☜ ஓகம் என்றால் என்ன? | H | செந்தழல்ரவிக்கு நன்றி ☞
Monday, 08 January 2007
தேன்கூட்டுக் குழப்பம்

பிளாக்கரில் ஆங்கிலச்சொல் அல்லது எண்கள் மட்டுமே தனிச்சுட்டியில் இடம்பெறும். தமிழ்ச்சொற்களை அது சுட்டிக்கு எடுத்துக் கொள்வதில்லை. மாறாக என் பிளாக்ஸ்பிரிட் பதிவு தமிழில் தலைப்பிட்டிருந்தால் தமிழிலேயே தனிச்சுட்டியை உருவாக்குகிறது.
தமிழ் சொற்கள் தலைப்பில் இருந்தால் செய்தியோடை திரட்டிகள் சரியாகத் திரட்டுவதில்லை என்பதைக் கண்டறிந்ததால் முதலில் ஆங்கிலத்தில் தலைப்பிட்டு பதிப்பித்து பின் உடனே பதிவை தமிழுக்கு மாற்றி விட்டால் தனிச்சுட்டி ஆங்கிலத்திலும் தலைப்பு தமிழிலும் வந்துவிடுகிறது. அதன்பிறகே தமிழ்மணத்திலும் தேன்கூட்டிலும் சேர்ப்பது என் வழக்கம். இன்று பதிப்பித்தவுடன் பதிவு தேன்கூட்டில் வந்துவிட தலைப்பும் ஆங்கிலத்திலேயே வந்து விட்டது.
என்ன செய்யலாம் என்று பார்த்த போது தேன்கூட்டில்
உங்களின் இடுகையை நீங்களே நீக்க வேண்டுமா? உங்களின் இடுகைக்கு அருகில் உள்ள டெலிட் பட்டனை கிளிக் செய்தாலே போதும்!-
என்ற குறிப்பைப் பார்த்தேன். அதை சோதித்தேன். பதிவும் தேன்கூட்டில் இருந்து நீக்கப் பட்டு விட்டது. உடனே ஏற்கனவே இட்டபதிவை முற்றிலும் அழித்து விட்டு மீண்டும் ஒரு புதிய பதிவை இட்டு தேன்கூட்டில் சேர்க்க முயற்சித்தேன். ஆனால் பதிவு தேன்கூட்டில் ஏற்கனவே திரட்டப்பட்டு விட்டதாக செய்தி வருகிறது. பதிவையோ காணவில்லை. இப்போது பதிவு புதிய தனிச்சுட்டி உரலுடன் இருந்தாலும் தலைப்பு அதே தலைப்பில் இருப்பதாலா என்று தெரியவில்லை?
ஆனால் தமிழ்மணம் என் புதிய பதிவையும் திரட்டியது. ஆனால் தமிழ்மணத்தில் உள்ள பிரச்சினை என் அழிக்கப் பட்ட பதிவுக்கும் தமிழ்மணத்தில் சுட்டி தெரிகிறது. அதை நீக்க முடியவில்லை.
ஆகவே சிதறல்கள்-2 க்கு வழி...
இந்தப் பதிவை வாசிக்க வந்த ஆண்களுக்கு (ஜொள்ளர்களுக்கு) போனஸ் சிநேகா கவர்ச்சி?ப்படம். ஆமா பெண்களுக்கு ஜொள்ளுவிட என்ன படம் போடணும்?
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
08:35 Posted in இணையம் | Permalink | Comments (12) | Email this
| Tags: thenkoodu |
del.icio.us
|
|
Digg
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
இப்தோது இந்தப் பதிவோடு முந்தைய பதிவின் தலைப்பும் தேன்கூட்டில் தெரிகிறது....!!!
கூறுவது: சிந்தாநதி | Monday, 08 January 2007
-
//ஆமா பெண்களுக்கு ஜொள்ளுவிட என்ன படம் போடணும்?//
தெரியலை.. ஆனா சிநேகா போட்டிருக்கும் வளையல் அழகா இருக்கு.. பச்சை கலர்ல கீழே மணி யெல்லாம் தொங்குது...
ஹைதராபாத்தில் தான் இது போன்ற வளையல்கள் பார்த்திருக்கேன். வாங்காம வந்துட்டமேன்னு வருத்தமா இருக்கு ;) :)கூறுவது: பொன்ஸ் | Monday, 08 January 2007
-
சரி ஜொள்ளுவிடாத சமத்துப் போல நீங்க...
இந்த மாதிரி வளையல் இப்போது கிராமப்புற வளையல் கடைகளிலும் நகர்ப்புற கவரிங் கடைகளிலும் கிடைக்கிறதே...என் தங்கை மகளுக்கு வாங்கினோம்...கூறுவது: சிந்தாநதி | Monday, 08 January 2007
-
// ஆண்களுக்கு போனஸ் சிநேகா கவர்ச்சி?ப்படம். ஆமா பெண்களுக்கு ஜொள்ளுவிட என்ன படம் போடணும்?///
ம்ம்...அவங்களுக்கு சிநேகா படம்னா பெண்களுக்கு "சிநிகிதனே " படம் போடுங்க!! btw,பொன்ஸ்..இங்கயும் கிடைக்குதே..ஆனா, அது நம்ம ட்ரெஸ்-ல மாட்டிக்காதாங்கற சந்தேகத்தில வாங்கல..!!கூறுவது: சந்தனமுல்லை | Monday, 08 January 2007
-
சந்தனமுல்லை வாங்க
அடுத்த பதிவில் போட்டாப் போச்சு (சிநேகிதன்!!!!)கூறுவது: சிந்தாநதி | Monday, 08 January 2007
-
சில வகைகள் உடையில் மாட்டிக் கொள்கிற விதமாய்த்தான் இருக்கின்றன. சின்னக் குழந்தைகளுக்கு இந்த வகை வளையல்கள் நல்ல அழகாக இருக்கின்றன. குழந்தை அதைப்போட்டு தத்திதத்தி நடக்கும்போது நல்லாவே இருக்கு. பெரிய பெண்கள் போடுவதை நேரில் பார்த்ததில்லை. பொன்ஸ் சொல்வதற்கு முன் இந்தப் படத்தில் சிநேகா போட்டிருப்பதைக் கவனிக்கவே இல்லை...
கூறுவது: சிந்தாநதி | Monday, 08 January 2007
-
http://tvpravi.blogspot.com/2007/01/blog-post.html
பாருங்க இங்கெ....மகாலட்சுமி விஷயம் ஒரு முடிவுக்கு வந்தாச்சு..கூறுவது: செந்தழல் ரவி | Monday, 08 January 2007
-
//இங்கயும் கிடைக்குதே..ஆனா, அது நம்ம ட்ரெஸ்-ல மாட்டிக்காதாங்கற சந்தேகத்தில வாங்கல..!!//
முல்லை, நானும் அதே சந்தேகத்தில் தான் வாங்காமல் வச்சிருக்கேன்..
அதெல்லாம் சிநேகா மாதிரி கைய ஆட்டாம, அப்படியே போஸ் கொடுக்கத் தான் லாயக்குன்னு தோணுது.. நம்மை மாதிர் கீபோர்ட் தட்டுறவங்க, வீட்டு வேலை செய்றவங்களுக்கெல்லாம் ரொம்ப கஷ்டம்.
கம்பி வளையல் ஒண்ணு வாங்கினதே துணி பிழியும் போது, உலர்த்தும் போது மாட்டிகிட்டு கிழிக்குது :(
//பொன்ஸ் சொல்வதற்கு முன் இந்தப் படத்தில் சிநேகா போட்டிருப்பதைக் கவனிக்கவே இல்லை...//
அது சரி :))))கூறுவது: பொன்ஸ் | Monday, 08 January 2007
-
ஆஹா....நான் இந்த பதிவிற்கும் சினேஹாவின் படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று தேடிக்கொண்டு இருந்த்தேன்...
http://internetbazaar.blogspot.comகூறுவது: smg | Monday, 08 January 2007
-
ஜொள்ளுப் பார்ட்டிகளுக்காக போட்ட படம் வளையல் கண்காட்சியா மாறிப்போச்சு...
கூறுவது: சிந்தாநதி | Monday, 08 January 2007
-
ahaa, sneha ivvalavu slim beautynnu ippathan therinjathu! naan snehaakku maaritten!
கூறுவது: Osai Chella | Monday, 08 January 2007
-
Chella வாங்க
//snehaakku maaritten!//
இதுவரைக்கும் யார் favourite னு சொல்லியே...?கூறுவது: சிந்தாநதி | Monday, 08 January 2007
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



