இணைய அகராதி | H | ரோஜா பாணி கடத்தல்

Tuesday, 09 January 2007

தேர்தல் மன்னன் மரணம்

தேர்தல் மன்னன் 'வயிற்றுக் கட்சி' ரங்கசாமி மரணம்

Image and video hosting by TinyPicகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஹொட்டே பக்ஷா என்ற வயிற்றுக் கட்சியின் (ஹொட்டே என்றால் கன்னடத்தில் வயிறு என்று பொருள், பக்ஷே என்றால் கட்சி) தலைவரும், அதிக தேர்தல்களில் போட்டியிட்டு கின்னஸ் சாதனை படைத்தவருமான ரங்கசாமி மரணமடைந்தார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரங்கசாமி 1967 ம் ஆண்டு அரசியலில் புகுந்தார். ஹொட்டே பக்ஷா கட்சியை ஆரம்பித்தார். அன்று முதல் தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் அவர் போட்டியிட்டு வந்தார். எந்தத் தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றதும் இல்லை, டெபாசிட்டை இழக்கத் தவறியதும் இல்லை.

1967 ல் தனது முதல் நாடாளுமன்றத் தேர்தலில் மறைந்த கர்நாடக முதல்வர் கெங்கல் ஹனுமந்தய்யாவை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்றார். நாடாளுமன்றம் முதல் மாநகராட்சி தேர்தல் வரை எந்தத் தேர்தலையும் அவர் விட்டு வைத்ததில்லை. மொத்தம 86 தேர்தல்களில் போட்டியிட்டு கின்னஸ் சாதனை படைத்தவர் ரங்கசாமி.

சிக்மகளூர் தொகுதியில் 1970 இடைத்தேர்தலில் இந்திராகாந்தியை எதிர்த்துப் போட்டியிட்டதன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். அதன்பிறகு தொடர்ந்து பிரபலங்கள் போட்டியிடும் தோகுதிகளில் போட்டியிட்டு வந்தார். ராஜீவ்காந்தி, மற்றும் நரசிம்மராவை எதிர்த்தும் இவர் போட்டியிட்டதுண்டு.

கடைசியாக 2004 ல் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணாவை எதிர்த்து பெங்களூர் சாம்ராஜபேட் தொகுதியில் போட்டியிட்டிருந்தார்.

தேர்தல் மட்டுமல்லாமல் தொடர் பொதுநல மனுக்கள் அனுப்புவதிலும் புகழ்பெற்றிருந்த ரங்கசாமி எப்போதும் கையில் ஒரு திரிசூலம் ஏந்தியபடியே காட்சியளிப்பார்.

74 வயதான ரங்கசாமி கடந்த சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவர் பெங்களூரில் மரணமடைந்தார். அவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

16:20 Posted in அரசியல் | Permalink | Comments (10) | Email this | Tags: election |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. write more. write more about ceylon Tamils. we are in war.

    கூறுவது: saravanan | Tuesday, 09 January 2007

  2. saravanan வாங்க

    நிச்சயம் எழுதுவோம்...

    கூறுவது: சிந்தாநதி | Tuesday, 09 January 2007

  3. தலைவா உங்க பக்கம் லோட் ஆகறதுக்குள்ள விடிஞ்சிடுது. அகலப்பட்டையும் அதிவேக இணைய இணைப்பும் இருக்கும் போதே இப்படின்னா அது இல்லாதவங்களை நினைச்சா பாவமா இருக்கு. கொஞ்சம் எதாவது பண்ணுங்க சாமி.

    கூறுவது: இலவசக்கொத்தனார் | Tuesday, 09 January 2007

  4. இலவசக்கொத்தனார் வாங்க

    தகவலுக்கு நன்றி...

    முடிந்தவரை வேகம் குறைக்கும் பலவற்றை அகற்றி விட்டேன். இப்போது பரவாயில்லையா?

    கூறுவது: சிந்தாநதி | Wednesday, 10 January 2007

  5. எனக்கும் மிகவும் தாமதமாகுது... இந்த கர்ஸரை மாத்திடலாமே! கிறிஸ்துமஸ் முடிஞ்சிடுச்சே..

    இட்லிவடைக்குப் போட்டியா இன்னுமொரு ஈ-பத்திரிக்கை மாதிரி வந்துருவீங்க போலிருக்கே! :)

    கூறுவது: பொன்ஸ் | Wednesday, 10 January 2007

  6. //இட்லிவடைக்குப் போட்டியா இன்னுமொரு ஈ-பத்திரிக்கை மாதிரி வந்துருவீங்க போலிருக்கே//

    அதுக்கு இன்னும் ரொம்ப தூரம் போகணும். இப்பத்தான் தலைப்பு போடவே கத்துக்கிட்டேன். கொஞ்சம் வெரைட்டியா பதிவு போட ஒரு முயற்சி அவ்வளவுதான்.

    முன்னேல்லாம் எழுத எதுவும் இல்லையேன்னு தோணும்... இப்போ எழுத நேரம் இல்லையேன்னு...

    கூறுவது: சிந்தாநதி | Wednesday, 10 January 2007

  7. தமிழ்நாட்டில் இந்த மாதிரி ஆள் இருந்தார் இல்லையா, பேர் தான் நியாபகம் வரலை..!!!

    கூறுவது: செந்தழல் ரவி | Wednesday, 10 January 2007

  8. //தமிழ்நாட்டில் இந்த மாதிரி ஆள் இருந்தார் இல்லையா, பேர் தான் நியாபகம் வரலை..!!!//

    ஆமாம்... அவரை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். பெயர் நினைவில் இல்லை

    கூறுவது: சிந்தாநதி | Wednesday, 10 January 2007

  9. நன்றி தலைவா, நம்ம கோரிக்கையையும் பரிசீலனை பண்ணி நடவடிக்கை எடுத்ததுக்கு. இப்போ சும்மா கும்முன்னு லோட் ஆகுது!

    கூறுவது: இலவசக்கொத்தனார் | Wednesday, 10 January 2007

  10. நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.

    ஏறுமுகமா போயிட்டிருந்த பார்வையாளர் எண்ணிக்கை திடீர்னு சரிய ஆரம்பிச்சதும் காரணம் புரியாமல் இருந்தது.

    தெரிய வெச்சு தெளிய வச்சதுக்கு நன்றி...

    கூறுவது: சிந்தாநதி | Wednesday, 10 January 2007

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)