❒ ஏழைரதத்தில் ஏசி | H | ❒ மூக்குத்தி அணிய தடை

Wednesday, 21 February 2007

❒ பசுக்களைக் கொல்லலாமா?

Image and video hosting by TinyPic*பஸ்ஸை எரித்த பகத்சிங்குகள்

*மரண தண்டனைக்கு எதிராக...

என் கருத்து என்னவென்றால் அப்சலும் சரி தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகளும் சரி இப்போதைய நொய்டா கொலையாளிகளும் சரி அவர்கள் மனிதாபிமான மன்னிப்புகளைப் பெற தகுதியற்றவர்கள் என்பதால் மரண தண்டனை நிறைவேற்றப் பட வேண்டும். மனிதாபிமானம் என்பது வேறு. மிருகத்தனங்களுக்கு மனிதாபிமானம் பதிலாகவோ தீர்வாகவோ இருக்க முடியாது. அவர்கள் மீது மனிதாபிமானம் பேசும்போது பாதிக்கப் பட்டவர்கள் மீதான மனிதாபிமானத்தை மறந்துவிடுகிறோம், அல்லது மறைத்து விடுகிறோம் . இதை பழிக்குப் பழி என்று சொல்வது அபத்தம். மன்னிப்புகள் வழங்கப்பட சில நியாயங்கள் அவசியம் வேண்டும்.

பசுவைக் கொல்வது பாவம் என்று எண்ணுபவர்கள் கூட ஏற்கும் விஷயம் தன்னைக் கொல்ல வரும் பசுவையும் கொல்லலாம் என்பது.

மரண தண்டனை கூடாது என்பவர்கள் தன்னைக் கொல்லவரும் சக மனிதனை என்ன செய்வார்கள் என்று முதலில் சொல்லட்டும். பாதிக்கப் பட்டவர்கள் பிறராக இருக்கும் போது மனிதாபிமானம் பேசுவது எளிதாகத்தான் இருக்கும். பசுவையே கொல்லலாம் எனும்போது கொடிய மிருகங்களை கொன்றுதான் ஆக வேண்டும். இது வெறும் தண்டனை அல்ல. அவர்கள் திருந்தி வாழ அவசியமும் இல்லை. இது மற்றவர்களுக்கான பாடமாகத்தான் இருக்க வேண்டும். அரசியல் வாதிகளுக்காக வேண்டி அப்பாவி மாணவிகளைக் கொளுத்துவதற்கு முன் இனி யோசிப்பார்கள்.

அவர்களின் குடும்பம் பற்றி நாம் யோசித்து பயன் இல்லை. அந்த மாணவிகள் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால்? என்று அவர்கள் யோசிக்காததால் விளைந்ததுதானே இது?

அப்சலை உடனே கொல்ல வேண்டும் என்றவர்களுக்கும் சரி, அப்சலுக்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்றவர்களுக்கும் சரி அதன்பின்னுள்ள அரசியல் வேறு. அப்சல் குற்றவாளி என்று நிரூபிக்கப் பட்டு தண்டனை தீர்மானிக்கப் பட்டுள்ளது. அதை முறைப்படி செயல்படுத்த நீதிமன்றத்திற்கும், கருணைமனுமீது குடியரசுத் தலைவருக்கும் உரிமை உண்டு. அதை எந்த விதத்திலும் நிர்ப்பந்தப் படுத்துவது முட்டாள்தனம்.

நாய்களைக் கொல்லக் கூடாது என்று தடுக்கப் படுவது பற்றி நண்பர் செல்லா ஒரு பதிவு இட்டிருந்தார். அதில் அவர்

"நானும் ஒரு வதை தடுப்பு ஆர்வலனாக இருந்தாலும் அவர்களின் வாதம் மிக மிக ஞாயமாகப் பட்டது! காரில் ஊர்சுற்றும் இந்த டாம்பீக மினுக்கிகளுக்கு ரோட்டோரம் வாழும், விளையாடும் குழந்தைகளின் மரணபயம், ஆபத்து எங்கே புரியப் போகிறது?"


என்று கேட்டிருப்பார். அது போல தனிப்பட்ட முறையில் நானும் மரண தண்டனையை ஆதரிக்க வில்லைதான். ஆனால் இது போன்ற சூழல்களில் ஆதரித்து தான் ஆக வேண்டியிருக்கிறது.


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

11:15 Posted in அரசியல் | Permalink | Comments (4) | Email this | Tags: தமிழ்ப்பதிவுகள் |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. மரண தண்டனை மனிதர்களுக்குத் தான் கூடாது
    இவர்களுக்கு சரியானது தான். அரசியல் மூலம் போக்கிரிதனம் செய்பவர்களுக்கு இது சரியான பாடம்.

    கூறுவது: baskran | Wednesday, 21 February 2007

  2. baskran வாங்க

    மனித்த்தன்மை இழந்த மிருகங்கள் இவர்கள்.

    கூறுவது: சிந்தாநதி | Wednesday, 21 February 2007

  3. சிந்தாநதி,

    முன்பொருமுறை சினிமா கழிசடை ரஜினியை நான் எழுதிய பொழுது அதை இந்தளவுக்கு நுன்னோக்கி பார்க்க விரும்பவில்லை என்று நீங்கள் விவாதத்திலிருந்து விலகிக் கொண்டீர்கள். இது போல விசயங்களை மேம்போக்காக பார்க்கும் அபாயம் இந்த பதிவிலும் வேலை செய்கிறது.

    அப்சல், நொய்டா, தர்ம்புரி இவையெல்லாம் ஒன்றா?

    அரசை எதிர்ப்பவரெல்லாம் கெட்டவர் என்றால் சமூக விடுதலை கோருபவர் எல்லாம் துரோகிகளே.

    அன்றைக்கும் இந்திய பாரளுமன்றத்தில் தேர்தல் நடத்தி நம்மவர்களே ஆட்சி செய்தனர். ஆயினும் பகத்சிங் போராளி.

    இதன் அர்த்தம் அபசலும் பகத்தும் ஒன்று என்று சொல்வதல்ல. மாறாக அவர்கள் இருவரிடம் அரசு எதிர்ப்பு அரசியல் என்ற அம்சத்தில் உள்ள ஒற்றுமையை சுட்டிக் காட்டவே இந்த ஒப்பீடு.

    செல்வனின் அடியொற்றி சேறு பூசுபவர்கள்(உங்களையும் செர்த்துதான்) குறைந்த பட்சம் தர்மபுரியின் பன்றிகளையும் நொய்டா நாயையும் இயக்கிய உளவியல்/அரசியலும், அப்சலை இயக்கிய உளவியல்/அரசியலும் ஒன்றா என்பதைக் கூட பரிசீலிக்க தாயாரில்லையே ஏன்?

    மனிதாபிமானம் என்ற ஒற்றை வார்த்தையை பதிவின் சில பகுதிகளில் தூவுவதில் நமக்கு என்ன சேதாரம் வந்துவிடப் போகிறது என்ற எண்ணமும். மாறாக, உண்மைகளை அகழ்வாராய்ச்சி செய்யும் பொழுது ஏற்ப்படும் பொறுப்புகள் அப்சல் விசயத்தில் பூதகரமாக முன் நிற்பதும் கூட இது போன்ற அரைகுறை கருத்து சவாடல்களை வெளியிட காரணமாக இருக்கலாம்.

    இவை ஏதோ சில அல்ப பொழுது போக்கு அம்சங்களாக இருக்கும் ப்ட்சத்தில் நாம் கண்டு கொள்ள எதுமில்லை. மாறாக, இந்திய அரசின் பாசிசத்தை இம்மியள்வும் விமர்சனம் செய்யாமல் அதன் விளைவுகளை மட்டும் பேசும் நாகரிகம்ற்ற நச்சு சூழல் எந்தவொரு ஜனநாயக சக்திகளுக்கும் ஏற்புடையதல்ல.

    http://poar-parai.blogspot.com/2006/10/blog-post_19.html

    அசுரன்

    கூறுவது: அசுரன் | Thursday, 01 March 2007

  4. அசுரன்

    உங்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன்.

    ஆனால் உங்கள் அரசியலையே நானும் ஏற்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வது சரியல்லவே.

    அப்சல் விவகாரத்தில் என்னால் உங்களோடும் சரி உங்களுக்கு எதிர்நினையில் விவாதிப்பவர்களோடும் சரி என்னால் உடன் பட முடியவில்லை.

    அப்சல் தீவிரவாதியா? எந்த வகையில் தீவிரவாதி? தீவிரவாதிகளெல்லாம் குற்றவாளிகளா? என்ற மாற்று அரசியல் குறித்து அறியாதவனோ அதை எதிர்ப்பவனோ அல்ல நான்.

    ஆனால் தீர்ப்பளிக்கப் பட்ட குற்றவாளி பற்றி இனவாத அரசியல் காரணமாக உடனே அவனைக் கொல்ல வேண்டும் என்று ஆவேசப் படுகிறவர்கள் பற்றி என்ன உணர்வு தோன்றுகிறதோ அதே உணர்வுதான் இப்போது அப்சல் நிரபராதி என்பதாகவோ, அப்சல் மற்றும் கூட்டாளிகள் செய்தது குற்றமல்ல என்பதாகவோ சொல்லப் படுவதைக் கேட்கும் போது எனக்கு உருவாகிறது. அதற்கான என் உரிமை மீது கேள்வி எழுப்ப மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

    நீதித்துறை மீது குறைந்த பட்ச மரியாதை எனக்கு இருக்கிறது. நீதித்துறை தீப்புகள் 100 சதவீத உண்மைகள் என்று சொல்ல வரவில்லை. ஆனாலும் தீர்ப்புகள் மதிக்கப் பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். அதனால் அப்சல் இன்று தண்டிக்கப் பட்ட குற்றவாளி. தர்மபுரி குற்றவாளிகள் பற்றி சொல்லவே தேவையில்லை. நொய்டா குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப் படாவிட்டாலும் அந்தக் குற்றவாளிகள் (அவர்கள் யாராக இருந்தாலும்) மன்னிக்கப் பட வேண்டியவர்கள் அல்ல.

    கூறுவது: ☆ சிந்தாநதி | Thursday, 01 March 2007

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)