❒ மாநகராட்சியில் திமுக! | H | ❒ பின்னணியில் படம் போடுதல்

Friday, 09 February 2007

❒ ஆபாச எஸ்எம்எஸ்

ஆபாச புத்தி கணவருக்கு மனைவி கொடுத்த ஷாக்!

பிப்ரவரி 09, 2007

சென்னை: பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்புவதை நிறுத்திக் கொள்ளாத கணவருக்கு, அவரது வழியிலேயே போய் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் மனைவி.

சென்னை சௌகார்பேட்டையை சேர்ந்தவர் அஜய் (வயது 28). ஜவுளிகடை வைத்துள்ளார். இவருக்கு நிறைய பெண் தோழிகள் உண்டு. அவர்களுடன் மணிக்கணக்கில் போனில் பேசுவார், ஆபாச எஸ்.எம்.எஸ்.களை அனுப்புவார். அவர்களும் பதிலுக்கு அனுப்புவார்கள்.

இவற்றை தனது மனைவி கவிதாவிடமும் சொல்லி மகிழ்ந்திருக்கிறார். இது கவிதாவுக்குப் பிடிக்கவில்லை. இதை விட்டு விடுமாறு அவர் கூறியும் கேட்கவில்லை அஜய்.

இந்த நிலையில், கவிதாவின் செல்போனுக்கும் சில கிளுகிளு எஸ்.எம்.எஸ்கள் வந்துள்ளன. இதை தனது கணவனிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். ஆனால் அஜய்யோ, மனைவி வேறு யாருடனோ தொடர்பு வைத்துள்ளார் என்று சந்தேகப்பட்டார்.

மனைவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். வருவதாக போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸ் விசாரணையில், கவிதாவுக்கு எஸ்எம்எஸ் வரும் செல்போனின் சிம் கார்ட் தவறான முகவரி கொடுத்து வாங்கப்பட்டிருப்பது தெரிந்தது.

மேலும் தீவிரமாக விசாரித்ததில் அஜய்யின் ஜவுளிக் கடையில் வேலை செய்யும் செல்வக்குமார்தான் அந்த எஸ்.எம்.எஸ் களை அனுப்பியது தெரிய வந்தது.

அவரிடம் விசாரித்தப்போது, அஜய்யின் மனைவிதான் இதுபோல எஸ்.எம்.எஸ் அனுப்பச் சொன்னதாகவும், செல்போன் சிம்கார்டு வாங்கி கொடுத்ததாகவும் கூறியதை கேட்ட போலீஸாரும், அஜய்யும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து கவிதாவிடம் போலீசார் விசாரித்தபோது, அஜய் பல பெண்களுடன் பேசுவதும், ஜொள்ளு விடுவதும் பிடிக்கவில்லை. அவரைத் திருத்த, முள்ளை முள்ளால் எடுப்பது போல இப்படி செய்ததாக கூறினார்.

இவர்களின் விளையாட்டால் கடுப்பான போலீஸார் இருவரையும் கடுமையாக எச்சரித்தனர். மேலும், செல்வகுமார் மீது வேலை பார்க்கும் இடத்தில் தவறாக நடந்து கொண்டதாகவும், பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

கடைசியில் புருஷன், பொண்டாட்டி சண்டையில், அப்பாவி செல்வக்குமாரும் சிக்கி சிறைக்குப் போயுள்ளார்.

-oOo-

செய்தி : தட்ஸ்தமிழ்


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

15:50 Posted in வாழ்வியல் | Permalink | Comments (1) | Email this | Tags: sms, crime |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. இதே செய்தி, அனானி ஈ.மெயில் அனுப்பரவனை வைத்து கூடிய விரைவில் வரும் பாருங்க.

    கூறுவது: BadNewsIndia | Friday, 09 February 2007

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)