☜ பெரியார்: நல்லவரா கெட்டவரா? | H | குழந்தைகளுக்கு சமர்ப்பணம் ☞
Monday, 13 November 2006
புதிய கருவிப்பட்டை!
தமிழ் வலைப்பதிவுகள் கருவிப்பட்டை
*வலைப்பதிவுகள்*மின்னஞ்சல்*இணைய வானொலி*மெட்டாதேடுபொறி*மின்னூல்கள்

1. தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள் ஆகிய மூன்று திரட்டிகளின் சாரமும் இங்கே காணமுடியும் ஒவ்வொன்றிலும் சுமார் 50 தலைப்புகள் வரை காணலாம்.
2. உங்களுக்கு பல மின்னஞ்சல் கணக்குகள் இருக்கலாம். ஒவ்வொன்றிலும் மெயில் வந்திருக்கிறதா என நீங்கள் உட்சென்று பார்வைடுவதில் உள்ள சிரமத்தை நீக்குகிறது. நேரடியாக உங்கள் பாப்3, கூகிள், யாகூ, ஹாட்மெயில் உள்ளிட்ட மின்னஞ்சல்கள் வருவதை உடனுக்குடன் அறிவிக்கிறது..
3. கூகுள், யாகூ, ஆஸ்க், அல்டாவிஸ்டா, ஆல்திவெப் ஆகிய 5தேடுபொறிகளோடு, ஈசிடுபைன்ட், மெட்டாக்ராவ்லர் ஆகிய 2 மெட்டா தேடு பொறிகளிலும் இதிலிருந்தே நேரடியாகத் தேடலாம். மேலும் அகராதி, படம், இணையசந்தை, செய்தி, காலநிலை உள்ளிட்ட பத்து வகையான வகைப்படுத்தப்பட்ட தேடல்கள் உண்டு.

4. ஒலி, பிபிசிதமிழ், சக்தி FM, தென்றல், மெரினா ஆகிய ஐந்து இணைய வானொலிகளை இதில் கேட்கலாம். உங்களுக்கு விருப்பமான வேறு வானொலிகளையும் இணைக்க வசதி உண்டு.
5. கூகுள் டூல்பாரைப்போல பாப் பிளாக்கர், குக்கீ கிளீனர், ஹிஸ்டரி கிளீனர் இதில் உண்டு.
6. ஆன்லைன் வாசிப்புக்கு சென்னை நூலகம், மதுரை திட்டம், ஈழநூலகம், தமிழ்விக்கி இணைப்பு.
7. உங்கள் ஊரின் காலநிலையை இதன்மூலம் இறிய முடியும்.
8. தேவையற்ற கருவியை கருவிப்பட்டையிலிருந்து நீக்கவும் தேவையானபோது சேர்க்கவும் வசதி உள்ளது. பெயர்கள் இல்லாமல் சுட்டிகளை மட்டும் வைத்திருக்க shrink toorbar வசதியைப் பயன்படுத்தினால் அனைத்து சுட்டிகளும் வரிசையில் வரும்.
9. உங்கள் விருப்பப்படி கஸ்டமைஸ் செய்து கொள்வது உள்ளிட்ட இன்னும் பல உங்களுக்கு பிடித்தமான அம்சங்களோடு இந்த கருவிப்பட்டை வந்துள்ளது.
பிற சிறப்பு வசதிகள்: தகவல் அறிவிப்பு, chat வசதி (புதியது) , தமிழக அரசு தளங்கள். இவற்றுடன் இந்த கருவிப்பட்டையை நிறுவியுள்ள நண்பர்களுக்கான சிறப்புப் பரிசு! முதல் ஐந்து பேர்களுக்கு மட்டும். விவரம் கருவிப்பட்டையின் flash தகவல் பெட்டியில்!
2006 நவம்பர் 23 வரை கருவிப்பட்டை பெற்றுக் கொண்டவர்கள் 19 நண்பர்கள். பரிசு பெற்ற நண்பர்கள் ஈழபாரதி, பாலபாரதி.
இந்தக் கருவிப்பட்டையை பின்வரும் முகவரியில் பதிவிறக்கலாம். இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்புடன் பயர்பாக்சுக்கான பதிப்பும் இங்கே உள்ளது.
Download (750 kb)
Tamilblogs Toolbar
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
16:55 Posted in இணையம் | Permalink | Comments (17) | Email this | Tags: தமிழ்ப்பதிவுகள்
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() | தமிழின் வேகமான திரட்டி செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
பதிவிறக்குவதில் பிரச்சனை இருக்கிறது. நீங்களே உருவாக்கியதா? தகவலுக்கு நன்றி.
மிக நல்ல முயற்சி.கூறுவது: சிறில் அலெக்ஸ் | Monday, 13 November 2006
-
செல்லா டூல்பாரில் பார்த்த அதே தான் சற்று மேம்படுத்தப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்
கூறுவது: balasubramanian m | Tuesday, 14 November 2006
-
பட்டைக்கு நன்றி! ஆனால் தீநரியில்(பயர் பாக்ஸ்) ரேடியோ பாட மாட்டேங்கிறது. ஏன் தலிவா?
கூறுவது: யெஸ்.பாலபாரதி | Tuesday, 14 November 2006
-
நன்றி சிறில், பாலசுப்பிரமணியன், பாலபாரதி
//பதிவிறக்குவதில் பிரச்சனை இருக்கிறது.//
பதிவிறக்கப் பக்கத்தில் வலது புறம் உள்ள download Toolbar சுட்டியில் தானே முயற்சித்தீர்கள்! சரியாகத்தானே இருக்கிறது. மீண்டும் முயற்சித்துப் பாருங்கள் அலெக்ஸ்.
பாலா, எனது கணினியின் ஒலிவசதியில் சிறிது பிழைபட்டிருப்பதால் நான் அதை சரியாக சோதிக்க முடிவில்லை. விரைவில் அதை சோதித்து சரியாக்கி விடுகிறேன். தானாகவே அது அப்டேட் ஆகிவிடும்.
திரட்டிகள் எப்படித் தெரிகிறது? பயனுள்ளதாக உள்ளதா?கூறுவது: சிந்தாநதி | Tuesday, 14 November 2006
-
இணைய வானொலியைப் பொறுத்த வரை நீங்களே கூட ஏதாவது நிலையத்தை இதில் (add stations) இணைக்க முடியும். இணைத்தும் சோதித்துப் பாருங்கள்.
கூறுவது: சிந்தாநதி | Tuesday, 14 November 2006
-
கருவிப் பட்டையை பதிவிறக்கி பயன்படுத்தி வரும் நண்பர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு/பரிசு!
கருவிப் பட்டையில் உள்ள Flash பகுதியில் உங்களுக்கான அறிவிப்பு/பரிசு விவரம் உள்ளது!கூறுவது: சிந்தாநதி | Saturday, 18 November 2006
-
கருவிப்பட்டை புதிய வசதிகளுடன் புதுப்பிக்கப் பட்டுள்ளது.
நண்பர்கள் சோதித்து கருத்துக் கூற வேண்டுகிறேன்.கூறுவது: சிந்தாநதி | Thursday, 23 November 2006
-
IE மற்றும் firefox இரண்டிலுமே ரேடியோ பாடவில்லை. புதிய பட்டையும் அப்படியே தான் இருக்கு. சோதிக்கவும்.
:-((((கூறுவது: யெஸ்.பாலபாரதி | Thursday, 23 November 2006
-
பாலா நீங்களே ஒரு ரேடியோ அல்லது podcasting url கொடுத்து சோதித்துப் பாருங்கள்.
திரட்டிகள் மின்னஞ்சல் போன்றவை சரியாக இயங்குகிறதா?கூறுவது: சிந்தாநதி | Thursday, 23 November 2006
-
அது எல்லாம் ஓகே தல!
ஆனா எனக்கு இந்த ரேடியோ உரல் எல்லாம் தெரியதே..?
:-(கூறுவது: யெஸ்.பாலபாரதி | Thursday, 23 November 2006
-
என்ன இப்படி சொல்லிட்டீங்க
கூகுள் ஆண்டவர்கிட்ட internet radio, tamil podcast இந்த மாதிரி கேட்டுப் பாருங்க அவர் வரம் தந்தருள்வார்!கூறுவது: சிந்தாநதி | Thursday, 23 November 2006
-
dear sinthanathi iam new to tamilblogs so i dont hav good knowledge in rss fed and atom if u free can u tell to me wat is that ? and for a example if i click add feed to button wats happen ? where can i reed ? plz help me
i am expecting ur reply
hindhuகூறுவது: hindhu | Sunday, 17 December 2006
-
hindhu வாங்க
நீங்கள் add feed பட்டனில் உங்கள் மௌசை கொண்டு போகும் போது ஒரு பட்டியல் விரியும். அதிலுள்ள ஏதேனும் ஒரு திரட்டியில் நீங்கள் ஒரு கணக்கு துவங்கி உங்களுக்கு விருப்பமான பல rss atom செய்தியோடைகளை அதில் சேகரித்து நேரடியாக அங்கு சென்று படித்துக் கொள்ளலாம். நீங்கள் சேகரித்த செய்தியோடைகளில் புதிய இடுகைகள் வரும்போது அங்கே தெரியும்.
என் பதிவின் செய்தியோடை அதில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதால் அந்த பட்டனில் விரியும் நீங்கள் கணக்கு வைத்துள்ள திரட்டியின் சுட்டியைச் சொடுக்கி உங்கள் திரட்டியில் நேரடியாக இடுகையைச் சேர்க்கலாம்.
மேலேயுள்ள கருவிப்பட்டையும் நேரடியாக பதிவுகளை திரட்டித்தரும்.கூறுவது: சிந்தாநதி | Sunday, 17 December 2006
-
thank u sinthanathy for help me i also hav i blog how i a add a " add fed" like u ?
கூறுவது: hindhu | Sunday, 17 December 2006
-
http://www.feedbutton.com/
என்ற தளத்தில் உங்கள் வலைப்பதிவு url கொடுத்து அந்த பட்டனுக்கான கோடிங் பெற்று பதிவில் இணைக்க வேண்டும். அவ்வளவே!கூறுவது: சிந்தாநதி | Sunday, 17 December 2006
-
அன்புடையீர்,
உங்கள் புதிய கருவிப்பட்டையைப் பற்றி அறிந்து பதிவிறக்கம் செய்து பார்த்தேன். அருமையான முயற்சி. எங்களின் தளமான சென்னைநூலகத்திற்கும் இணைப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
தங்களின் இந்த கருவிப்பட்டையை பதிவிறக்கம் செய்யவதற்கான இணைப்பை வழங்கினால், அதனை எங்கள் தளத்தில் வெளியிட்டு மேலும் பலர் இதன் பயனை அனுபவிக்க இயலும்.
உங்கள் முயற்சி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்
(ஒரு வேண்டுகோள்: இக்கருவிப் பட்டையின் அடுத்த பதிப்பை வெளியிடும் போது, எங்கள் தளத்திற்கான இணைப்பை
http://www.chennailibrary.com/ebooks/ebooks.html
என கொடுத்துள்ளதற்கு பதிலாக
http://www.chennailibrary.com
என்று மட்டுமே கொடுத்தால் பார்வையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் முதல் பக்கத்தில் எங்களின் வெளியீடுகள் குறித்த உடனடி தகவல்கள் கிடைக்கும் என்பதே.)
அன்புடன்
கோ.சந்திரசேகரன்
www.chennainetwork.com
www.chennailibrary.com
www.madurainetwork.com
www.kovainetwork.com
www.trichynetwork.comகூறுவது: கோ.சந்திரசேகரன் | Monday, 01 January 2007
-
கோ.சந்திரசேகரன் வருகைக்கு நன்றி
கருவிப்பட்டையின் பதிவிறக்க முகவரி
http://tamilblogs.ourtoolbar.com/
தமிழ்நூலகங்கள் என்ற தலைப்பிலேயே தங்கள் தளம் இந்தக் கருவிப் பட்டையில் இணைக்கப் பட்டுள்ளது. எனவே தான் நேரடியாக நூற்பட்டியல் பக்கத்திற்கான இணைப்பு வழங்கப் பட்டுள்ளது. அதிலிருந்தே பிற பக்கங்களுக்கு செல்ல இயலுமே. முகப்புப் பக்கமானது நூற்பட்டியலைவிட பிற செய்திகளையே மையப்படுத்தி பிரதானமாக கொண்டிருப்பதால் தான் இவ்வாறு இணைக்கப் பட்டது.
இது குறித்து தங்கள் கருத்தை தெரிவிக்கவும்.கூறுவது: சிந்தாநதி | Monday, 01 January 2007
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



