செந்தழல்ரவிக்கு நன்றி | H | இணைய அகராதி

Tuesday, 09 January 2007

கூகுள் பேக் மென்பொருட்கள்

கூகுள் நிறுவனம் google pack என்னும் மென்பொருள் தொகுப்பை வெளியிடுகிறது. ஒரே பதிவிறக்கத்தில் பல பயனுள்ள மென்பொருட்களை இதில் பெறலாம்.

இதிலுள்ள மென்பொருட்கள்.

Google Earth
உலகம் உங்கள் உள்ளங்கையில்.
உலக வரைபடம், தெருக்கள், இடங்களை தெளிவாக கண்டறிய உதவுகிறது.

Picasa
கணினியில் படங்களை தேட, தொகுக்க, எடிட் செய்ய உதவுகிறது

Screensaver
புகைப்படங்களை திரைக்காப்புப் படங்களாக பார்க்க உதவுகிறது.

Google Desktop
கணினிக் கோப்புகளை ஒருங்கிணைக்க மற்றும் தொகுக்க உதவுகிறது.

Google Toolbar
கூகுளின் கருவிப் பட்டை

Mozilla Firefox
எல்லோருக்கும் தெரிந்த நெருப்பு நரி

Norton AntiVirus 2005
புகழ்பெற்ற வைரஸ் காப்பு மென்பொருள். இதன் சிறப்புப் பதிப்பு 6 மாத உரிமத்துடன் கிடைக்கிறது.

Ad-Aware SE
உளவு மென்பொருட்களை கண்டு பிடித்து நீக்க உதவுகிறது

Adobe Reader 7
PDF மின்னூல்களைப் படிக்க உதவுவது

இவை இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளவை. இவற்றில் தேவை இல்லாதவற்றை நீக்கியும் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

இவை தவிர,
கீழ்க்கண்டவற்றில் உங்களுக்குத் தேவையானவற்றை பதிவிறக்கு முன் தொகுப்பில் இணைத்துக் கொள்ளலாம்.

Google Talk
இணையத்தில் குரல் வழித் தொடர்பாடல்

RealPlayer
பலதரப்பட்ட இசை மற்றும் வீடியோ இயக்கவும் பிற கருவிகளுக்கு மாற்றவும் உதவும்.

Skype
வீடியோ மற்றும் ஆடியோ சாட்டிங் மென்பொருள்

Google Video Player
வீடியோக்களை இயக்கவும் பதிவிறக்கவும் உதவும்

GalleryPlayer HD Images
ஓவியங்கள், புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு.


கூகுள் பேக் பதிவிறக்க

இடப்புறமுள்ள side-bar ல் Software என்னும் தலைப்பில் உள்ள Get essential PC software with the free Google Pack என்ற சுட்டியில் இந்த கூகுள் பேக்கை பதிவிறக்கலாம்.


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

06:20 Posted in இணையம் | Permalink | Comments (3) | Email this | Tags: google, software |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. Google Toolbar நல்ல பயனுள்ளது.

    http://internetbazaar.blogspot.com

    கூறுவது: smg | Tuesday, 09 January 2007

  2. நன்றி நல்லதொரு பதிவு.

    மேலதிகமாக சில விடயங்கள்.
    Google Desktop நீங்கள் சொன்னதுபோல கணனிக்கோப்புகளை ஒருங்கிணைக்க தேட மட்டுமல்லாது பலதேவைகளுக்கு உதவுகிறது. Gadgets எனும் சிறிய நிரலிகள் மூலம் எங்கள் பலதேவைகளை நிறைவேற்றி கொள்ளலாம். நீங்கள் சொன்னது Google Deskbar இனுடைய பயன் இதுவும் இப்போது Google Desktop உடன் சேர்ந்துவிட்டது. நான் செய்திகள், எனது விருப்ப பதிவுகள், தேடுபொறி, நிழற்பட தொகுப்பு போன்ற Gadget களை பயன்படுத்துகின்றேன்.

    Skype ஒரு vedio மற்றும் ஓடியோ சற்றிங் மென்பொருள் அல்ல. அது ஒரு தொலைத்தொடர்பு சேவையினை வழங்கும் நிறுவனம். நீங்கள் சிறிதளவு பணம் செலுத்துவதன் மூலம் தொலைபேசிகளுக்கே அழைப்புகளை எடுக்கலாம். மற்றும் எங்களால் இதில் ஓடியோ சற்றிங் மட்டுமே செய்யலாம் வீடியோ அல்ல. இப்பொழுது இதனை Ebay கொள்வனவு செய்துவிட்டது. கூகிளில் தொடருமோ தெரியவில்லை.

    Google Talk குரல் வழித்தொடர்பாடலுக்கு மட்டுமல்ல. சாதாரண சற்றிங்குக்கும் பயன்படும். எந்த gmail பயனாளரும் இதனை பயன்படுத்த முடியும்.

    ஊரோடி பகீ

    கூறுவது: ஊரோடி பகீ | Tuesday, 09 January 2007

  3. பகீ

    நான் மென்பொருட்கள் ப்ற்றிய மிகச்சுருக்க விவரங்கள் மட்டுமே பதிந்திருக்கிறேன். விரிவான பயன்பாடுகளை எழுதப்புகுந்தால் நிறைய எழுத வேண்டியிருக்கும்.

    skype நான் பயன்படுத்தியதில்லை. அது பற்றிய குறிப்பில் Voice, video and chat என்றிருப்பதையே குறிப்பிட்டேன்.

    சாதாரண சாற்றிங்குக்கு இப்போது வெறும் ஜிமெயிலே போதுமென்பதால் அதைக்குறிப்பிடவில்லை...Google Talk

    கூறுவது: சிந்தாநதி | Tuesday, 09 January 2007

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)