☜ ❒ கனிமொழியின் கோபம் | H | ❒ மும்தாஜிடம் கால்ஷீட் கேட்கும் கடவுள் ☞
Wednesday, 07 February 2007
❒ ஜெயகாந்தனும் கலைஞர் விருதும்
சமீபத்தில் ஜெயகாந்தனுக்கு முரசொலி அறக்கட்டளையின் கலைஞர் விருதை கருணாநிதி வழங்கினார். ஜெயகாந்தனைப் போன்ற சிறந்த எழுத்தாளர் ஒருவர் அந்த விருதைப் பெற்றதில் எந்த ஆச்சரியமும் இல்லை தான்.
ஆச்சரியங்கள் ஜெயகாந்தனிடம் தான் இருக்கிறது.
சாகித்ய அகாடமி விருது அவருக்குக் கிடைத்த போது அவர் சொன்னது "எனக்கு விருது கொடுத்ததன் மூலம் சாகித்ய அகாடமி தன்னைப் பெருமைப் படுத்திக் கொண்டது"
ஞானபீடம் வழங்கப் பட்டபோது "ஞானபீடத்திற்கே ஞானபீடமா?" என்று கேட்டவர் அவர்.
மேடை தோறும் திமுகவை எதிர்த்து முழங்கியவர் ஜெயகாந்தன். அவர் சார்ந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் கூட்டணி கண்டபோது அப்போது எதிர் அணியில் இருந்த காங்கிரஸ் மேடையில் ஏறி திமுகவை கிழித்தார்.
"பதவி, பட்டம், வெகுமதி செல்வம் இவை தேடாமலும் வரும். வருவதையெல்லாம் நான் அங்கீகரிக்க மாட்டேன். எனது எல்லைகளை கறாராக தீர்மானித்தே ஏற்பேன்" என்று ஒருமுறை எழுதியிருக்கிறார்.
கருணாநிதியிடம் கலைஞர் விருது பெற்ற போது ஜெயகாந்தன் கூறினார்.
"நிறைய விருதுகளை நான் பெற்றிருக்கிறேன். நான் அறிந்தவரை இதுதான் மிகவும் சிறப்பான விருது என்று நான் கருதுகிறேன்."
கம்பீரமாக உலாவந்த எழுத்துலக சிங்கம் தன் எழுத்தை சில காலம் நிறுத்தி வைத்திருந்தது. அது மீண்டும் எழுதத் தொடங்கிய போது அது கிழச்சிங்கம் என்பதை உலகுக்கு உணர்த்தியது.
இப்போது மீண்டும் தன் சொல்லாலும் செயலாலும் சிங்கம் சிறிது சிறிதாக உருமாறி சிறுநரியாகி வருவதை உணர்த்தி விட்டார்.
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
11:20 Posted in இலக்கியம் | Permalink | Comments (23) | Email this
| Tags: jayakanthan, kalaignar, தமிழ்ப்பதிவுகள், tamilblogs |
del.icio.us
|
|
Digg
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
சிந்தா!
'' ஒரு சிங்கம் நரியாகிறது '' எனத் தலைப்பிட்டிருக்கலாமோ?:)கூறுவது: மலைநாடான் | Wednesday, 07 February 2007
-
மலைநாடான் வாங்க
முதலில் அப்படித்தான் எழுதி வைத்தேன். அப்புறமா ஏதாவது கதை என்று நினைக்கப் படும் அபாயம் இருப்பதால் மாற்றி வைத்தேன். இதைப் பார்த்தால் மக்கள்சுக்கு ஏதோ வம்புன்னு நல்லாவே புரியுமே? (கதை படிக்கிற ஆர்வம் இங்க அவ்வளவு தான் இருக்கு?)கூறுவது: சிந்தாநதி | Wednesday, 07 February 2007
-
ஜோதிகாவின் சோகம் அப்படின்னு தலைப்பிட வேண்டிய பதிவுக்கு கனிமொழியின் கோபம்னு தப்பா தலைப்பு போட்டுட்டேன்னு வேற ரொம்ப கடுப்பாயிடுச்சு...
கூறுவது: சிந்தாநதி | Wednesday, 07 February 2007
-
எதோ தெரியாதுங்க! சிங்கமெல்லாம் சிறு நரியாகத்தான் ஆகிறது.
அது கலைஞர் வீட்டில் பாவா வந்தாலும் ஒன்று தான் ;பாபாவிடம் கலைஞர் பணம் வாங்கினாலும் ஒன்று தான்.
இதெல்லாம் சாதாரணனவர்கள் செய்தால் தான் !மொள்ளை மாறித் தனம் என்பாங்க!!
குருக்கள் விட்டதால்.....மழுக்கடிக்கிறார்கள்.
ஏதோ நடக்கட்டும் நாடகம்!!
யோகன் பாரிஸ்கூறுவது: johan -paris | Wednesday, 07 February 2007
-
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என புரியவில்லை. ஜெயகாந்தன் முரசொலி விருதையும் மறுத்திருக்க வேண்டுமா?
ஞானபீடம் மற்றும் சாகித்திய அகாடமி தேர்வு முறைகளில் ஜெயகாந்தனுக்கு அவ்வளவு திருப்தி இல்லாமல் இருந்திருக்கலாம். முரசொலி விருது தேர்வுமுறையில் திருப்தியடைந்திருக்கலாம்.
எப்படியென்றாலும் எனக்கு ஜெயகாந்தனின் கதைகளைத் தவிர தனிப்பட்ட முறையில் அவர் மீது எந்த நல்ல அபிப்பிராயமும் கிடையாது :-)கூறுவது: லக்கிலுக் | Wednesday, 07 February 2007
-
//ஜோதிகாவின் சோகம் அப்படின்னு தலைப்பிட வேண்டிய பதிவுக்கு கனிமொழியின் கோபம்னு தப்பா தலைப்பு போட்டுட்டேன்னு வேற ரொம்ப கடுப்பாயிடுச்சு...//
இலலீங்க.. தலைப்பு சரிதான். ஒரு நடிகை கல்யாணமாயிடுச்சுன்னு சொல்லி நடிக்கிறத நிறுத்துறாங்க. காரணம் அநாவசிய வதந்திகள் வரக்கூடாதுன்னு....
இதே ஆணுக்கு நிலையில்லா இன்பம்...வதந்திகள் வந்தால்தான் மக்கள் அவனை நினைப்பாங்கன்னு நினைப்பு. இவங்க மனசுலல்லாம் படம் பாக்கிறவங்க மடையன்னு நெனைப்பு..
சென்ஷிகூறுவது: சென்ஷி | Wednesday, 07 February 2007
-
johan -paris, லக்கிலுக் வாங்க
//நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என புரியவில்லை. ஜெயகாந்தன் முரசொலி விருதையும் மறுத்திருக்க வேண்டுமா//
இல்லை. அவர் தேவையில்லாமல் அன்றும் இன்றும் உளறிக் கொட்டுகிறார் என்கிறேன்.
//எனக்கு ஜெயகாந்தனின் கதைகளைத் தவிர தனிப்பட்ட முறையில் அவர் மீது எந்த நல்ல அபிப்பிராயமும் கிடையாது //
அதே..அதே..கூறுவது: சிந்தாநதி | Wednesday, 07 February 2007
-
சென்ஷி வாங்க
//தலைப்பு சரிதான்// ஆமா...ஆனா மக்கள்சுக்கு இதைவிட அதுன்னா பிடிச்சிருக்கும்;)கூறுவது: சிந்தாநதி | Wednesday, 07 February 2007
-
யாருக்கும் பணியாத கர்வம் அவரிடம் இருந்தது. அதை ஞானச்செருக்கு என்று அபிமானிகள் அடையாளப் படுத்தினார்கள். காஞ்சியிடம் பணிந்த போது ஆரம்பித்து இப்போது கருணாநிதியிடம் பணிந்த போதும் அந்தக் கர்வத்தையும் அதுவரை கட்டிக்காத்த கம்பீரத்தையும் அவர் தொலைத்து விட்டு ஒரு கோழையாக நிற்கிறார்.
கூறுவது: சிந்தாநதி | Wednesday, 07 February 2007
-
ஜெயகாந்தன் என்றும் காஞ்சியிடம் பணிந்ததில்லை. மடத்திலேயே அவரது முழக்கங்கள் நிறைய. உதாரணத்திற்க்கு ஒன்று, ஒரு முறை அவர் இவ்வாறு கூறினார், "இந்து மதத்தை நீங்கள் காப்பாற்றவில்லை, அதுதான் உங்களை காப்பாற்றியிருக்கிறது". காஞ்சியிடம் ஒரு கரிசினம் உண்டு, அதை மறுப்பதற்க்கில்லை.
கருணாநிதியிடம் அவர் பணிந்து விட்டதாக கூறுவது, சுத்த பேத்தல். இந்த விருது இலக்கிய பணிக்காக வழங்கப்பட்டது. அவர் அரசியல் நிலைபாட்டிற்க்கல்ல. கருணாநிதியிடம் இலக்கிய ரீதியாக உறவு அவருக்கு உண்டு. அதன் நீட்சியே இந்த விருது. பெரியாரின் கொள்ககைகளையும், திமுகவையும் எதிர்த்தது உங்களால் செரிக்க முடியவில்லையென்று நினைக்கிறேன், அதன் விளைவு தான் இந்த புளி ஏப்ப பதிவு.கூறுவது: Hari | Wednesday, 07 February 2007
-
ஜெயகாந்தன் பெரும்பாலும் முரண்பாடுகளுடனேயே அறியப்பட்டுள்ளார். ஆயினும் இன்னும் அவர் என் கவனத்திற்குரிய மனிதராகவே உள்ளார்.
கூறுவது: தங்கவேல் | Wednesday, 07 February 2007
-
ஜெயகாந்தன் சமஸ்கிருதத்தை உயர்த்தியும், தமிழை அதன் கிளை மொழி என்றும் கேவலப்படுத்தியவர்.
அவருக்கு கலைஞர் விருது கொடுத்திருப்பது, தமிழை அவர் அவமானப்படுத்துவது போன்றதாகும்.கூறுவது: தமிழன் | Wednesday, 07 February 2007
-
//முரசொலி விருது தேர்வுமுறையில் திருப்தியடைந்திருக்கலாம்.//
யப்பா...கழகத்தின் கண்மனியே!!!கூறுவது: சீனு | Wednesday, 07 February 2007
-
ஜெயகாந்தன் வாங்கி வைத்துள்ள சொத்து சட்டவிரோதமானது என்று வருமான வரி சோதனை நடத்துவேன், அல்லது அதை இடிக்க வைப்பேன் என்று
திமுகவினர் மிரட்டல் விடுத்திருப்பர். அதுதான் சிங்கம் ஆடிப்போய்விட்டது. இது போன்ற துறைகளை வலியிருத்திப்பெற்றதன் காரணம் புரிகிறதா?
டாடா-வையே மிரட்டியவர்கள் ஆயிற்றே விஜயகாந்த்,ஜெயகாந்தன், சோ எல்லாம் சும்மா!கூறுவது: தமிழன் | Wednesday, 07 February 2007
-
hari, தங்கவேல், சீனு, தமிழன் வாங்க
புளி ஏப்ப பதிவு. ஆகா அழகான வர்ணனை. நன்றி அண்ணா.
சீனு கழகத்தின் கண்மணி கூறியதில் தவறேதுமில்லை. மற்றதெல்லாம் தேர்வுக்குழு? தேர்வு செய்வது. இதற்கு கலைஞரின் இதயத்தில் இடம் கிடைத்தாலே போதுமே... ;)
தமிழன் என்ன இரட்டைக்குரலில் பேசுகிறார். இரண்டு தலையா உங்களுக்கு?கூறுவது: சிந்தாநதி | Wednesday, 07 February 2007
-
என்னங்க போட்டு கிழிசிருப்பீங்கனு நினைச்சா???
:)கூறுவது: Hari | Wednesday, 07 February 2007
-
கிழிக்கிற பக்குவம் இன்னும் கைவரலிங்கண்ணா...
கூறுவது: சிந்தாநதி | Wednesday, 07 February 2007
-
இது வேறு தமிழன்.தமிழைப் பழித்தத் தறுதலைக்கு விருது கொடுத்தது கலைஞரின் "மன்னிப்போம் மறப்போம்" என்ற அறிஞர் அண்ணாவின் வழியாக இருக்கலாம்.அறிஞர் அண்ணா அவர்கள் பல நல்லவர்களைப் பெருமைப் படுத்தினார் அவர்களின் உழைப்பிற்காக.ஆனால் கலைஞர் அவர்கள் பெருங்காய டப்பாவை பெருங்காயமாக ஒருகாலத்தில் இருந்ததற்காகப் பாராட்டியிருக்கிறார்.பலர் பிறப்பால் தமிழனாக இருந்தாலும் பூணூலுக்காக ஏங்கும் கதி தமிழ்நாட்டிலே உள்ளது.ஜெயகாந்தனைப் போன்றோர் இளையராசா,பொள்ளாச்சி மகாலிங்கனார் போன்றோர்.அவர்கள் தமிழுக்குச் செய்த தொண்டிற்கு மதிக்கத்தானே வேண்டியுள்ளது.
கூறுவது: Thamizhan | Thursday, 08 February 2007
-
//யப்பா...கழகத்தின் கண்மனியே!!!
கூறுவது: சீனு | Wednesday, 07 February 2007 //
//பெரியாரின் கொள்ககைகளையும், திமுகவையும் எதிர்த்தது உங்களால் செரிக்க முடியவில்லையென்று நினைக்கிறேன்//
யோவ் சீனு நீ பின்னூட்டம் போடுறதுக்கு முன்னாலேயே ஒனக்கு பதில் கொடுத்துட்டாங்கய்யாகூறுவது: வலைப்பூ சுனாமி லக்கியார் பாசறை | Thursday, 08 February 2007
-
Its easy to comment on somebody. We shouldnt really bother on ones own things.
In a society of 125 crore, and 6-7 crore tamils we have 90-95% leaders above the age of 65. why ?
Precisely because youngsters never involve in the social system. Only criticise, chat , blog and relax . ( include me too)
thanks
balathandayuthamகூறுவது: balathandyutham | Thursday, 08 February 2007
-
/////
//பெரியாரின் கொள்ககைகளையும், திமுகவையும் எதிர்த்தது உங்களால் செரிக்க முடியவில்லையென்று நினைக்கிறேன்//
யோவ் சீனு நீ பின்னூட்டம் போடுறதுக்கு முன்னாலேயே ஒனக்கு பதில் கொடுத்துட்டாங்கய்யா
/////
யெய்யா...நான் இதுலயெல்லாம் வீக்கு (சொல்லப்போனா month-து). புரியர மாதிரி கலாய்ங்கப்பா...கூறுவது: சீனு | Thursday, 08 February 2007
-
balathandyutham வாங்க
உண்மை.கூறுவது: சிந்தாநதி | Thursday, 08 February 2007
-
கம்யூனிசம் பேச மட்டுமே, நல்லா இருக்கும் தோழர்களே ...
கம்யூனிசம் தொண்டர்களுக்குதான் .. தலைவனுக்கில்லை.கூறுவது: கொழுப்பு | Sunday, 25 October 2009
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



