நடிகர்களுக்குப் புது வரி | H | பிணங்களை தின்றேன்

Saturday, 06 January 2007

ஊழலின்றி வாழ்வேன்

'ஊழலின்றி வாழ்வேன்': உரக்க சொன்ன கலாம் - மெதுவாய் சொன்ன போலீஸ்

Image and video hosting by TinyPicசென்னை: சென்னை காவல்துறையினர் சிறப்பாக செயல்பட 9 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும் என கூறியுள்ளார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

சென்னை மாநகர காவல்துறையின் 150வது ஆண்டு விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலாம், ஆளுநர் பர்னாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கலாம் பேசுகையில், தேசிய வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு மிகவும் முக்கியமானது. சிறந்த நிர்வாகம், சிறந்த தொழில் திறன், நவீனமயமாக்கல் ஆகியவற்றின் மூலம் காவல்துறை மேம்பட்டு விளங்க முடியும்.

ஒவ்வொரு காவல் நிலையத்தில் ஒரு கம்ப்யூட்டர் கண்டிப்பாக இருக்க வேண்டும். புகார்களை அதில் தவறாமல் பதிவு செய்ய வேண்டும். காவல் நிலைய தலைமை அதிகாரியின் இமெயில் முகவரியை மக்களுக்கு தெரியும் வகையில் முறையாக விளம்பரப்படுத்த வேண்டும்.

நேரில் வந்து புகார் செய்ய அஞ்சுவோர், இமெயில் மூலம் புகார்களை ஏற்றுக் கொள்ளும் வசதி இருக்க வேண்டும். 2020ம் ஆண்டில் குற்றங்கள் எப்படி நடக்கும், பொதுமக்களின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதை சிந்தித்துப் பார்த்து காவல்துறை செயல்பட வேண்டும்.

லஞ்சலாவண்யம் இல்லாமல் போலீஸார் செயல்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். பொதுமக்களோடு நட்போடு பழக வேண்டும். போலீசார் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதோடு அவர்களின் இதயங்களில் இடம் பெறும் வகையில் செயலாற்ற வேண்டும் என்றார் கலாம்.

பின்னர் அவர் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட 9 உறுதிமொழிகளை கூறினார். அதை காவல்துறையினர் திருப்பிக் கூற கேட்டுக் கொண்டார். அதன்படி ஒவ்வொறு உறுதிமொழியாக கலாம் கூற அதை காவலர்கள் திரும்பிக் கூறினர்.

கலாம் கொடுத்த 9 கட்டளைகள்:

1. ஊழலற்ற வாழ்க்கை வாழ்ந்து அனைவருக்கும் நான் முன்னோடியாக இருப்பேன்.

2. சட்டத்தை மீறிச் செயல்படுவோருக்கு நான் இடியும், மின்னலுமாக இருப்பேன். சட்டத்தை மதிப்போருக்கு நான் காவலனாக இருப்பேன்.

3. எந்த வகையான குற்றச் செயலாக இருந்தாலும் அதற்கு எதிராக நான் தீவிரமாகவும், கடமையுணர்வுடனும் செயல்படுவேன்.

4. பாரம்பரியம் மிக்க சென்னை மாநகர காவல்துறையின் ஒரு அங்கமாக இருப்பதில் நான் பெருமை அடைகிறேன்.

5. சென்னை காவல்துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தமைக்காக பெருமைப்படுகிறேன்.

6. பொது மக்களின் நண்பனாக நான் இருப்பேன்.

7. எங்கும் அமைதி நிலவ பாடுபடுவேன்.

8. அனைவருக்கும் முன்மாதிரியாக நான் இருப்பேன்.

9. மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம் மற்றவர்களுக்கு நான் முன்னுதாரணமாக இருப்பேன் என்றார் கலாம்.

உறுதிமொழிகளை கலாம் சொல்லும்போது குறிப்பாக ஊழலற்ற வாழ்க்கை வாழ்வேன் என்று அவர் சொன்னபோது காவல்துறையினரின் குரல் சற்றே குறைச்சலாக இருந்தது. இதையடுத்து நன்கு உரக்கச் சொல்லுங்கள் என்று ஆசிரியர் போல உரிமையோடு கண்டித்தார் கலாம்.

இதையடுத்து அனைவரும் சத்தமாக உறுதிமொழியைத் திருப்பிக் கூறினர்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கலாம் இரவு 10.15 மணிக்கு டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

தட்ஸ்தமிழ்

-oOo-

மாணவ, மாணவிகளுக்கான கலாமின் பத்து உறுதிமொழிகள்

மதுரை : மதுரை ஜெயராஜ் நாடார் பள்ளி நிகழ்ச்சியில், ஜனாதிபதி கலாம் மாணவர்களிடம் 10 உறுதிமொழிகளை ஒன்றன் பின் ஒன்றாக கூறினார். பின் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அவை

1. நான் எனது வாழ்க்கையில் நல்லதொரு லட்சியத்தை மேற்கொள்வேன்.

2. நன்றாக உழைத்துப் படித்து வாழ்க்கையிலே மேற்கொண்ட லட்சியத்தை அடைய முற்படுவேன்.

3. நான் எனது விடுமுறை நாட்களில் எழுதப் படிக்கத் தெரியாத ஐந்து பேருக்காவது எழுதப் படிக்கச் சொல்லி கொடுப்பேன்.

4. என் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ குறைந்தபட்சம் ஐந்து செடிகளையாவது நட்டு, அதை பாதுகாத்து வளர்த்து மரமாக்குவேன்.

5. மது, சூதாடுதல் மற்றும் போதைப் பழக்கங்களுக்கு ஆளாகி துயரப்படும் ஐந்து பேரையாவது அதிலிருந்து மீட்டு நல்வழிப் படுத்த முயல்வேன்.

6. துயரப்படும் ஐந்து பேரையாவது சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து, அவர்களது துயரைத் துடைப்பேன்.
7.நான் ஜாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, மொழியின் பெயராலோ எந்தவித பாகுபாடும் பாராட்டாது எல்லோரிடமும் சமமாக நடந்து கொள்வேன்.

8. நான் வாழ்க்கையில் நேர்மையாக நடந்து கொண்டு மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்க முயல்வேன்.


9. என் தாய் மற்றும் தாய்நாடு இரண்டையும் நேசித்து, பெண் குலத்திற்கு உரிய மரியாதையையும், கண்ணியத்தையும் அளிப்பேன்.

10. நான் நாட்டில் அறிவு தீபத்தை ஏற்றி அணையா தீபமாக சுடர்விடச் செய்வேன்.

அரசியல் வாதியாக யாருக்கு ஆசை: நிகழ்ச்சியில் மாணவர்களிடம் "எத்தனை பேர் டாக்டர், இன்ஜினியர் ஆகப்போகிறீர்கள்?' என்று கலாம் கேட்டார். நிறைய மாணவர்கள் கை உயர்த்தினர். அவர்களை பாராட்டினார். "எத்தனை பேர் அரசியல்வாதி ஆகப்போகிறீர்கள்' என்று கேட்டார். சில மாணவர்கள் கை உயர்த்தினர். "பரவாயில்லை' என்று சிரித்துக்கொண்டே கூறினார் ஜனாதிபதி.

தினமலர்.


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

09:05 Posted in அரசியல் | Permalink | Comments (1) | Email this | Tags: kalam |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. --------
    'ஊழலின்றி வாழ்வேன்': உரக்க சொன்ன கலாம் - மெதுவாய் சொன்ன போலீஸ்
    --------
    காலையில் இப்படித் தலைப்பிட்டிருந்த தட்ஸ்தமிழ் எதனாலோ இப்போது
    ----------
    'உரக்க' சொன்ன கலாம்அமைதியான போலீஸ்
    ----------
    என்று சுருக்கி, காரம் குறைத்து விட்டது.

    கூறுவது: சிந்தாநதி | Saturday, 06 January 2007

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)