☜ ❒ பஸ்ஸை கொளுத்துவோம் வாங்க! | H | ❒ வட்டாரத் தமிழில் நூல்கள் கூடாது-அன்பழகன் ☞
Monday, 07 May 2007
❒ தமிழ்மணத்தில் அதிரடி
தமிழ்மணம் தனது முகப்புப் பக்கத்தில் சில அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஒன்று முதல் 40 பின்னூட்டங்கள் வரை பெற்ற பதிவுகள், 40க்குமேல் பெற்ற பதிவுகள், அனைத்தும் என மூன்று பிரிவுகள் தவிர கீழே வழக்கம் போல கடந்த 24 மணி நேரத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகள் சுட்டியும் இருக்கிறது.
இன்று கண்ட புதிய மாற்றம் சூடான பதிவுகள் இன்று, இந்த வாரம். மாற்றங்கள் பயனுள்ளவை. வாழ்த்துக்கள்.
-oOo-
அன்புடன் குழுமம் தனது ஆண்டு விழாவை ஒட்டி மாபெரும் கவிதைப்போட்டியை நடத்தி முடித்துள்ளது. இதே சமயம் வலைப்பதிவுகளில் இன்னும் சில முக்கியமான போட்டிகள் பதிவர்களின் பங்கெடுப்புக் காக காத்திருக்கின்றன.
மலைநாடான் நண்பர்களும் கானம் கலைக்கூடமும் இணைந்து நடத்தும் குறும்படப் போட்டி!
ஒரு நிமிடத்துக்கு மேற்படாத சிறிய குறும்படங்கள், கைத்தொலைபேசியில் கூட எடுக்க வல்ல எளிய குறும்படங்களுக்கான போட்டி இது.
குறும்படப்போட்டி - அறிவிப்பு
இப்போட்டிக் கான கடைசி தேதி 30.5.2007 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
குறும்படப்போட்டி - மீள் அறிவிப்பு
மேலும் இப்போட்டியில் கலந்துகொள்வதற்கான தொழில்நுட்ப விளக்கங்கள் எளிய முறையில் எடிட் செய்யும் வழிமுறைகள் இங்கே விளக்கப் பட்டுள்ளன.
என்ன பண்ணலாம்? எப்படிச் செய்யலாம்?
வலைப்பதிவுகளுக்கு அப்பாலும் பலர் கலந்து கொள்ள இருக்கும் இப்போட்டியில் தமிழ்வலைப்பதிவர்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பு.
-oOo-
சற்றுமுன் [satrumun.com] வலைப்பதிவு செய்தித்தளம் ஆயிரமாவது பதிவை நூறு நாட்களுக்குள் எட்டிப் பிடிக்க இருக்கும் சாதனைக்காக சற்றுமுன் 1000 செய்தி விமர்சனப் போட்டியை நடத்த இருக்கிறது. சுமார் 25000 ரூபாய் மதிப்பீட்டில் 50க்கும் மேற்பட்ட பரிசுகள் திட்டமிடப் பட்டு வருகின்றன. முழுவிவரம் விரைவில் அறிவிக்கப் படும். அனைவரும் கலந்து கொண்டு செய்தி விமர்சனக் கட்டுரைகள் வரையலாம்.
'சற்றுமுன் 1000' மாபெரும் போட்டி
-oOo-
விடை தேடும் வினா புத்தகப் பரிசுப் போட்டிகளில் காதல் கவிதைப் போட்டி இப்போது நடைபெற்று வருகிறது. கடைசி தேதி 10.5.2007
வலைப்பதிவுலக கவிஞர்கள் காதல் கவிதைகள் வரைந்து போட்டியில் பங்கேற்க அழைக்கிறோம்.
காதல் கவிதைப் போட்டி
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
16:00 Posted in இணையம் | Permalink | Comments (10) | Email this
| Tags: போட்டி, பரிசு |
del.icio.us
|
|
Digg
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
இன்று மாலை இந்திய நேரப்படி 5:30லிருந்து தமிழ்மணம் சரிவர டெல்லியில் தெரியவில்லை. இதன் மூலம் மற்ற பதிவுகளும் பார்த்தல், படித்தல், கும்மியடித்தல் சிரமமாயுள்ளது..
மற்ற இடங்களில் நிலவரத்தை தெரியப்படுத்தவும் :)
டெல்லியிலிருந்து
சென்ஷிகூறுவது: சென்ஷி | Monday, 07 May 2007
-
பல மணிநேரம் எனக்கும் தெரியாமல் இருந்தது. இப்போது சரியாகி விட்டது போல தோன்றுகிறது...
கூறுவது: ☆ சிந்தாநதி | Monday, 07 May 2007
-
எங்களுக்கும் அதே நேரம் தெரியாதுதான் இருந்தது. குறும்படப்போட்டி குறித்த அறிவிப்பு மிக்க நன்றி சிந்தா!
கூறுவது: மலைநாடான் | Monday, 07 May 2007
-
இன்று மாலை யு ஏ இ நேரப்படி 3:30 லிருந்து தமிழ்மணம் சரிவர டெல்லியில் தெரியவில்லை. இதன் மூலம் மற்ற பதிவுகளும் பார்த்தல், படித்தல், கும்மியடித்தல் சிரமமாயுள்ளது..
மற்ற இடங்களில் நிலவரத்தை தெரியப்படுத்தவும் ....கூறுவது: மின்னுது மின்னல் | Monday, 07 May 2007
-
யு ஏ இ நேரப்படி???? டில்லியில்???
கூறுவது: ☆ சிந்தாநதி | Tuesday, 08 May 2007
-
//யு ஏ இ நேரப்படி???? டில்லியில்???//
அதானே.. என்ன கொடுமை இது? :)கூறுவது: சென்ஷி | Tuesday, 08 May 2007
-
சற்றுமுன் 1000ஆவது பதிவு வெளியாகி உள்ளது. அதில் விமர்சனப் போட்டி தொடர்பான விவரங்கள் உள்ளன.
http://satrumun.blogspot.com/2007/05/1000_08.htmlகூறுவது: ☆ சிந்தாநதி | Tuesday, 08 May 2007
-
நன்றி சிந்தாநதி. அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் சென்ற மாதம் வந்துவிட்டன. அனைத்து முடிவுகளையும் இந்தப் பக்கங்களில் காணலாம்.
கூறுவது: சேதுக்கரசி | Monday, 25 June 2007
-
அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் சென்ற மாதம் வந்துவிட்டன. அனைத்து முடிவுகளையும் இங்கே காணலாம்:
http://groups.google.com/group/anbudan/t/e650dc047b23dadd/f2f20165b94c42adகூறுவது: சேதுக்கரசி | Monday, 25 June 2007
-
http://tamiltalk.blogspot.com/2007/04/blog-post_30.html
கூறுவது: சேதுக்கரசி | Wednesday, 11 July 2007
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



