☜ ❒ பெண்ணைப் பூட்டி வை! | H | ❒ இலவசமாக விண்டோஸ் விஸ்டா! ☞
Sunday, 11 March 2007
❒ மாணவியை ஆசிரியர் காதலிக்கலாமா?
மாணவியை ஆசிரியர் காதலிப்பது குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
புதுடெல்லி, மார்ச். 11-
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஓம்கர்பிரசாத்வர்மா. 7-ம் வகுப்பு மாணவியை மிரட்டி கற்பழித்ததாக இவர் மீது புகார் கூறப்பட்டது. இதில் அந்த மாணவி கர்ப்பம் ஆனார். பின்னர் கருக்கலைப்பு செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆசிரியர் வர்மா மீது 1997-ம் ஆண்டு போலீசில் புகார் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் ஆசிரியர் வர்மாவுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதிக்கப்பட்டது. கற்பழிப்பு வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டார். தனது ஊழியர் என்ற முறையில் மிரட்டி அடிபணிய வைத்த வழக்கில் அவருக்கு விதிக்கப் பட்டது.
இதை எதிர்த்து ஆசிரியர் வர்மா மத்திய பிரதேச ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடிஆனது. இதை தொடர்ந்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய் தார்.
இந்த வழக்கில் அளித்த தீர்ப்பில் மாணவியை ஆசிரியர் காதலிப்பது குற்ற மாகாது என்று நீதிபதிகள் சின்கா, மார்க்கண்டேகட்சு கருத்து தெரிவித்து உள்ளனர். நீதிபதி கள் தீர்ப்பு வருமாறு:-
குற்றச்சாட்டு கூறிய அந்த மாணவிக்கு 1996-ம் ஆண்டு 18 வயது என்பது நிரூபணமாகி உள்ளது. இருவருக்கும் இடையே நடந்த உடல்உறவு பள்ளிக்கு வெளியே நடந்தது. ஆசிரியரின் கட்டுப்பாட்டில் அந்த மாணவி இல்லை. மாணவி விருப்பப்பட்டுதான் ஆசிரியரிடம் காதல் வயப்பட்டு இருந்திருக்கிறார். மாணவி-ஆசிரியர் இடையே யான உடல்உறவு கற்பழிப்பு அல்ல.
மாணவியை ஆசிரியர் காதலிப்பது குற்றமாகாது. ஆனால் அதற்காக ஆசிரியர் தனக்குள்ள அதிகாரத்தை தவறாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது அர்த்தமல்ல.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளார்.
செய்தி: மாலைமலர்.
-oOo-
வினோதமாக இருக்கிறது இந்த வழக்கு.!!!
ஏழாம் வகுப்பு மாணவி என்று முதலில் குறிப்பிடப் பட்டிருப்பதற்கும் 18 வயது என்பதும் குழப்பமாக இல்லை?
எப்படியும் பள்ளியில் படிக்கும் மாணவி எனில் அந்த ஆசிரியர் நல்லவராக இருந்திருக்க முடியாது. கல்லூரி என்றால் ஓகே என்று சொல்லலாம். இது இன்னொரு சமூகச் சீரழிவாகத்தான் காண முடிகிறது. இதில் காதல் என்பது இருப்பதாக உணர முடியவில்லை. உடற்கவர்ச்சியைப் பயன்படுத்தி ஆசிரியர் அந்த மாணவியை மயக்கி இருப்பதாகத்தான் உணர முடிகிறது. (உண்மையிலேயே பெண்ணுக்கு 18 வயது எனில் கொஞ்சம் முதிர்வு இருப்பதாக கருதலாமோ?)
மற்றபடி மாணவியை ஆசிரியர் காதலிக்கலாமா? என்பதில் பெரிய முக்கியத்துவம் இல்லை. முன்னாள் மாணவியை, அல்லது கல்லூரி மாணவியை, தனிப்பயிற்சி, தட்டச்சு பயிற்சி மாணவியை ஆசிரியர் காதலிப்பதும் கல்யாணம் செய்வதும் இப்போது சகஜமான விஷயம். பல இடங்களில் நடக்கிற விஷயம் தான்.
ஆனால் இங்கே வழக்கும் வழக்கில் வழங்கப் பட்டிருக்கும் தீர்ப்பும் வேறு வகையானது.
பெண்ணின் சம்மதத்தோடு நடந்த உறவை பின்னர் கற்பழிப்பாக சொல்ல முடியுமா? என்ற கேள்விக்கு "முடியாது!" என்ற பதிலை இந்த தீர்ப்பு தந்திருப்பதாக கருதலாம்.
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
17:35 Posted in விமர்சனம் | Permalink | Comments (5) | Email this
| Tags: தமிழ்ப்பதிவுகள் |
del.icio.us
|
|
Digg
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
தமிழ்மணத்தில் என்ன குழப்பம் என்று தெரியவில்லை. பதிவுகள் தெரிய வெகு நேரமிகிறது. மறுமொழிகளும் மிகத் தாமதமாகவே திரட்ட ஆரம்பிக்கிறது.
இன்றைய பரிசுப் போட்டி இங்கே
http://tamiltalk.blogspot.com/2007/03/blog-post_12.html
இதை இட்டு, தமிழ்மணத்தில் இணைத்து அரை மணி நேரமாகிறது. இது வரை திரட்டப் பட காணவில்லை.கூறுவது: ☆ சிந்தாநதி | Monday, 12 March 2007
-
நான் தமிலில் கண்ட முதல் வலைப்பக்கம் இது.
தமிழ் இனி மெல்லச்சாகும் என்ற கவிஞனின் கூற்று மாறியதற்க்கு மகிழ்ச்சி....கூறுவது: ராஜா | Thursday, 21 August 2008
-
aina kodama sir edu........
கூறுவது: kumaran | Saturday, 12 September 2009
-
aina kodama sir edu........
கூறுவது: kumaran | Saturday, 12 September 2009
-
aina kodama sir edu........
கூறுவது: kumaran | Saturday, 12 September 2009
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



