வேட்டையாடு விளையாடு | H | தேன்கூட்டுக் குழப்பம்

Monday, 08 January 2007

ஓகம் என்றால் என்ன?

Image and video hosting by TinyPicதமிழ் மரபில் உருவாகி சித்தர்களால் வளர்த்தெடுக்கப் பட்ட ஒரு கலை எப்படியோ வடமொழியின் ஆளுமைக்குட்பட்டு வடவர் கலையாக தோற்றப் படுதலை மாற்றியமைக்க மீண்டும் அக்கலையைத் தமிழ்ப்படுத்தப் புறப்பட்டிருக்கும் அசித்தருடன் நேர்காணல் ஒன்றை சௌந்தரசுகன் வெளியிட்டிருக்கிறது.

அந்தக் கலை யோகக் கலை. இன்று யோகா என்று உலகம் பிரமிப்புடன் பார்க்கும் அந்தக்கலையை வெறும் மனம் சார்ந்ததாக இன்று பலரும் கருதிக் கற்று வருகிறார்கள். அது மனம் சார்ந்த கலையே அல்ல. முற்றும் உடல் சார்ந்த கலைதான் என்கிறார் அசித்தர். உடலுக்கு உறுதி தரும் ஒரு பயிற்சி அது. அதனால் ஏற்படும் புத்துணர்ச்சியை மனப்பயிற்சி என்று தவறாக கருதுகிறார்கள். ஒவ்வொரு ஆசனமும் உடலுக்கு பயிற்சியளிக்கும் விதத்திலேயே அமைக்கப் பட்டிருக்கிறது என்கிறார்.

ஒரு குழந்தை பிறந்து தவழ்ந்து நடக்கத் தொடங்கும் காலம் வரை அது செய்யும் முயற்சிகளும் பயிற்சிகளும் தான் இக்கலைக்கு அடிப்படை.(அட சரிதான்). யோகாவின் எல்லா நிலைகளையும் ஒரு குழந்தை இயல்பாக ஒருமுறையாவது செயல் படுத்தும். தமிழ் மரபில் உருவாக்கப் பட்ட இயல்பான உடற்பயிற்சி முறைதான் ஓகக் கலை.

ஆம் யோகம், யோகா என்றழைக்கப் படும் கலைதான் ஓகக்கலை.

-oOo-

வருணாசிரமம் கூட அசித்தரால் தலைகீழாக புரட்டிப் போடப்படுகிறது. நால்வருணம் குறித்த அசித்தரின் விளக்கம்.

மண்ணோடு உறவுள்ளவன் சூத்திரன். மண்ணுக்கு மேல் விளையும் தானியத்தோடு தொடர்புள்ளவன் வைசியன். மண்மீதான ஆளுமையுடன தொடர்புள்ளவன் சத்திரியன். மண்ணோடு எந்தத் தொடர்பும் இல்லாதவன் பிராமணன்.

-oOo-

இன்று பரவலாகப் பயன்படுத்தப் படும் திருவள்ளுவர் படம் சர்மா என்ற பிராமணரால் வரையப் பட்டது. அவர் திருவள்ளுவருக்கு பூணூல் வரைந்திருந்தார். தமிழக அரசுக்காக அந்தப் படத்தைத் தேர்வு செய்தபோது கலைஞர்தான் பூணுலுக்கு பதிலாக குறுக்குத் துண்டு போடவைத்தார்.

அசித்தர் இளமைத் தோற்றத்தில் வெற்று மார்புடன் இயல்பான திருவள்ளுவர் படத்தை வரைந்திருக்கிறார்.

-oOo-

திருவள்ளுவர் படத்துக்காகத் தேடிய போது ஒரு திருக்குறள் தளம் கிடைத்தது. ஆங்கில் மொழிபெயர்ப்பு மற்றும் ஆங்கில உரையுடன் இருக்கிறது. குறள் யூனித்தமிழில் இருப்பது மட்டுமல்ல தமிழில் தட்டச்சித் தேடும் வசதியும் செய்திருக்கிறார்கள்.

தமிழ் விக்கியில் ஒரு தமிழ்உரை இருக்கிறது. யாருடைய உரை என்ற குறிப்பு காணப்படவில்லை.

திமுக தளத்தில் இருக்கும் கலைஞர் உரை யூனிகோடில் இல்லை.

தமிழ் விக்கிப் பீடியாவில் திருக்குறள் பற்றிய அறிமுகப் பக்கம் இது. இந்தப் பக்கத்தில் இன்னும் சில பாகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப் பட வேண்டியுள்ளது. ஆர்வமும் நேரமும் உள்ளவர்கள் முயற்சிக்கலாம்.

யூனித்தமிழில் தமிழ் உரைகளுடன் திருக்குறள் வலைத்தளம் இருக்கிறதா?

-oOo-

சிதறல்கள்-2

சிதறல்கள்-1 இங்கே


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

10:40 Posted in சிதறல்கள் | Permalink | Comments (9) | Email this | Tags: kural, yoga |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. நானும் திருக்குறளின் தமிழ் உரையைத் தேடிக் கொண்டுதான் இருக்கின்றேன்.நீங்கள் நான் தேடியதைக் கண்டு பிடித்து க் கொடுத்து விட்டீர்கள்.நன்றி!

    கூறுவது: துர்கா | Monday, 08 January 2007

  2. நானும் தான்...

    கூறுவது: சிந்தாநதி | Monday, 08 January 2007

  3. விரல் நுனியில் குறள், எளிய தமிழ் மற்றும் ஆங்கில உரையோடு...
    http://s92430071.onlinehome.us/suvadik.htm

    கூறுவது: பாண்டியன் | Monday, 08 January 2007

  4. சுட்டிக்கு நன்றி பாண்டியன்...

    இது ஒரு மென்பொருள் போலிருக்கிறதே. நான் கேட்டது யூனித்தமிழில் இணையவாசிப்புக்கு ஏற்றமாதிரி தளம்...

    ஆனாலும் நீங்கள் தந்துள்ள சுட்டி மிகவும் பயனுள்ளது. இதுவரை அறியாதது...நன்றி

    கூறுவது: சிந்தாநதி | Monday, 08 January 2007

  5. http://www.koodal.com/thirukural/kural_parts.asp?title=virtue&cate=1&tit=%81%E9%B4%B3%BF%BA%91%D6%20-%20Virtue
    please try this
    johan paris

    கூறுவது: johan paris | Tuesday, 09 January 2007

  6. johan paris வாங்க

    சுட்டிக்கு நன்றி. ஆனால் இதுவும் யூனிகோடில் இல்லை:-(

    கூறுவது: சிந்தாநதி | Tuesday, 09 January 2007

  7. //தமிழ் விக்கிப் பீடியாவில் திருக்குறள் பற்றிய அறிமுகப் பக்கம் இது.//இந்த 'இது'வுக்கு மேல சுட்டியை கொண்டு போனால், அந்த 'இது' ஓடுது. கொஞ்சம் பாருங்க!!!

    கூறுவது: சீனு | Thursday, 11 January 2007

  8. அது மௌஸ் ஓவர்ல 2 பிக்சல் அதிகமாகிறதால வர்றது. அதனால பாதிப்பு இல்லையே...

    கூறுவது: சிந்தாநதி | Thursday, 11 January 2007

  9. நீங்கள் கூறும் புதிய திருவள்ளுவர் ஓவியம் எந்த வலைப்பக்கத்தில் உள்ளது? என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.

    கூறுவது: சரவணன் | Wednesday, 01 December 2010

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)