☜ இணைய வேகம் கூடுகிறது... | H | நடிகர்களுக்குப் புது வரி ☞
Thursday, 04 January 2007
முதலமைச்சரா முழுமூடனா?
முல்லைப் பெரியாறு விவகாரம் தொடங்கியதில் இருந்து இதுவரை அரசியல் ரீதியாக பலவித விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்துள்ளன. இரு மாநில முதலமைச்சர்களிடையே கருத்து மோதல்கள் இருந்துள்ளன. ஆனால் இன்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சிகளான திமுகவும் கம்யூனிஸ்டு கட்சியும் இந்த மாநிலங்களில் ஆட்சியில் உள்ளன.
எதிர்க்கட்சித் தலைவராக பல ஆண்டு அனுபவம் மிக்க அச்சுதானந்தன் இப்போது கேரள முதல்வராக இருக்கிறார். அவர் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை செய்துள்ள காரியங்கள் ஒரு பொறுப்புள்ள முதலமைச்சரின் செயலாகத் தெரியவில்லை. ஒரு சாதாரண கற்றுக்குட்டி அரசியல் வாதியின் கோமாளித்தனங்கள் அத்தனையும் கொண்டவராக முழு முட்டாள்தனங்களை செய்து வருகிறார். கேரள அரசியலின் நிரந்தர கோமாளி அரசியல்வாதியான கருணாகரனையும் தூக்கிச் சாப்பிடுவதாக உள்ளது இவரது இன்றைய கோமுட்டித்தனங்கள்.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரித்தால் அணை உடைந்து விடும் என்றார்கள். நிபுணர்கள் அணையின் வலிமையை உறுதிப் படுத்திய பிறகும், நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் அதே பல்லவியைப் பாடிவருகிறது. அதற்கெல்லாம் மேலாக முல்லைப் பெரியாறு அணை உடைவதாக கிராபிக்ஸ் படமெடுத்து சிடிக்களாக உலவ விட்டிருப்பது மட்டுமல்லாமல் கேரள அரசு இணையதளத்திலும் இந்த கற்பனைக் காட்சியை ஓடவிட்டிருக்கிறது.
இப்போது கேரள போலீசாரால் காவல் காக்கப் படும் அணையின் மேற்புறச்சுவரை கடப்பாரையால் இடித்து, அணை பலமற்றது என்று காட்டும் சிறுபிள்ளைத் தனமான செயலைச் செய்திருக்கிறது. இதனால் மத்திய காவல்படையை தமிழ்க அரசு கேட்டதும் அதற்கு தீவிரமாக மறுப்புத் தெரிவிக்கிறது. பிரச்சினைக்குரிய ஒரு இடத்தில் பிரச்சினைக்குரியவர்களே காவலுக்கு இருப்பது நல்ல நியாயம்தான்!
இதைப்பற்றி கேரள அரசியல் மட்டத்தில் பேசப்படும் விஷயமே வேறு. உண்மையில் அணை உடையும் என்பதோ மக்களுக்கு பாதிப்பு என்பதோ கேரள அரசுக்கு ஒரு பொருட்டே அல்ல. முல்லைப் பெரியாறு அணையைப் பயன்படுத்தி தமிழக அரசு தயாரிக்கும் மின்சாரத்தை கேரள அரசுக்கு இலவசமாக வழங்க ஒப்புக் கொள்ள வேண்டும். அதற்கான பிளாக்மெயில் அரசியல் தந்திரம்தான் மேற்கண்ட எல்லா நாடகங்களும்.
இது ஒருபுறமிருக்க கேரளாவின் மருத்துவமனைக் கழிவுகளை தமிழக எல்லைக்குள் கொண்டு வந்து கொட்ட தனியாருக்கு டெண்டர் விட்டு உரிமம் வழங்கியிருக்கிறது கேரள அரசு. இதற்கு முந்தைய அரசுகள் அந்தக் கழிவுகளைச் சுத்திகரிப்பு செய்ய பணம் ஒதுக்கி செயல்பட்டன. அச்சுதானந்தன் அரசோ அந்தப் பணம் எதுக்கு சும்மா போகுதென்று அதைக் கட் செய்து விட்டு அந்த கிருமிக் கழிவுகளை கேரளத்துக்கு வெளியே தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் கொண்டு வந்து கொட்ட ஏற்பாடு செய்தது. சமீபத்தில் இம்மாதிரி வந்தவைகளை சில பத்திரிகைகள் அம்பலப்படுத்த, பொதுமக்களே அதைத் தடுத்து கேரளாவுக்கு திருப்பி அனுப்பி விட்டார்கள். தமிழக காவல்துறையும் உஷாராகி திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்தது.
அடுத்த மூடத்தனம் என்னவென்றால் அப்படிப்போன லாரிகளை கேரளாவுக்குள் அனுமதிக்க மறுத்திருக்கிறது கேரள அரசின் வனத்துறை. மற்றவர்கள் எல்லாம் இளிச்சவாயர்கள் என்று தொடர்ந்து இம்மாதிரி மூடத்தனங்களில் ஈடுபட்டு வரும் கேரள அரசையும் அதன் மாண்புமிகு முதல்வரையும் என்னவென்று அழைக்க வேண்டும்?
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
10:55 Posted in அரசியல் | Permalink | Comments (12) | Email this
| Tags: kerala |
del.icio.us
|
|
Digg
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
லூசு என்றுதான்...வேறென்ன !!!
கூறுவது: செந்தழல் ரவி | Thursday, 04 January 2007
-
செந்தழல் ரவி வாங்க
//லூசு என்றுதான்...வேறென்ன !!!//
!கூறுவது: சிந்தாநதி | Thursday, 04 January 2007
-
நம்ம முதலமைச்சர் ஏன் விளம்பரப்பலகை வெக்க கூடாதுன்னு சின்னப்புள்ளத்தனமா சொன்னாருன்னு கொஞ்சம் எழுதலாமே ?
- தனிமடல் -கூறுவது: செந்தழல் ரவி | Thursday, 04 January 2007
-
சிந்தாநதி!
கேரளா அரசியல் வாதிகளைக் கொஞ்சம் புத்திசாலிகள் என்பாங்களே!!! எல்லாம் ஒரே குட்டை;ஒரே மட்டைதானா?
யோகன் பாரிஸ்கூறுவது: johan -paris | Thursday, 04 January 2007
-
சிந்தாநதி!
கேரளா அரசியல் வாதிகளைக் கொஞ்சம் புத்திசாலிகள் என்பாங்களே!!! எல்லாம் ஒரே குட்டை;ஒரே மட்டைதானா?
யோகன் பாரிஸ்கூறுவது: johan -paris | Thursday, 04 January 2007
-
மக்கள் கொஞ்சம் புத்திசாலிகள் தான். ஆனால் அதிக சுயநலவாதிகள்
கூறுவது: சிந்தாநதி | Thursday, 04 January 2007
-
இதன் முக்கிய நோக்கம் நீங்கள் சந்தேகிக்கும் மின்சாரம் அல்ல.
அணைக்காக தரப்பட்ட 8000 ஏக்கர் இடத்தில் சுமார் 3000 ஏக்கர்களை என்க்ரோச் செய்துவிட்டனர் கேரளத்தினர். அணையின் நீர்மட்டம் அதிகரித்தால், அந்த என்க்ரோச் மெண்டில் தண்ணீர் புகுந்துவிடும்.
இதனால்தான், ஜெயலலிதா, கருணாநிதி இருவரும், சுப்ரீம் கோர்ட் ஆர்டருக்கு பிறகும் பேச்சு வார்த்தை என்று வாய்ஜாலம் காட்டி... காசு வாங்கி போட்டுக்கொண்டு வருகின்றனர்.கூறுவது: hrllq | Thursday, 04 January 2007
-
hrllq வாங்க
தடுப்பதற்கு இதுவும் காரணம். பிளாக் மெயில் மூலம் மின்சாம் பெறுவதும் இன்னொரு நோக்கம் தான்கூறுவது: சிந்தாநதி | Thursday, 04 January 2007
-
அதுதான் நீங்களே சொல்லிட்டீங்களே முழுமூடன்னு தான் சொல்லனும்!!!
கூறுவது: ஆருட்பெருங்கோ | Thursday, 04 January 2007
-
ஆருட்பெருங்கோ வாங்க
:)கூறுவது: சிந்தாநதி | Thursday, 04 January 2007
-
இதுதாங்க அரசியல்
கூறுவது: sam | Friday, 05 January 2007
-
sam வாங்க
//இதுதாங்க அரசியல்// ???கூறுவது: சிந்தாநதி | Friday, 05 January 2007
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



