ரோஜா பாணி கடத்தல் | H | போலீசும் இரண்டு இரவுகளும்

Wednesday, 10 January 2007

கல்கி அவதாரம் நான்தான்

Image and video hosting by TinyPicரு துறவியும் சீடனும் போன பாதையில் ஒரு ஆறு குறுக்கிட்டது. இடுப்பளவு நீரில் சிரமப் பட்டு கடக்க வேண்டியிருந்தது. அப்போது அருகில் ஒரு பெண்ணும் ஆற்றைக் கடக்க முயன்று கொண்டிருந்தாள். நீரின் வேகம் அவளை இழுத்துச் செல்ல முயன்றது. அவள் ஒரு நாடறிந்த வேசி.

துறவி சட்டென்று அவளைத் தூக்கி தோளில் வைத்துக் கொண்டு ஆற்றைக் கடந்தார். அவள் நன்றி கூறி போய்விட்டாள். துறவியும் சீடனும் தாங்கள் போகவேண்டிய இடத்துக்கு நடந்தார்கள்.

வெகுதூரம் சென்ற பின் சீடன் சொன்னான் "குருவே நீங்கள் அவளைத் தூக்கியிருக்க வேண்டியதில்லை" என்று. உடனே குரு சொன்னார் "நான் அவளை அங்கேயே இறக்கி விட்டு விட்டேன். நீ இன்னும் (மனதில்) சுமந்து கொண்டிருக்கிறாயா?".

-oOo-

இதுமாதிரி தான் இன்னொரு கதை

ஒரு பூசாரியும், ஒரு வேசியும் இறந்து எமதர்மன் சபைக்கு தீர்ப்புக்காக நின்றார்களாம். முதலில் வேசியின் கணக்கை சித்திர குப்தன் வாசித்தான். இவள் வேசியானாலும் பலருக்கு அன்னதானம் செய்திருக்கிறாள். தன்குடும்பத்தை காப்பாற்றவே இவள் வேசியானாள் என்று சித்திர குப்தன் சொன்னான். "இவள் தவறு செய்தாலும் இவள் செய்த புண்ணியங்கள் இவளுக்கு சொர்க்க பதவியை கொடுக்கின்றன" என்று எமதர்மன் தீர்ப்பளித்தான்.

பூசாரி உடனே மிதப்புடன் இப்பேர்ப்பட்ட வேசிக்கும் நம்மைப்போல சொர்க்கமா என்று பொருமிக் கொண்டு தன் தீர்ப்புக்காக காத்து நின்றான். சித்திர குப்தன் பூசாரியின் கணக்கை வாசித்தான். இவன் கடவுளுக்கு பூசை செய்தாலும் இவன் கவனமெல்லாம் தட்டில் விழும் காசின் மேல்தான். அதிகம் கொடுப்பவருக்கு அதிகநேரம் மந்திரம் சொல்வான் மற்றவரை மதிக்கமாட்டான் என்று சொன்னான். எமதர்மன் உடனே "அந்த வேசி தன் குடும்பத்திற்காக தன் உடலை விற்றாள். இவனோ காசுக்காக கடவுளையே விற்றவன் இவனுக்கு விஷப்பாம்புகள் நிறைந்த கொடிய நரகத்தைக் கொடுப்போம்" என்று தீர்ப்பு சொன்னான்.

-oOo-

பயங்கர கடவுள் பக்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களை விட அதிகமாகவே கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் "கடவுள் இல்லை" என்று சொல்வதற்காகவேனும் எப்போதும் கடவுளையே நினைக்கிறார்களாம்.

-oOo-

நடிகர்களின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம், தேனாபிஷேகம் செய்யும் ரசிகர்கள் ஏன் மற்ற மதச் சடங்குகளைச் செய்வதில்லை என்று குறைப்படுத்தி ஒருவர் ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தார்.

கிறிஸ்தவனோ, முஸ்லிமோ நடிகனை கடவுளுக்கு சமமாக நினைப்பதில்லை. இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை ஓரளவேனும் உணர்ந்திருக்கிறான். இந்து மதம் சொல்வது போல நடிகனும் ஒரு அவதார புருஷன் என்று ரசிகன் நினைக்கிறானோ என்னவோ? நடிகைக்கு கோயில் கட்டி பார்த்திருக்கோம். சர்ச்சோ மசூதியோ கட்டிப் பார்த்திருக்கீங்களா?

-oOo-

பத்தாவது அவதாரம் (கல்கி அவதாரம்) நான்தான் என்று எத்தனை பேர் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள் தெரியுமா?

-oOo-

சிதறல்கள்-3

சிதறல்கள்-2 இங்கே

முன்குறிப்பு

(படத்தில் இருக்கிற பொண்ணோட தொப்புளை யாரும் பார்க்காதீங்கப்பா..!)

பின்குறிப்பு

பாலபாரதியின் யாகவா அவதாரத்துக்கும் இந்தப் பதிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

18:30 Posted in சிதறல்கள் | Permalink | Comments (18) | Email this | Tags: kalki, தமிழ்ப்பதிவுகள் |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. //படத்தில் இருக்கிற பொண்ணோட தொப்புளை யாரும் பார்க்காதீங்கப்பா..!)//

    மருந்து குரங்கு பழமொழி ஞாபகம் வருது !

    //பத்தாவது அவதாரம் (கல்கி அவதாரம்) நான்தான் என்று எத்தனை பேர் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள் தெரியுமா?//

    கம்பிக்கு பின்னால் போகும் வரை அப்படித்தான் சொல்லுவாங்க !

    கூறுவது: கோவி.கண்ணன் | Wednesday, 10 January 2007

  2. //கம்பிக்கு பின்னால் போகும் வரை அப்படித்தான் சொல்லுவாங்க !//

    போன பிறகும் சொல்லுவாங்க...போல இருக்கு நிலமை

    கூறுவது: சிந்தாநதி | Wednesday, 10 January 2007

  3. //இந்து மதம் சொல்வது போல நடிகனும் ஒரு அவதார புருஷன் என்று ரசிகன் நினைக்கிறானோ என்னவோ?//
    அது தான். இந்து மதத்தில் மனிதன் கடவுளாக முடியும். ஒவ்வொரு கிராமத்திற்கு வெளியேயும் இருக்கும் ஊர்க்காவல் தெய்வங்களும் மனிதர்களாக தங்களுக்கு ஏதேனும் நல்லவை செய்திருந்தால் அவற்றை கடவுளாக எண்ணுவதும் உண்டு. அப்படி தான் மனிதன் கடவுளாகிறான். அதே போல, சாதாரண நடிகன், திரையில் தோன்றும் பொழுது அவனுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், ஹீரோயிசம் போன்றவை அவனை கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்துகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.

    கூறுவது: சீனு | Wednesday, 10 January 2007

  4. //படத்தில் இருக்கிற பொண்ணோட தொப்புளை யாரும் பார்க்காதீங்கப்பா..!)//
    ஆவ்வ்வ்வ்....எனக்கு படமே தெரியல...

    கூறுவது: சீனு | Wednesday, 10 January 2007

  5. சீனு வாங்க.

    பட....மே தெ..ரி...யா...ம... வே...ற... எ...ன்..ன..தான் தெ..ரி..யு..து...?

    கூறுவது: சிந்தாநதி | Wednesday, 10 January 2007

  6. //பட....மே தெ..ரி...யா...ம... வே...ற... எ...ன்..ன..தான் தெ..ரி..யு..து...?//
    எங்க தெரியுது? எந்த பக்கத்துல? இங்கன ,எங்க கம்பேனியில அதெல்லாம் பிளாக்ட் :(

    கூறுவது: சீனு | Wednesday, 10 January 2007

  7. சீனு ;-(

    கூறுவது: சிந்தாநதி | Wednesday, 10 January 2007

  8. அந்த படம் super...ஹிஹி:-)

    http://internetbazaar.blogspot.com

    கூறுவது: smg | Wednesday, 10 January 2007

  9. smg வாங்க

    படத்தை மட்டும் தான் பார்த்திருக்கீங்க போல...

    கூறுவது: சிந்தாநதி | Thursday, 11 January 2007

  10. //பாலபாரதியின் யாகவா அவதாரத்துக்கும் இந்தப் பதிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.//
    ஏதோ தொடர்பிருக்குன்னு நெனச்சில்ல வந்தேன்! :)

    கூறுவது: பொன்ஸ் | Thursday, 11 January 2007

  11. //(படத்தில் இருக்கிற பொண்ணோட தொப்புளை யாரும் பார்க்காதீங்கப்பா..!)//

    நான் பாக்கல.

    கூறுவது: நாடோடி | Thursday, 11 January 2007

  12. பொன்ஸ், நாடோடி வாங்க

    ;))

    கூறுவது: சிந்தாநதி | Thursday, 11 January 2007

  13. நல்லாகீது நைனா . . . வெயிட்டான மேட்டர லைட்டா எழுதிக்கீற. அந்த ஸ்டைலு என்கு புட்சிக்குது.

    கூறுவது: r.selvakkumar | Thursday, 11 January 2007

  14. ஐயோ என்ன படம் அது....??? எனக்கு ஒன்னுமே தெரியலையே???


    :-(((

    கூறுவது: இராம் | Thursday, 11 January 2007

  15. .selvakkumar டாங்சுபா

    கூறுவது: சிந்தாநதி | Thursday, 11 January 2007

  16. இராம்

    என்ன கொடுமை ராமா(சரவணன்?) இது?

    பாதிப் பசங்க படம்பார்க்க முடியாத நரகத்திலா இருக்கிறார்கள்.?

    கூறுவது: சிந்தாநதி | Thursday, 11 January 2007

  17. //பாதிப் பசங்க படம்பார்க்க முடியாத நரகத்திலா இருக்கிறார்கள்.?//

    என்னப்பண்ண... கழுதை மேய்க்கிறவனா இருந்தும் கூட நல்ல நல்லதையெல்லாம் பார்க்கமுடியாமே மிஸ் பண்ணிடுறேன், சரி விட்டிலே போய் பார்த்திட்டு திரும்ப வந்து கருத்துச் சொல்லுறேன்.

    (படம் ஏமாத்தாமே இருக்குமில்லே)

    கூறுவது: இராம் | Thursday, 11 January 2007

  18. இவ்வளவு தரம் கேக்குறீங்க.. பெரிசாவே போட்டிருக்கலாமோ?

    கூறுவது: சிந்தாநதி | Thursday, 11 January 2007

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)