☜ சலுகை ரஜினிக்காகவா? | H | இணைய வேகம் கூடுகிறது... ☞
Tuesday, 02 January 2007
எல்லாமே நாங்கதான்
தமிழின் முதல் அனிமேஷன் கார்ட்டூன் முழுநீளக் கதைப்படம் 3D யில் எடுக்கப் பட்டுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். பாடல்கள் வாலி. எடிட்டிங் லெனின். கதை திரைக்கதை அமைத்து இயக்குகிறார் வெங்கிபாபு. மாயாபிம்பம் மீடியா சார்பில் ஸ்ரீதேவி தயாரித்துள்ள இப்படத்தில் வழக்கமான முழுநீள தமிழ்சினிமாவின் எல்லா தொழில் நுட்பக் கலைஞர்களும் இடம் பெற்றுள்ளனர். ஆனால் இப்படத்தில் நடிகர் நடிகைகள் மட்டும் இல்லை என்பது தான் விசேஷ அம்சம்.
3D கார்ட்டூன் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப் பட்டு சாதாரண படம் போலவே உருவாக்கப் பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க இந்தியத் தொழில் நுட்பத்தில் இந்தியாவிலேயே அதுவும் சென்னையிலேயே 100% படமாக்கப் பட்டுள்ளது. நட்சத்திரங்களுக்கான சம்பளமோ கால்ஷீட் பிரச்சினையோ இல்லாத இந்தப் படத்திற்கு பொருத்தமாக "இனிமே நாங்கதான்" என்று பெயரிடப் பட்டிருக்கிறது.
இதற்கு முன்னால் சில கார்ட்டூன் திரைப்படங்கள் உருவாக்கப்பட்ட போதிலும் அவை புராணக் கதைகளாகவோ அலாவுதீன் போன்ற பழங்கதைகளாகவோ தான் இருந்தன.
இது முதன் முறையாக சமகால கதாபாத்திரங்களைக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது. விச்சு, வரது, வைத்தி, கோவிந்த் என்னும் நான்கு கதாபாத்திரங்களின் லூட்டியை மையமாக்கி நகைச்சுவையோடு படமாகப் பட்டுள்ளது.
நேரடியாக தமிழில் உருவாக்கப் பட்டு பிற மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்படுகிறது. 2K ரிசல்யூஷனுடன் டிஜிட்டல் துல்லியத்தில் உலக தரத்தில் தயாரிக்கப் பட்டு Analogue, Digital, IMAX மற்றும் 3D வடிவங்களில் உருவாக்கப் பட்டுள்ளது.
இப்படத்தின் டிரெய்லர் இங்கே.
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
10:40 Posted in சினிமா | Permalink | Comments (18) | Email this
| Tags: 3d, animation |
del.icio.us
|
|
Digg
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
மகிழ்ச்சியான செய்தி.
இன்னும் வழிவத்தில் அழகு படுத்தினார்கள் எனில் நம் ஸ்டார்கள் கடையில் கூட்டம் கொஞ்சம் குறையும். ஆனால் செலவு தான் தாக்கு பிடிக்குமான்னு தெரியலை.
பகிர்வுக்கு நன்றி!கூறுவது: யெஸ்.பாலபாரதி | Tuesday, 02 January 2007
-
எப்படியும் வெளிநாடு போய் கூத்தடிக்கிற பணத்தைவிட குறைச்சலாகத்தான் ஆகும் என்று தோன்று கிறது.
நீங்கள் சொன்னமாதிரி உருவங்களுக்கு இன்னும் சிறிதளவு நாச்சுராலிட்டி கிடைத்து விட்டால் எதையும் செய்யலாம்...கூறுவது: சிந்தாநதி | Tuesday, 02 January 2007
-
இனிமே நாங்கதான் அணிக்கு வாழ்த்துக்கள்!
http://internetbazaar.blogspot.comகூறுவது: smg | Tuesday, 02 January 2007
-
தமிழில் முதன் முதலாக வரவிருக்கும் "இனிமே நாங்கதான்" படக் குழுவிற்கு என் வாழ்த்துக்கள்.
செலவு குறைவாக தான் ஆகும். இளையராஜா இசை அமைக்கும் 2வது அனிமேஷன் கார்ட்டூன் படம் இது.
இந்த படத்தில் பாடல்களும் உள்ளது. ராஜா கூட ஒரு பாடல் பாடியிருக்கிறர்.கூறுவது: கோபிநாத் | Tuesday, 02 January 2007
-
யெஸ்.பாலபாரதி, smg, கோபிநாத் வருகைக்கு நன்றி
கூறுவது: சிந்தாநதி | Wednesday, 03 January 2007
-
ம்ம்...நல்ல செய்தி.
ஆனா, quality தான் எப்படி இருக்கும்ன்னு தெரியல. இந்தியில் வந்த அலாதீன் எல்லாம், 100% பெர்பெக்ட் இல்ல.கூறுவது: சீனு. | Wednesday, 03 January 2007
-
உண்மையிலேயே தமிழ் சினிமாவுக்கு நல்ல செய்தி.
ஊரோடி பகீகூறுவது: ஊரோடி பகீ | Wednesday, 03 January 2007
-
சீனு, பகீ வாங்க
கூறுவது: சிந்தாநதி | Wednesday, 03 January 2007
-
//ஆனா, quality தான் எப்படி இருக்கும்ன்னு தெரியல. இந்தியில் வந்த அலாதீன் எல்லாம், 100% பெர்பெக்ட் இல்ல.//
துல்லியம் பற்றியெல்லாம் நிறைய விளக்க்கங்கள் கொடுத்திருக்கிறார்கள்...ம் ...பார்ப்போம்கூறுவது: சிந்தாநதி | Wednesday, 03 January 2007
-
அனிமேசன் படங்கள் பணமும் அர்பணிப்பும் சம்பந்தபட்டது.டிஸ்னியே தாக்கு பிடிக்காமல் பல ஸ்டூடியோக்களை மூடிவிட்டார்கள். அவர்கள் இப்போது பிக்ஸாரை நம்பியேயுள்ளனர்.
முழுநீள் அனிமேசன் படங்களை விட தற்போதைய படங்கள் செலவு கம்மி. பிக்ஸார் உருவ பெர்பெக்ட்டைவிட அனிமேசன் பெர்பெக்ட்டைதான் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். இந்தியாவில் இரண்டையும்விட் பணத்தில்தான் கவனம் செலுத்துகின்றனர்.கூறுவது: நடோடி | Thursday, 04 January 2007
-
நாடோடி வாங்க..
மாற்று தொழில் நுட்பங்கள் வரவரத்தானே முன்னேற்றமும் உருவாகும். அனிமேஷன் படங்கள் குழந்தைகளுக்கான களத்தை மட்டும் நம்பியிராமல் பொதுத்தளத்துக்கும் நகரும்போது புதிய மாற்றங்கள் உருவாகும். நம் தொழில் நுட்ப வல்லுநர்கள் ஆரம்ப வெற்றிக்காக காத்திருக்கிறார்கள். முதல் வெற்றி யாருக்காவது கிடைத்து விட்டால் அமெரிக்காவை தூக்கி சாப்பிடும் நுட்பங்கள் இங்கேயே வர ஆரம்பித்து விடும். அப்போது செலவும் குறைவாகவே ஆகும். ஆனால் மீண்டும் ஸ்டுடியோவுக்காக, கேமராவுக்காக, கம்பியூட்டருக்காக என்று வெளிநாடு போக ஆரம்பித்தால் பின்னும் பழைய குருடி கதையாகி விடும்...கூறுவது: சிந்தாநதி | Thursday, 04 January 2007
-
சிந்தாநதி!
தொப்புள் ரசிகமணிகள் எந்த அளவு வரவேற்ப்புக் கொடுக்கிறாங்க பார்ப்போம்.
யோகன் பாரிஸ்கூறுவது: johan -paris | Thursday, 04 January 2007
-
//தொப்புள் ரசிகமணிகள் எந்த அளவு வரவேற்ப்புக் கொடுக்கிறாங்க பார்ப்போம்//
;-))))கூறுவது: சிந்தாநதி | Thursday, 04 January 2007
-
ட்ரெய்லர் எங்கே? சுட்டி சரியில்லை போலிருக்கே சிந்தாநதி :)
கூறுவது: பொன்ஸ் | Thursday, 04 January 2007
-
பொன்ஸ் வாங்க
இதோ இப்போ நேரடியாகவே போட்டாச்சுகூறுவது: சிந்தாநதி | Thursday, 04 January 2007
-
தமிழ் சினிமாவுக்கு ஒரு முன்னேற்றத்தைக் கொடுக்கும் என் நம்புவோம்.
இளையராஜா இசை அமைத்த முதலாவது அனிமேஷன் படம் எது?
வைசாகூறுவது: வைசா | Thursday, 04 January 2007
-
வைசா வாங்க
//இளையராஜா இசை அமைத்த முதலாவது அனிமேஷன் படம் எது?//
சட்டென்று நினைவுக்கு வரவில்லை. எனவே over to கோபிநாத்...கூறுவது: சிந்தாநதி | Thursday, 04 January 2007
-
அருமையான முயற்சி. "ஒரு முறை கேட்டாலே..." என்ற பாடல் நிஜமாகவே ஒரு முறை கேட்ட உடனேயே மனதில் பதிந்தது. பாத்திரங்களின் வாயசைப்பும் மிக தத்ரூபமாக உள்ளது. பொதுவாக கார்டூன் மற்றும் அனிமேஷன் படங்களில் வாயசைப்பு அவ்வளவு துல்லியமாக இருக்காது. இதில் மிக அருமை.
ஒரு சிறிய குறை. அதென்ன பிராமணர்கள் போன்ற உருவம்? (அல்லது பிராமணர்களே தானோ?) எப்போதுமே நையாண்டி செய்வதற்கு அவர்களை விட்டால் வேறு ஆளே கிடையாது போன்ற எண்ணம். தமிழரின் கற்பனைக்கு இவ்வளவு வறட்சியா? அல்லது அந்த குலத்தின் மீது ஏதும் கோபமா?கூறுவது: ர | Thursday, 27 September 2007
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



