☜ செவ்வாய்மொழி என்னமொழி? | H | *விமர்சனங்கள் இலவசம்! ☞
Wednesday, 01 November 2006
ஹாலோவீன்...ஹாலோவீன்!
அக்டோபர் 31
சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற்கோயிலுக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளை பிடிக்க இராணுவம் பொற்கோயிலுக்குள் புக அனுமதி வழங்கியதால். தொடர்ந்து இடம்பெற்ற படை நடவடிக்கைகள் காரணமாக தங்கள் மதத்தை களங்கப்படுத்திவிட்டதாக ஆத்திரம் கொண்ட சீக்கியர்களின் கோபம் இந்தியப் பிரதமர் இந்திராவை பலிகொண்டது. சீக்கியர்களான, அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே 31 அக்டோபர் 1984 இல் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் விளைவாக எழுந்த கலவரத்திலும் காங்கிரஸ் தலைவர்கள் சிலரின் வெறித்தனமான நடவடிக்கையாலும் நாடு முழுவதும் ஏராளமான அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்தப் பயங்கரங்களின் நினைவு நாளில் உலகம் ஹாலோவீன்? கொண்டாடுகிறது...?!
நவம்பர் 1
இன்றைய தமிழ் நாடு, வடக்கு கேரளாவின் மலபார் பகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரை மற்றும் ராயல்சீமா பகுதிகள், மற்றும் கர்னாடகத்தின் பெல்லாரி, தெற்கு கன்னடா, மற்றும் உடுப்பி பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சென்னை மாகாணமாக இருந்தது. 1956 நவம்பர் 1-ம் நாள் மொழிவழி நாநிலங்கள் அமைக்கப்பட்டு இன்றைய தமிழ்நாடு, ஆந்திர, கேரள, மைசூர் மாநிலங்கள் உருவாகின. எனினும் தமிழ் மாநிலத்தின் பெயர் பெயர் அப்போது சென்னை மாநிலம் என்றே இருந்தது. அது பின்னர் 14 ஜனவரி 1969 அன்று தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
மொழிவழி மாநிலமாகப் பிரிக்கப்பட்டு தமிழ்மாநிலம் உருவானதன் பொன்விழா தினம் இன்று.
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
05:45 Posted in *பொதுவியல் | Permalink | Comments (0) | Email this
| Tags: தமிழ்ப்பதிவுகள் |
del.icio.us
|
|
Digg
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



