சரத்குமார் புதுக்கட்சி! | H | விமர்சனங்கள் இ-ம் [2]

Wednesday, 08 November 2006

2. எனக்கு-16 உனக்கு-12 ♂♀

-இளமைத்தொடர்-

♂♀

செல்வனின் தகப்பனார் ஒரு கூலித் தொழிலாளி. கல்லுடைக்கப் போன அவரைக் காசம் பற்றிக் கொண்டது. தொடர் சிகிட்சையிலிருந்த அவரால் வேலைக்குப் போக முடியவில்லை. ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த செல்வனின் அண்ணனும் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த செல்வனும் படிப்பை நிறுத்தி பக்கத்து சிறுநகரில் ஒரு ஹோட்டலில் வேலைக்கமர்த்தப் பட்டார்கள்.

மூன்றாண்டுகள் கழித்து ஒருநாள் எதேச்சையாக அந்த ஹோட்டலுக்கு சாப்ப்பிட வந்த அவனது பழைய ஆசிரியர் கதிர்வேலு பதறிப்போய் அவர்களை அழைத்துக் கொண்டு போய் அவன் தகப்பனாரிடம் வாதாடினார். இப்போது ஓரளவு குணமாகி விட்ட அவரும் பிள்ளைகள் படிக்க ஒப்புக் கொண்டார். ஆனால் மூன்றாண்டுகள் கடந்த நிலையில் மறுபடி பள்ளிக்குப் போக மூத்தவன் பிரியப் படாததால் செல்வன் மட்டும் பள்ளியில் சேர்ந்தான். ஏற்கனவே படிப்பில் சுட்டியான அவன் இப்போது வயதும் ஏறிவிட கவனமாக படித்து வந்தான்.

அப்படி மூன்றாண்டுகள் கழித்து ஆறாம் வகுப்பில் சேர்ந்தபோது அவனது தோழர்கள் ஒன்பதாம் வகுப்பில் இருந்தார்கள். ஆனாலும் அவன் வயதையொத்த தோழர்கள் என்பதால் அவன் எப்போதும் அவர்களுடனே திரிந்தான். சகவகுப்பு மாணவர்களிடையே வயது காரணமாக சகஜமான நட்பு இல்லை.

அவன் படிப்பில் சுட்டி என்பதாலும் வயதிலும் தோற்றத்திலும் உள்ள முதிர்ச்சியாலும் ஏழாம் வகுப்பு படிக்கும்போது வகுப்பு மாணவர் தலைவனாக வகுப்பாசிரியரால் நியமிக்கப் பட்டான். இது எட்டாம் வகுப்பிலும் தொடர்ந்தது.Image and video hosting by TinyPic

oOo

தமிழாசிரியையின் தயவில் பல்லவியும் அவனும் அடிக்கடி சந்தித்துக் கொள்ள நேர்ந்தது. கட்டுரை நோட்டுகள் கொடுக்க, வாங்க, ஆசிரியை மறந்து வைத்த பர்சைக்கொடுக்க, என பல சந்தர்ப்பங்கள் அவனை அவளது வகுப்புக்குள் செல்ல வைத்தன. இதன் தொடர்ச்சியாக அவள் எங்கே பார்தாலும் அவன் முகம் பார்த்து சிரிக்கும் அளவுக்கு பரிச்சயமாகி விட்டிருந்தாள்.

வகுப்பறைக்கு வெளியே இப்படி ஒரு புன்னகையை ஒருமுறை அவள் சிந்திவிட்டுப் போன வேளை பரமன் அதைக் கண்டு விட்டான். அடுத்த வட்ட மேசை மாநாட்டில் விஷயம் இதைப் பற்றி தான் இருந்தது. அவள் அவனைக் காதலிப்பதாகத் திரி கொளுத்திப் பொட்டார்கள் தோழர்கள். மீசைப்பருவத்தின் தலைவாசலில் இருந்த செல்வனுக்குள் அது கிளுகிளுப்பை ஏற்றி விட்டது. அவர்கள் சொன்னதை அவன் ஆர்வத்தோடு கேட்டான்.

அதே காலகட்டத்தில் அவள் சில தினங்கள் பள்ளிக்கு வரவில்லை. அவள் பருவமடைந்து விட்டதாக தோழர்கள் தகவல் தந்தனர். அவனுக்குள் என்னவென்று புரியாத ஒரு கிறுகிறுப்பு. அடுத்து அவளைப் பார்க்கும்போது அவன் பார்வையில் கனவுகள் மிதந்தன. சில மாதங்கள் கனவிலேயே கடந்து போயின.

தோழர்கள் அவனை அதே கிறுகிறுப்பில் தொடர்ந்து வைத்திருக்க பிரியப் பட்டார்கள். அவர்கள் சொன்னபடி ஒரு காதல் கடிதம் எழுதப்பட்டது. அடுத்த நாள் மதியம் அவன் அதைக் கொடுப்பதாக ஏற்பாடு.

செல்வன் ஏக பரபரப்பில் இருந்தான். பாக்கெட்டில் கடிதம். அன்று மட்டும் நேரம் மிக மெதுவாக ஓடுவதாகத் தோன்றியது அவனுக்கு. ஆசிரியர்கள் வகுப்பறையில் அன்று பாடம் நடத்தியதெல்லாம் அவன் காதில் ஏறவேயில்லை. எப்படியோ மதிய இடைவேளைக்கு மணியடித்தது.

உணவருந்த மறந்து செல்வன் காத்திருந்தான். பல்லவி சாப்பிட்டு முடித்து கையலம்ப வெளியே வந்த நேரம் அவள் முன்னே போய் நின்றான். அவள் பார்வையிலேயே 'என்ன?' என்றாள்.

செல்வன் பதில் பேசாமல் பாக்கெட்டிலிருந்து கடிதத்தை எடுத்து நீட்டினான். அவனது நிற்பும் பார்வையும் அவளுக்கு ஏதோ புரிவது போலிருந்தது. அவள் அதை வாங்காமல் திரும்பினாள்.

அவள் பின்னோடு சென்ற செல்வன் சட்டென்று அவள் சாப்பாட்டுக் கூடையில் கடிதத்தை இட்டான். அதே நேரம் ஆசிரியை உள்ளே நுழைந்தார்.

பல்லவி பதறி தட்டிவிட கடிதம் பறந்து ஆசிரியையின் காலடியில் போய் விழுந்தது. கீழே விழுந்த கடிதத்தை ஆசிரியை எடுத்துப் பிரித்தார்.


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

09:00 Posted in வாழ்வியல் | Permalink | Comments (1) | Email this | Tags: தமிழ்ப்பதிவுகள் |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. தொடரும்...

    கூறுவது: சிந்தாநதி | Wednesday, 08 November 2006

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)