☜ எல்லாமே நாங்கதான் | H | முதலமைச்சரா முழுமூடனா? ☞
Wednesday, 03 January 2007
இணைய வேகம் கூடுகிறது...

இந்தியாவில் இணையத்தொடர்பு வேகம் அதிரடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. இலவசப் பதிவிறக்க அளவும் அதிகரிக்கப் பட்டுள்ளது. கட்டண விகிதம் ஓரளவு குறைக்கப் பட்டுள்ளது.
ஜனவரி 1ம்தேதி முதல் அமலுக்கு வந்துள்ள பிஎஸ்என்எல்லின் புதிய பிராட்பேண்ட் கட்டண திட்டப்படி இணைய வேகம் 256 kpbs இல் இருந்து 2 Mbps ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது. பின்வரும் பட்டியலில் உள்ளபடி மாதாந்திர இலவச பதிவிறக்க அளவுகள் மற்றும் குறைக்கப் பட்ட கட்டண விகிதங்கள்.| திட்டம் | பழைய கட்டணம் | புதிய கட்டணம் |
|---|---|---|
| Home 250 | 0.4GB வரை ரூ.250, மேல் ஒவ்வொரு 1MBக்கு 120 காசுகள். | 1GB வரை ரூ.250, மேல் ஒவ்வொரு 1MBக்கு 90 காசுகள். |
| Home 500 | 1GB வரை ரூ.500, மேல் ஒவ்வொரு 1MBக்கு 100 காசுகள். | 2.5GB வரை ரூ.500, மேல் ஒவ்வொரு 1MBக்கு 80 காசுகள். |
| Home 1000 | 2GB வரை ரூ.1000, மேல் ஒவ்வொரு 1MBக்கு 100 காசுகள். | 5GB வரை ரூ.1000, மேல் ஒவ்வொரு 1MBக்கு 80 காசுகள். |
அடிப்படை திட்டமான Home 250 தவிர பிற திட்டங்களில் அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணி வரை கணக்கில்லாத இலவச பதிவிறக்க சலுகை (unlimited download) தொடர்கிறது.
இணைய வேகத்தைப் பொறுத்தவரை பழைய காப்பர் வயர்கள் மாற்றப்பட்ட இடங்களில் உடனடியாகவும் மற்றயிடங்களில் படிப்படியாகவும் அமலுக்கு வருகிறது.
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
16:05 Posted in இணையம் | Permalink | Comments (16) | Email this
| Tags: broadband, dataone, bsnl |
del.icio.us
|
|
Digg
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
பிற நாடுகளின் கட்டண விகிதம் எப்படி இருக்கிறது? வேகம்?
கூறுவது: சிந்தாநதி | Thursday, 04 January 2007
-
பி.எஸ்.என்.எல். லிங்க் ஏதேனும் இருந்தால் தாருங்களேன். நன்றி.
கூறுவது: சேதுக்கரசி | Thursday, 04 January 2007
-
//பிற நாடுகளின் கட்டண விகிதம் எப்படி இருக்கிறது? வேகம்?//
அமெரிக்காவில் ஊருக்கு ஊர், நிறுவனத்துக்கு நிறுவனம், மாறும். உதாரணத்துக்கு:
3 Mbps $20
5 Mbps $40
10 Mbps $60கூறுவது: சேதுக்கரசி | Thursday, 04 January 2007
-
சேதுக்கரசி வாங்க
bsnl broadband -dataone tariff link இதோ
http://www.bsnl.co.in/service/dataone_tariff.htmகூறுவது: சிந்தாநதி | Thursday, 04 January 2007
-
எங்க கிராமத்துக்கு இந்த வசதி எல்லாம் எப்பங்க கிடைக்கும்????
http://internetbazaar.blogspot.comகூறுவது: smg | Thursday, 04 January 2007
-
smg வாங்க
//எங்க கிராமத்துக்கு இந்த வசதி எல்லாம் எப்பங்க கிடைக்கும்????//
எந்த கிராம்ம்னு சொல்லுங்க..பார்த்து சொல்கிறேன்.கூறுவது: சிந்தாநதி | Thursday, 04 January 2007
-
சிந்தாநதி!
இங்கே பல நிறுவனங்கள் போட்டி போடுவதால் FREE எனும் நிருவனம்;28 mb இணையவசதி;28 நாடுகள்(அமெரிக்கா,கனடா;அவுஸ்ரேலியா,சிங்கப்பூர்,சீனா,இஸ்ரேல்;மற்றும் அத்தனை ஐரோப்பிய நாடுகள்) வரையறையற்ற தொலைபேசி வசதி,மற்றும் 80 இலவச தொலைக்காட்சி எல்லாமாக 30 யூரோ மாதம் கட்டுகிறேன். இதுவரை தொல்லை இல்லை. செவ்வனே இயங்குகிறது. சிலருக்குத் தொல்லையும் கொடுத்துள்ளது.
"தானம் கொடுத்த மாட்டில் பல்லை ஆட்டிப் பார்க்கக் கூடாதென்பாங்க??
யோகன் பாரிஸ்கூறுவது: johan -paris | Thursday, 04 January 2007
-
johan -paris வாங்க
அப்போ பாரீஸ் ரொம்ப சீப்தான் போலகூறுவது: சிந்தாநதி | Thursday, 04 January 2007
-
சிந்தாநதி, கிராமத்தின் பெயர் நாடியம்:-)
http://internetbazaar.blogspot.comகூறுவது: smg | Friday, 05 January 2007
-
இப்போது தான் படித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் தான் தமிழில் திருமாவளவன் என்ற பெயரில் வலைப்பதிகிறீர்கள்?
நாடியம்? கேட்டதில்லையே? எந்த மாவட்டம்?கூறுவது: சிந்தாநதி | Friday, 05 January 2007
-
தஞ்சை?
உடனே வந்துவிடும் எல்லாவசதியும்...கூறுவது: சிந்தாநதி | Friday, 05 January 2007
-
நம்ம ஊர் வசதிகளை சொன்னா என்ன சொல்லாட்டா என்ன???
ஊரோடி பகீ
http://oorodi.blogspot.comகூறுவது: பகீ | Friday, 05 January 2007
-
பகீ வாங்க
ஒரு ஒப்பீடுதான் வேறென்ன...கூறுவது: சிந்தாநதி | Friday, 05 January 2007
-
அட "டயல் அப்பே" பெரிய விசயமுங்க
கூறுவது: பகீ | Friday, 05 January 2007
-
அதுசரி...
:((கூறுவது: சிந்தாநதி | Saturday, 06 January 2007
-
bsnl இன்னும் ஆறுமாதத்திற்குள் தொலைபேசி இணைப்பிலேயே பிராட்பேண்ட் இணைப்பு மட்டுமல்லாமல் தொலைக்காட்சி (கேபிள்)ஒளிபரப்பு இணைப்பையும் இணைத்து 3 in 1 ஆக வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
கூறுவது: சிந்தாநதி | Saturday, 06 January 2007
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



