துக்ளக் சோவுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் | H | பதிவு சோதனை

Wednesday, 15 February 2006

தமிழ் மென்பொருள்கள்

ஜனவரி 16-31 தமிழ் கம்பியூட்டர் இதழுடன் தமிழ் மென்பொருள் குறுவட்டு ஒன்று வழங்கப்பட்டது. அதில் Panacea நிறுவனம் தயாரித்த, தமிழ்க்கணினி ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள்ள பல தமிழ் மென்பொருட்களும் எழுத்துருக்களும் அவற்றின் source code உடன் உள்ளன.

1. முகவரி

தமிழில் முகவரித்தொகுப்பு மென்பொருள்.

இதில் நமக்கு வேண்டிய முகவரிகளை குடும்பம், தனிப்பட்ட, நண்பன், அலுவலகம், சகதோழர், பொதுவானவை, அனைத்தும் என முறைப்படுத்தி சேகரிக்க முடிகிறது. திருமணநாள் நினைவூட்டல், பிறந்தநாள் நினைவூட்டல் மற்றும் பிற நினைவூட்டல்களை தனித்தனியாக பதிந்து வைக்க வசதி செய்யப் பட்டுள்ளது. முகவரிகளை ஏறுவரிசை இறங்கு வரிசையில் வைக்கவும் தேடவும் வசதி உள்ளது. முகவரிகளை தமிழ்99 முறை, தட்டச்சு முறை, ஒலியியல் முறைகளில் தட்டச்சு செய்ய முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

2. புலவன்-பாலம்

இது தமிழ் ஆங்கில அகராதியாகும்.

இதிலுள்ள புலவன் பகுதி தமிழ்-தமிழ் அகராதி. இது சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் வெளியிட்டுள்ள கழகத்தமிழ் அகராதியின் மென்பொருள் வடிவம். சொற்களை தமிழ்99 முறை, தட்டச்சு முறை, ஒலியியல் முறைகளில் தட்டச்சு செய்து தேடலாம்.

பாலம் என்பது தமிழ்-ஆங்கில அகராதி. இவற்றில் புதிய வார்த்தைகளை நாமே சேர்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

3. சங்கம் புரோ

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கான கணக்கியல் மென்பொருள் இது.

மகளிர் சுய உதவிக் குழுவின் கணக்கு வழக்குகளையும், உறுப்பினர்களின் பட்டியல், உறுப்பினர்களின் சேமிப்பு, உறுப்பினர்களின் கடன் பெறுதலையும், கடன் திருப்பிக் கொடுத்தலையும், உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கும் விவரங்களையும் இதில் பதிவு செய்யலாம். கணக்கு அறிக்கை பெற்றுக்கொள்ளலாம்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சுய உதவிக் குழுக்களுக்கு அளிக்கும் பயிற்சி விவரங்களையும் பதிவு செய்து தங்களது தேவைக்கேற்ப அறிக்கைப் பெற்றுக்கொள்ளலாம்.

4. செல்வம்

தமிழ் கணக்குப் பதிவியல் மென்பொருள்.

இது கடைகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கான் கணக்குகளை பராமரிக்க உதவும் மென்பொருள். இதன் மூலமாக ஒருவர் தனது நிறுவனத்தின் கணக்குகளை அல்லது நிறுவனத்தின் வெவ்வேறு பிரிவுக்கான கணக்குகளைப் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த தகவல்களிலிருந்து ரொக்கக் கணக்கு, பேரேடுகள், குறிப்பேடுகள், இருப்பாய்வு, பெறுதல் மற்றும் செலுத்துதல், இலாப நட்டக் கணக்கு மற்றும் இருப்புநிலை ஆகியவற்றை பிரி வாரியாகவோ அல்லது மொத்தமாகவோ பார்வையிட்டுக் கொள்ளலாம் அல்லது அச்சுப் பிரதியாக எடுத்துக் கொள்ளலாம். இது தவிர ரொக்க மீதிப் பணம், தேய்மானம், வரவு செலவுத் திட்டக் கணக்கு வரவு செலவுத் திட்ட ஒப்பிடல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். விலையுயர்ந்த கணக்கியல் மென்பொருள்களுக்கு நிகராக தமிழிலேயே வடிவமைக்கப் பட்டுள்ள சிறந்த மென்பொருள்.

5. வள்ளுவன்

இது தமிழ் ஆவணக்காப்பு மென்பொருள்

இந்த மென்பொருளில் கோப்புகள், செய்தித்தாளில் வந்த செய்திகள், புத்தகங்கள் பெறுதல் கொடுத்தல் பற்றிய தகவல்களை குறிப்பு வார்த்தைகளைக் கொண்டு ஆவணப்படுத்திக் கொள்ளலாம்.
ஆவணப்படுத்தியக் கோப்புகளை குறிப்பு வார்த்தைகளைக் கொண்டு தேடிக்கொள்ளலாம். கணக்கற்ற கோப்புகளையும், செய்தித் தாள் செய்திகளையும் ஆவணப்படுத்திக் கொண்டு ஒரு குறிப்பு வார்த்தையைக் கொண்டு அது தொடர்புடைய அத்தனை ஆவணங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த மென்பொருளில் வெறும் செய்திகளை மட்டுமல்லாமல் அதன் சம்பந்தப்பட்ட படங்களையும், ஒலி, ஒளிப் படங்களையும் சேகரித்து வைத்து அதைத் திரும்பப் பார்வையிடவும் முடியும்.

6. வலையோடி

இது ஒரு வலை உலாவி

இது நெட்ஸ்கேப் நேவிகேட்டரின் தோற்றத்தில் இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ள வசதிகளோடு பயர்பாக்ஸ் உலாவியில் உள்ளபடி இணையப் பக்கங்களை அடுக்கிப்படிக்க முடிகிறது. நேவிகேட்டரில் உள்ளது போன்ற sidebar பல வசதிகளுடன் உள்ளது.

7. R4U

இந்த மென்பொருளில் தங்களுக்குத் தேவையான கோப்புகளை தமிழில் வடிவமைத்துக் கொள்ளலாம். இதில் Microsoft Word மென் பொருளில் உள்ள அனைத்து வசதிகளும் உள்ளது. இதன் மூலமாக Print preview செய்தல், Printout எடுத்தல், படங்களை உள்ளே சேர்த்தல், Alignment, Bullet மற்றும் Number உள்ளீடு செய்தல் எழுத்தின் வண்ணம் மற்றும் background வண்ணத்தை மாற்றுதல் டேபிள்களை உள்ளீடு செய்தல் போன்றவற்றை எளிதாகச் செய்ய முடியும். இதில் ஆங்கிலம் மற்றும் தமிழில் எளிதாக உள்ளீடு செய்யலாம். இதில் ஐந்து வகையான தமிழ் விசைப்பலகை இயக்கி உள்ளது. அவை Typewriter,Tamilnet 99,Romanised,Inscript,Modern Typewriter. இந்த மென்பொருளின் குறைபாடு என்பது இதில் tam தவிர யூனிகோடு உள்ளிட்ட பிற எழுத்துருக்களை பயன்படுத்த முடிவதில்லை.

8. Sarathy

இது tam, tab எழுத்துருக்களை விண்டோஸ் செயலிகளில் தட்டச்ச உதவும் விசைப்பலகை இயக்கி.

9. தமிழ் ஓலை

இந்த மென்பொருளில் சாதாராண வகையில் தங்களுக்குத் தேவையான கோப்புகளை தமிழில் வடிவமைத்துக் கொள்ளலாம். இந்த மென்பொருளில் மூன்று வகையான தமிழ் விசைப்பலகை இயக்கி உள்ளது. அவை 1. Monolingual -TAM, 2. Bi-Lingual - TAB, 3. Bi-Lingual - TISCII.

மற்றும் ஆங்கிலத்தில் கோப்புகளை வடிவமைக்கவும் இந்த மென்பொருளில் வசதி உள்ளது. வடிவமைத்த கோப்புகளை இடது, வலது, மைய வடிவங்களில் அமைத்துக் கொள்ளலாம்.
இந்த மென்பொருளில் TAM எழுத்துருவில் உள்ள கோப்புகளை TAB எழுத்துருவிற்கு மாற்றிக் கொள்ளவும், TAB எழுத்துருவில் உள்ள கோப்புகளை TAM எழுத்துருவிற்கு மாற்றிக் கொள்ளவும். TISCII எழுத்துருவில் உள்ள கோப்புகளை TAB எழுத்துருவிற்கு மாற்றிக் கொள்ளவும். TAB எழுத்துருவில் உள்ள கோப்புகளை TISCII எழுத்துருவிற்கு மாற்றிக் கொள்ளவும் முடியும்.

10. எழுத்துரு

இவை தவிர இத்தொகுப்பில் உள்ள 200 tam எழுத்து வடிவங்களும், 50 tab எழுத்து வடிவங்களும் DTP மற்றும் அச்சுத்துறையில் உள்ளவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடியவை.

இத்தொகுப்பில் உள்ள மென்பொருள்கள் மற்றும் எழுத்துருக்களில் எந்த மேம்பாட்டையும் செய்ய தமிழ் மென்பொருள் ஆர்வலர்களுக்கு உதவக்கூடிய வகையில் இவற்றின் source code கூடவே வழங்கப்பட்டிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

21:55 Posted in கணித்தமிழ் | Permalink | Comments (4) | Email this |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. என் settingsல் என்ன தப்பு என தெரியவில்லை. நேரமிருந்தால் திருத்தவும்.

    http://photos1.blogger.com/blogger/1197/398/1600/Firefox.jpg


    http://enmanam.blogspot.com/2006/04/firefox.html

    கூறுவது: கார்த்திக் | Tuesday, 18 April 2006

  2. மிகவும் நண்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்!

    கூறுவது: சுபாஸ் | Sunday, 24 February 2008

  3. தரவிறக்க முடியாதா ?

    கூறுவது: maya | Sunday, 24 February 2008

  4. //தரவிறக்க முடியாதா ?//

    இணையதளத்தில் சோர்ஸ்கோடு உட்படனைத்தும் பதிவிறக்கும் வகையில் தான் இருந்தன...தற்போது தளமே செயல்படவில்லை போலிருக்கிறது :(

    கூறுவது: ☆ சிந்தாநதி | Sunday, 24 February 2008

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)