறு மட்டும் உள்ளே இறங்கிக் கொண்டே இருந்தது. வெற்றிலையாவது தன்கடையில் வாங்க வருவார் என்று எதிர்பார்த்தால் அது கூட அவரது கையிலிருந்த பையில் இன்னும் மிச்சமிருக்கிறது.இந்தப் பக்கமாக வந்தாலாவது அவரைப் பற்றி விசாரிக்கலாம். இதற்கு முன் சோமு அந்தக் கிழவரை இந்தப் பக்கம் பார்த்தது இல்லை.

கிழவரின் பைக்குள் வெற்றிலை பாக்கு தவிர இன்னொரு பொருளும் இருந்தது. அது ஒரு கடிதாசி. அந்தக் கடிதம் அமெரிக்காவில் இருந்து வந்த கடிதம். அவருக்கு இருந்த ஒரே மகள் பத்து வருடங்களுக்கு முன் ஓடிப் போய் விட்டாள். அவளைப் பற்றிய தகவல் ஒன்றுதான் அமெரிக்காவில் இருந்து நேற்று அவருக்கு கடிதாசி ரூபத்தில் வந்தது.

-oOo-

"அப்பா நான் பாசாயிட்டேன்". வயலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த பொன்னுசாமி மகளின் குரல் கேட்டு நிமிர்ந்தார். பக்கத்து வீட்டு மிலிட்டரிக் காரர் வீட்டில் இருந்து வாங்கிய செய்தித்தாளுடன் காவேரி மூச்சிரைக்க நின்று கொண்டிருந்தாள்.

பொன்னு சாமி நின்று மகளைப் பார்த்தார். பத்தாம் வகுப்பு முடித்து விட்டாள். எத்தனை சீக்கிரம் வளர்ந்து விட்டாள். இப்போது தான் நடந்தது போலிருக்கிறது.

பொன்னுசாமி தம்பதியருக்கு ஒரே மகன். அவனைப் பதினெட்டு வயதில் மிலிட்டரிக்கு அனுப்பினார் பொன்னுசாமி. காஷ்மீரில் பணியாற்றப்போன ஒரே வருடத்தில் ஏதோ தீவிரவாதிகள் போட்ட குண்டு அவன் உயிர் குடிக்க அழுது அரற்றிக் கொண்டிருந்த மனைவியைத் தேற்றி 20 வருடம் கழித்து இரண்டாவது வாரிசுக்கு அச்சாரம் இட்டார் பொன்னுசாமி.

அழகான பெண்மகள் பிறந்தவேளை தாமத கர்ப்பத்தில் பிரசவம் சிக்கலாகி தாயைக் கொன்று பிறந்தவள் என்ற பழியோடு மண்ணில் விழுந்தாள் காவேரி. தானே தாயாகவும் தந்தையாகவும் இருந்து மகளை வளர்த்து ஆளாக்கினார்.

அவளும் அதற்குள் வளர்ந்து விட்டது போல் இருக்கிறது. இன்னும் சில வருடங்களில் அவளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்...அவரது சிந்தனையைக் கலைத்தது மகளின் குரல்.

"அப்பா... டவுணுக்கு போய் பிளஸ்டூ சேர விண்ணப்பம் வாங்கி வருகிறீர்களா?"

அவருக்கு அவளைப் படிக்க வைக்க சற்று சிரமமாக தான் இருந்தது. இப்போது அரசாங்கம் பேருந்து சலுகை, இலவச சைக்கிள் என்று கொடுப்பதால் போக்குவரத்துக்கு தனியாக செலவு இல்லை. இருந்தாலும் மகளை அவ்வளவு தூரம் அனுப்ப அவருக்கு மனம் இல்லை. ஆனால் அவளின் ஆசைக்காக சம்மதித்தார்.

விண்ணப்பம் எல்லாம் வாங்கி நிரப்பி பள்ளியில் நேர மகளுடன் நகரத்துக்கு சென்ற அன்று...

(தொடரும்)

==================-oOo-==================

நண்பர்களே

இந்த தொடர்கதை மூலம் ஒரு புதிய முயற்சி.
இந்தக் கதை தொடர்கதையாக வலைப்பதிவு சங்கிலி வழியாக எடுத்துச் செல்லப் படும்.

இந்த தொடரின் அத்தியாயங்களை வெவ்வேறு பதிவர்கள் தொடர வேண்டும்.

இதே தலைப்பில் தொடர் எண் இட்டு எழுதப் பட வேண்டும்.

ஒவ்வொருவரும் கதையை எழுதி இந்த குறிப்பை இறுதியில் இட்டு அடுத்து தொடர இன்னொருவரை அழைக்க வேண்டும்.

இந்த வித்தியாசமான முயற்சிக்கு தோள் கொடுக்க வாருங்கள்.

இரண்டாவது அத்தியாயத்தை எழுத வெட்டிப்பயல் அவர்களை அழைக்கிறேன்.


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

12:00 Posted in தொடர்கதை | Permalink | Comments (16) | Email this | Tags: story, கதை |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. இதுக்கு நான் பின்னூட்டம் போட்டு ஆரம்பிச்சு வக்கிறேன் :)

    சென்ஷி

    கூறுவது: சென்ஷி | Friday, 11 May 2007

  2. வருகைக்கு நன்றி

    (டில்லி மாநாட்டுத் தீர்மானத்தின்படி இந்த 'நன்றி')

    :)

    கூறுவது: ☆ சிந்தாநதி | Friday, 11 May 2007

  3. இப்ப கொஞ்சம் ஆணி இருக்கு... முடிச்சிட்டு வந்து கதையை படிச்சி அடுத்த பாகத்தை சீக்கிரம் எழுதறேன்... இந்த விளையாட்டு நல்லா இருக்கு :-)

    கூறுவது: வெட்டிப்பயல் | Friday, 11 May 2007

  4. வாங்க வெட்டி

    நன்றி

    கூறுவது: ☆ சிந்தாநதி | Saturday, 12 May 2007

  5. சிந்தாநதி,
    கதையை நாளைக்கு போட்டுடறேன்... தாமதத்திற்கு மன்னிக்கவும்...

    கூறுவது: வெட்டிப்பயல் | Monday, 14 May 2007

  6. அத்தியாயம் 2

    http://vettipaiyal.blogspot.com/2007/05/2_14.html

    கூறுவது: ☆ சிந்தாநதி | Tuesday, 15 May 2007

  7. story is good

    கூறுவது: T. Karuppudurai | Wednesday, 16 May 2007

  8. Nalla Muyarchi, got interested to read the next part

    கூறுவது: deepa | Friday, 18 May 2007

  9. T. Karuppudurai , deepa வாங்க

    கூறுவது: ☆ சிந்தாநதி | Friday, 18 May 2007

  10. அத்தியாயம் 3

    http://cvrintamil.blogspot.com/2007/05/3.html

    கூறுவது: ☆ சிந்தாநதி | Friday, 18 May 2007

  11. Super muyarchi..Hats off...

    Kadhai superaa aaramichirukeenga..Adhuthu ezhudhura ellarum superaa eduthuttu poirukaanga..Next Imsai epdi eduthutu poavaanganu paarkalaam...

    கூறுவது: Raji | Monday, 21 May 2007

  12. அத்தியாயம் 4

    http://veyililmazai.blogspot.com/2007/05/4.html

    கூறுவது: ☆ சிந்தாநதி | Monday, 21 May 2007

  13. ===edited=======

    செல்லடியான்

    உங்கள் கச்சேரியை வேறு எங்காவது வைத்துக் கொள்ளவும். இது அதற்கான இடமல்ல.

    =============

    கூறுவது: செல்லடியான் | Thursday, 24 May 2007

  14. அத்தியாயம் 5

    http://imsaiarasi.blogspot.com/2007/05/5.html

    கூறுவது: ☆ சிந்தாநதி | Thursday, 24 May 2007

  15. அத்தியாயம் 6

    http://raamcm.blogspot.com/2007/05/6.html

    கூறுவது: ☆ சிந்தாநதி | Wednesday, 30 May 2007

  16. story super

    கூறுவது: Nishanthi praba | Friday, 16 May 2008

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)