'சிவாஜி' க்ளைமாக்ஸ்! | H | 3. எனக்கு-16 உனக்கு-12 ♂♀

Sunday, 19 November 2006

ஜேம்ஸ்பாண்டின் கதை!

Image and video hosting by TinyPic
ங்கிலப் படவுலகில் நிரந்தர வரவேற்பை பெறும் கதாபாத்திரங்களில் பிரதானமானது ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம். ஜேம்ஸ்பாண்டாக இதுவரை ஐந்து கதாநாயகர்கள் நடித்துள்ளனர். கடைசியாக பியர்ஸ் பிரஸ்னனுக்குப் பிறகு ஆறாவது ஜேம்ஸ்பாண்டாக டானியல் கிரெக் நடித்த கேசினோ ராயல் சமீபத்தில் திரைக்கு வந்துள்ளது. இருபது படங்களுக்கு மேல் வெளி வந்த பிறகும் தொடர்ந்து ஜேம்ஸ்பாண்ட் படங்கள் சக்கைப் போடு போடுகின்றன.

சூப்பர்மேன், ஸ்பைடர் மேன் மாதிரி அதிசய சக்தி எதுவும் இல்லாமல் விஞ்ஞானக் கருவிகளின் துணையோடு ஜேம்ஸ்பாண்ட் புரியும் சாகசங்களை சிறுவர் முதல் பெரியவர் வரை ரசிக்ககின்றனர். கதாநாயகிகளோடும் வில்லிகளோடும் ஜேம்ஸ்பாண்ட்டின் அப்பட்டமான படுக்கையறைக் காட்சிகள் இருந்த போதிலும் இப்படங்கள் இந்தியாவிலும் எல்லா வயதினரிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

ஜேம்ஸ்பாண்ட் படங்களின் முதல் நாயகன் சீன் கானரி ஆறு படங்களில் நடித்துள்ளார். இரண்டாவதாக வந்த ஜார்ஜ் லேசன் ஒரு படத்தில் மட்டும் நடித்தார். மூன்றாவது ஜேம்ஸ்பாண்ட் ரோஜர் மூர் ஏழுபடங்களில் நடித்து அதிக படங்களில் ஜேம்ஸ்பாண்ட் ஆக நடித்த பெருமையைப் பெறுகிறார். திமோத்தி டால்டன் நான்காவதாக வந்து இரண்டு படங்களில் மட்டும் நடித்தார். ஐந்தாவது ஜேம்ஸ்பாண்ட் பியர்ஸ் பிரஸ்னன் நான்கு படங்களில் நடித்துள்ளார். புதிய ஜேம்ஸ்பாண்ட் டானியல் கிரெக் நடித்து ஒரு படம் திரைக்கு வந்துள்ளது. ஒன்று தயாரிப்பில் உள்ளது.

இயான் பிளம்மிங் என்ற பிரிட்டிஷ் நாவலாசிரியர் 1952 முதல் ஜேம்ஸ்பாண்ட் 007 என்னும் ரகசிய ஏஜென்ட் பாத்திரத்தை உருவாக்கி நாவல்களும் சிறுகதைகளும் படைத்தார். அவரது மறைவுக்குப் பிறகு வேறு பல எழுத்தாளர்களும் இந்த கதாபாத்திரத்தைக் கொண்டு கதைகளை உருவாக்கினர். ஜேம்ஸ்பாண்ட் கதை முதலில் தொலைக்காட்சிப் படமாகவும் வானொலி தொடராகவும் நடிக்கப் பட்டது. அதன்பிறகு இது பெரிய திரைக்கு வந்து உலகப் புகழ் பெற்றது.

கணினி விளையாட்டுகள், வீடியோ விளையாட்டுகள், அனிமேஷன் படங்கள், காமிக் படக்கதைகள் என ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம் பல அவதாரங்களைப் பெற்றுள்ளது.

செல்போன்களில் ரிங்டோனாக ஜேம்ஸ்பாண்ட் படத்தின் தீம் மியூசிக் பரவலாக பலராலும் பயன்படுத்தப் படுகிறது. ஜேம்ஸ்பாண்ட் படத்தில் இடம்பெறும் கருவிகளின் மாதிரிகள் விளையாட்டுப் பொருள் சந்தையில் குறிப்பிடத் தக்க இடம் பிடித்துள்ளன. குறிப்பாக ஜேம்ஸ்பாண்ட் கார் பொம்மைகளும், துப்பாக்கிகளும், 007 சின்னம் பொறிக்கப் பட்ட உடைகளும் மிகவும் பிரபலம்.

ஒரு கொசுறு செய்தி:

பியர்ஸ் பிரஸ்னன் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் ஆக சபாரிசு செய்தது கீழே படத்தில் உள்ள அழகான இளைஞனைத்தான். ஆனால் அவருக்கு ஜேம்ஸ்பாண்ட் ஆக யோகம் இல்லை போல. இந்த நடிகரின் பெயர் என்ன சொல்லுங்க???Image and video hosting by TinyPic

ஜேம்ஸ்பாண்ட் படப் பட்டியல்

Sean Connery

1. Dr. No (1962)
2. From Russia with Love (1963)
3. Goldfinger (1964)
4. Thunderball (1965)
5. You Only Live Twice (1967)
6. Diamonds Are Forever (1971)

George Lazenby

1. On Her Majesty's Secret Service (1969)

Roger Moore

1. Live and Let Die (1973)
2. The Man with the Golden Gun (1974)
3. The Spy Who Loved Me (1977)
4. Moonraker (1979)
5. For Your Eyes Only (1981)
6. Octopussy (1983)
7. A View to a Kill (1985)

Timothy Dalton

1. The Living Daylights (1987)
2. Licence to Kill (1989)

Pierce Brosnan

1. GoldenEye (1995)
2. Tomorrow Never Dies (1997)
3. The World Is Not Enough (1999)
4. Die Another Day (2002)

Daniel Craig

1. Casino Royale (2006) - lattest
2. Bond 22 (2008) - future

கேசினோ ராயல் - திரைப்பட விமர்சனம்

1. கேசினோ ராயல் - ஜேம்ஸ்பாண்டு 007 - சாத்வீகன்

2. சும்மா டைம் பாஸ் மச்சி.....: கேசினோ ராயல் - திரை விமர்சனம்


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

20:20 Posted in சினிமா | Permalink | Comments (6) | Email this | Tags: தமிழ்ப்பதிவுகள், Casino Royale, Bond |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. தகவல்களுக்கு நன்றி.
    சீன் கானரி-யின் சரியான உச்சரிப்பு 'ஷான் கானரி'.

    கூறுவது: பெத்தராயுடு | Sunday, 19 November 2006

  2. பெத்தராயுடு வருகைக்கு நன்றி.

    சரியான உச்சரிப்பு எதுவானாலும் வழக்கமா நம்ம தமிழ் பத்திரிகை ஸ்டைல்ல அவர் இப்பவும் சீன் கானரி தான். அதான் :-))

    கூறுவது: சிந்தாநதி | Monday, 20 November 2006

  3. updated

    கூறுவது: சிந்தாநதி | Monday, 20 November 2006

  4. நான் ராணி காமிக்ஸில் ஜேம்ஸ் பாண்டின் தீவிர ரசிகன். ஏறக்குறைய எல்லா கதைகளும் என்னிடம் உண்டு. அப்புறம் நாவல்கள் வாங்கினேன் - கோவை உக்கடம் பழைய புத்தக கடைகளில். இப்போதைய டிவிடி உலகத்தில் அனைத்து திரைப்படங்களையும் சேகரித்து உள்ளேன். ஏனோ தெரியாது.. இந்த கதாநாயகன் மேல் உள்ள ஆர்வம். தர்க்க ரீதியாக பார்த்தால், மேட்டிமை கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு என்றும் சொல்லலாம்.

    கூறுவது: muthukumar | Tuesday, 21 November 2006

  5. நம்மில் பலரும் குழந்தைகளாகிப் போகும் தருணங்கள் பல உண்டு. இன்றைய உலகில் தாத்தா பாட்டி சொல்லும் பழைய ராஜாராணிக் கதைகள் கேட்பதற்கு வழியில்லாத நிலையில் இதுபோன்ற கதாநாயக பிம்பங்களே நம் மனதில் உறைந்து போன சில உணர்வுகளை மீட்டெடுக்கின்றன.

    மேட்டிமை காலாச்சார பிரதிபலிப்பு என்றாலும் நாயக பிம்பம் என்பது நாடு இனம் மொழி சாராதது என்றே நான் கருதுகிறேன்.

    கூறுவது: சிந்தாநதி | Tuesday, 21 November 2006

  6. muthukumar வருகைக்கு நன்றி

    கூறுவது: சிந்தாநதி | Tuesday, 21 November 2006

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)