Saturday, 28 June 2008

❒ புரூஸ்லீ ரசிகர்களுக்கு...

வாய்ப்புகள் தாமே வராது, நாம்தான் உருவாக்க வேண்டும்

‘‘இருவரும் சண்டை போடுவோம்; நான் ஜெயித்தால், நீ உன் பள்ளியை இழுத்து மூடிவிட வேண்டும். நீ ஜெயித்தால், நான் சொல்லிக் கொடுப்பதை நிறுத்திக்கொள்கிறேன். என்ன, சவாலுக்குத் தயாரா?’’ என்று கொக்கரித்தார் குங்ஃபூவில் புகழ்பெற்ற ஆசிரியரான வோங்க் ஜாக்மென்.

அமெரிக்காவின் ஆக்லாந்து நகரில் புதிதாகத் தற்காப்புக் கலைகளைக் கற்றுத் தரும் பள்ளியைத் திறந்திருந்த புரூஸ்லீ, எவ்விதத் தயக்கமும் இன்றி, சவாலுக்குச் சம்மதித்தார்.

சண்டைக்கு வந்து, பத்தே நொடியில் தோல்வியைத் தழுவினார் வோங்க். ஒரே நாளில், அமெரிக்கா மற்றும் சீனாவில் லீ&யின் புகழ் கிடுகிடுவெனப் பரவியது.

‘‘என்ன தைரியத்தில் அவருடன் மோத ஒப்புக்கொண்டீர்கள்?’’

நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘நான் தத்துவத்தைப் பாடமாகப் படித்திருக்கிறேன். வாய்ப்புகள் தாமே வராது, நாம்தான் உருவாக்க வேண்டும் என்பதை அறிவேன். அதனாலேயே வெற்றி, தோல்வி பற்றிக் கவலை இன்றி, நானும் என் கலையும் புகழ்பெற இந்த வாய்ப்பை உருவாக்கிக்கொண்டேன்’’ என்றார் புரூஸ்லீ. 25 வயது வரை ஒரு சாதாரண தொலைக்காட்சி நடிகராக இருந்து வந்த புரூஸ்லீ, உலகப் புகழ் பெற்றது அதன் பிறகே!

சான்பிரான்சிஸ்கோவில் ஒரு சீனத் தம்பதியரின் மகனாக, 1940&ல் பிறந்தார் புரூஸ்லீ. குடும்பம் சீனா திரும்பியதும், குழந்தை நட்சத்திரமாகப் பல நாடகங்களில் நடித்தார்.

பின்னர், குங்ஃபூ பள்ளியில் சேர்ந்து தற்காப்புக் கலையையும், ‘ச்சாச்சா’ எனப்படும் டான்ஸையும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். 18&வது வயதிலேயே பாக்ஸிங் சேம்பியன்ஷிப் வெற்றி. இதையடுத்து, புரூஸ்லீ அடிக்கடி தெருச் சண்டைகளில் இறங்கி, போலீஸ் பிரச்னை ஏற்படவே, பெற்றோர் அவரை சான்பிரான்சிஸ்கோ அனுப்பினர்.

அங்கே ஓர் உணவகத்தில் பகுதி நேர வேலை பார்த்தபடியே, உயர்நிலைப் படிப்பை முடித்த புரூஸ்லீ, வாஷிங்டன் யூனிவர்சிட்டியில் தத்துவம் படித்தார். கூடவே, சீனத் தற்காப்புக் கலையை மற்றவர்களுக்கும் கற்றுத் தரத் தொடங் கினார்.

ஓரிரு நொடியிலேயே வெற்றிபெறும் லீயின் ‘ஜீட் க்யூன்டோ’ என்ற புதிய சண்டை முறைக்கு சீனாவில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இடையில், ‘சினிமாவில் நடிக்கத் தயாராக இருக்கிறேன்’ என அறிவித்தார் புரூஸ்லீ. கலையை மறந்து, சினிமாவில் நடிக்க அலைகிறார் என விமர்சனங்கள் எழுந்தன. ‘‘வாய்ப்புகள் தாமே வராது, நாம்தான் உருவாக்க வேண்டும். சினிமா மூலமே இந்தக் கலை இன்னும் பெரும் புகழடையும்’’ என்று உறுதியுடன் சொன்னார் லீ.

1971ல் ‘தி பிக் பாஸ்’ வெளியாகி, உலகெங்கும் சக்கைப்போடு போட்டது. அதன்பின்னர் வெளியான ‘ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி’, ‘ரிடர்ன் ஆஃப் த ட்ராகன்’, ‘என்டர் தி ட்ராகன்’ எனப் பல படங்கள் வசூலில் சாதனை படைத்தன. அவரது கனவுப் படமான ‘கேம் ஆஃப் டெத்’ நடந்துகொண்டு இருந்தபோது, மர்மமான முறையில் இறந்துபோனார் புரூஸ்லீ. ‘‘அவர் எடுத்துக்கொண்ட வலி மருந்துகள் அலர்ஜியாகி, அவரது உயிரைப் பறித்துவிட்டன’’ என்று டாக்டர்கள் சொன்னாலும், 33வது வயதில் அவருக்கு ஏற்பட்ட மரணத்தின் மர்மம் இன்று வரை விடுபடவே இல்லை.

வாய்ப்புகள் வரும் என்று காத்திருப்பவர்கள் என்றும் வெற்றியைத் தொடவே முடியாது; வாய்ப்புகளை உருவாக்குபவர்களே சாதனையாளர்கள் என்பது புரூஸ்லீயின் வாழ்க்கை சொல்லும் மந்திரம்!

எஸ்.கே. முருகன்- விகடன்

*

புரூஸ்லீயின் திரைப்படம் (தமிழாக்கம்) விஜய் டிவியில் இந்திய நேரம் இரவு 10.30க்கு ஆரம்பித்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

17:20 Posted in சினிமா | Permalink | Comments (1) | Email this | Tags: Bruce Lee, Kung Fu, குங்பூ, புரூஸ் லீ, புரூஸ்லீ

Sunday, 22 June 2008

❒ நான் கடவுள் துளிகள்

உயிரை முடுக்கும் இசையில், உச்ச ஸ்தாயியில் மந்திர உச்சாடனைகள் முழங்க, ''ஹரஹரஹர மஹாதேவ்!'' என கங்கை நதிக் கரை கண் முன்னே விரிகிறது. ஆயிரமாயிரம் சாமியார்களுக்கு நடுவே 'ருத்ரன்' ஆர்யா, ருத்ர தாண்டவமாடும் காட்சி, உலக சினிமாவுக்கே புதுசு!Image and video hosting by TinyPic

''காசியில, கங்கை நதிக் கரையில ஒரு வாரம் திரிஞ்சா, வாழ்க்கை பற்றிய புரிதலே புதுசாகிடும் கிறது உண்மைதான்!'' 'நான் கடவுள்' படப்பிடிப்பை முழுமையாக முடித்து சென்னை திரும்பி இருக்கிற இயக்குநர் பாலா சின்னதாகப் புன்னகைக்கிறார். ''பிரசவ வேதனையை விடப் பெரிய அவஸ்தை, தன் படைப் பைப் பற்றித் தானே பெருமை பேசுவது'' என்று பேட்டிக்கு மறுத்தவரிடம், பிடிவாதம் பிடித்துப் பேசியதில் கொஞ்சம்...

யார் கடவுள்?

இது கடவுள் இருக்காரா, இல்லையாங்கிற ஆத்திகநாத்திக விளையாட்டு இல்லை. பக்திப் படம் எடுப்பது என் வேலை இல்லை. எவருடைய நம்பிக்கை களையும் காயப்படுத்தக் கூடாது என்பது என் இயல்பு. அந்த அடிப்படை நாகரிகத்தில் நான் எப்போதும் தெளிவா இருக்கேன். இது விளிம்பு நிலை மனிதர்களின் உலகம். ஒரு எளிய கேள்வியை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன். படம் பார்த்தால் பதில் கிடைக்கும். என்னை, உங்களை, நம்மை, நம் உலகத்தை அது இன்னும் தெளிவாக்கும்!

ரெண்டரை அடி உயரமே இருக்கிற என் பரமசிவனுக்கு 54 வயசு. அதுக்கும் கம்மியா இருக் கிற என் 30 வயசு பார் வதி, இதயக் கோளாறு உள்ள குழந்தை. உடம்பு போலவே, மனசும் இன்னும் குழந்தையாவே இருக்கு. இப்படி இன்னும் ரெண்டு டஜன் மனிதர்களை இதில் நடிக்க வெச்சிருக்கேன். பொறந்ததில் இருந்து இன்னும் வீட்டு வாசலைத் தாண்ட முடியாத கடவுளின் குழந்தைகளை, ஊர் உலகம் எல்லாம் பார்க்கட்டும்னு கூட்டிட்டு வந்திருக்கேன். மேனி அழகைச் சிவப்பாக்க சிவப்பு க்ரீம் பூசுகிற உலகமே, வந்து பாருங்கடா இவங்களையும்னு காட்ட வந்திருக்கேன்.

ஊனத்தோடு பொறக்கிறது சாபம் இல்லை; சத்துக் குறைச்சல். சரி, நல்ல சாப்பாடு நாலு வேளை சாப்பிட்டிருந்தா, ஊட்டச் சத் தோடு இருக்கலாம். ஒருவேளைச் சாப்பாட்டுக்கே வழி இல்லாத ஆத்தாளுக்குப் பொறந்தா, ஓரமாக் குழி தோண்டிப் பொதைச்சிரலாமா? உடம்பு, மனசு, மூளைன்னு எல்லாமே சிதைஞ்சிருக்கிற அந்த உயிர்களின் சிரிப்பே, இந்தப் பிரபஞ்சத்துக் கான ஆன்மிகம்!''

'ஒருமுறையா இருமுறையா பலமுறை
பல பிறப்பெடுக்கவைத்தாய்
புதுவினையா பழவினையா
கணம்கணம் தினம் எனைத்
துடிக்கவைத்தாய்
பிண்டம் என்னும் எலும்பொடு சதை
நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம்
ஐயனே... எம் ஐயனே!' ராஜாவின் பாடல் மனசை அறுக்கிறது.

''ஊர்ல உலகத்தில் எவ்வளவோ பிச்சைக்காரங்க இருக்காங்க. எதிர்ப்படுற எல்லா பிச்சைக்காரங்களுக்கும் நாம் உதவுவதில்லை. பாவப்பட்டோ, இரக்கப்பட்டோ, புண்ணியத் துக்கோ, நாம போடுற சில சில்லறைக் காசுகளோட, அவங் களை ஒதுக்கிடுறோம். 'அய்யா தர்மதொர, அம்மா மகராசி!'ன்னு ஒரு வாய் சோத்துக்காக நம்மிடம் கையேந்தி நிக்கிற பாவப்பட்ட மனிதர்களைப் பத்தி யோசிச்சி ருக்கோமா? பிச்சை எடுக்கிறது என்ன குலத் தொழிலா? அவங்க எப்படிப் பிச்சையெடுக்கிற நிலைமைக்கு வந்தாங்க?

பெத்த பிள்ளைங்களால விரட்டி அடிக்கப்பட்டு, வீதிக்கு வந்த துக்கம் தாங்க முடியாம, காவி வேட்டிக் கட்டி கௌரவமா பிச்சையெடுக்கிறது எவனோன்னு போறோம்... அவன், நம்ம அப்பனா இருந்தா? மானத்தைக் காப்பாத்திக்க வழி தெரியாம, பிச்சையெடுக்கிற அவமானத்தோட அலையுற பொம்பளை, நம்ம அம்மாவா, அக்காவா இருந்தா? அப்பனோ, ஆத்தாவோ உடம்புத் திமிர்ல யாரோடவாவது ஓடிப் போக, ஆதரவுக்கு யாருமில்லாம, எச்சி இலையை நக்கித் திங்கிறது நம்ம புள்ளையா இருந்தா? அப்பத் தெரியும்ல அந்த வலி!

நரகலைத் திங்கிற நாய் மாதிரி ஒரு ஈனப் பொழப்பு. ஆனா, அந்த எளிய மனிதர்களிடம் இருக்கிற பண்பு, படிச்ச பல பெரிய மனுஷங் களிடம்கூட இல்லை என்பது நான் உணர்ந்த உண்மை!''

''ஆர்யாவின் தோற்றமும் பூஜாவின் மாற்றமும் பற்றிப் பேசலாமா?''

ஆங்... ருத்ரனா வர்றான் ஆர்யா. அவனை ஒரு ஜாலியான பையனா தான் பார்த்திருக்கு தமிழ் சினிமா. இதுல ஆர்யா, அவன் சினிமா வாழ்க்கையில அடுத்த கட்டத் துக்கு வந்துட்டான். உன்னதம், உன்மத்தம்னெல்லாம் சொல்வாங்கல்ல... அப்படி ஒரு உழைப்பு. ரெண்டு வருஷத்தில் வேற ஒரு ஆளா உருமாத்திட்டேன். க்ளைமாக்ஸ் ஃபைட் ஒண்ணை ஒரு முழு மாசமும் எடுத்தேன். ரெண்டே பேரு... காத்துல கை வீசுறதெல்லாம் கிடையாது. அடி ஒவ்வொண்ணும் நிஜமாவே விழும். மூஞ்சி முகரைஎல்லாம் பொளந்து, முட்டி பேந்துன்னு இதுவரைக்கும் சினிமா பார்த்திராத ஆக்ஷன்!

அம்சவல்லியா வருது பூஜா. சின்சியரான பொண்ணு! சிரிச்ச முகமாவே மொத்தப் படமும் முடிச்சுக் கொடுத்துச்சு. கடைசி வரைக்கும் தன் கஷ் டங்கள் எதையுமே காட்டிக்கலை. வலியும் ஜீவனுமான ஒரு கேரக்டரை, அப்படி ஒரு எனர்ஜியோடு செய்திருக்கு. தான் சினிமாவில் இருந்தேன்னு பெருமிதமா சொல்லிக்கிறதுக்கு, அதோட ஆயுசுக்கும் இந்த ஒரு படம் போதும்!

ஆர்யா, பூஜா போல என் கனவு மொத்தத்தையும் தன் கண்களில் சுமந்தவர் கேமராமேன் ஆர்தர் வில்சன். காசியில், ராஜாவின் பாடல் நாகராவில் ஓடியபோது, வந்து உட்கார்ந்த ஒரு வடநாட்டுச் சாமியார்... அந்த ஏழரை நிமிஷங்களும் வானம் வெறித்து, அருவி போலக் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார். பாடல் முடிந்ததும், என் தலை தொட்டு, 'இதோட அர்த்தம் எனக்குப் புரியும்' என்று சொல்லிட்டுப் போனார். மொழி தெரியாத உலகத்தையும் விழி கசியவிடுகிற ராஜா என்னோடு இருக்கார். அது போதும் எனக்கு!

''15 வருடங்கள்... மூன்றே படங்கள். நாலாவது படமான 'நான் கடவுள்' உருவாக்கத்திலும் இவ்வளவு காலம் எடுத்துக்கறீங்களே, உங்க ஃபிலிம் மேக்கிங் ஸ்டைலே இதுதானா?''

''தீபாவளி, பொங்கல்னு படம் ரிலீஸ் பண்ண நான் பட்டாசோ, கரும்போ இல்லை. எந்த விஷயத்தை எடுத்துக்கணும், அதை எப்படிச் செய்து முடிக் கணும்னு எனக்குத் தெளிவு கிடைக்காம, அதை நான் செய்ய மாட்டேன். இருநூறு லாரி, முன்னூறு கார்களைவெச்சு சேஸிங் படம் எடுக்கிற பரவ சத்தை, படபடப்பைவிட, ரெண்டு மனிதர்களைத் திண்ணை யில உட்காந்து பேசவெச்சே பிரமாதப்படுத்திட முடியும்னு நினைக்கிறேன். அது நான் நினைச்சவிதத்தில் கிடைக்கும் வரை, அந்த ரெண்டு பேரையும் திண்ணையைவிட்டு எழுந்திருக்க விட மாட்டேன். அவ்வளவுதான் விஷயம்!

இதோ, 'நான் கடவுள்' படத்தில், ஆர்யா, பூஜாவைத் தவிர, அத்தனை பேரும் புதுமுகங்கள். உடல் வளர்ச்சி இல்லாத, மன வளர்ச்சி இல்லாத மனிதர்கள். அவங்க கையில வசனப் பேப் பரைக் கொடுத்து, 'பேசுப்பா!'னு படம்பிடிக்க முடியாது. அவங்க ளோட பழகி, அவங்க நம்மோட பழகின்னு ஒவ்வொருத்தரையும் ஒரு குழந்தை போலப் பார்த்துக்கணும். ஆறு மாச ஷூட்டிங் முடிஞ்ச பிறகு, இப்போ அவங்க அத்தனை பேரும் என் குடும் பம்.

இன்னொரு பக்கம் காசி சாமி யார்கள். அகோரின்னு சொல்லப் படுகிற, நர மாமிசம் சாப்பிடுற சாமியார்களையும் நடிக்க வெச்சிருக்கேன். இப்படி ஒரு படத்தை உருவாக்குற வலியை, வார்த்தைகளில் புரியவைக்க முடியாது. ஏன்னா, இது வித்தி யாசமான படம்னு சொல்றதே பழைய வார்த்தையாகிப்போச்சு. இது நாம் கருணை காட்டாத, நம்மால் புரிந்துகொள்ளப்படாத, கடைசி மனிதர்களின் உலகம்!''

''சரி, கடவுளை எப்போ கண்ணுல காட்டுவீங்க?''

''கூடிய விரைவில்னு பொது வான வார்த்தைகளில் பொய் சொல்ல விரும்பலை. விஷயம் என்னன்னா, வித்தை பழகின அளவுக்கு நான் வியாபாரம் பழகலை. ஒரு வியாபாரி போலப் பேரம் பேசவும் எனக்குத் தெரியாது. இந்தப் படத்துக்கான செலவு, நினைச்சதைவிட, அதிகமாகிப் போச்சு! அத்தனையும் தவிர்க்க முடியாத செலவு. என் தரப்பில் இருந்து சில கோடிகளை வாங்கிப் போட்டு, படத்தை முடிச்சிருக்கேன்.

'ஹே ஜென்ம மாத்ரம் நா
ஹிதா அபி ஜென்ம நபவிஷ்யதி'னு சொல்வான் என் ருத்ரன். அப்படி ஒரு விடுதலையை வேண்டிக்கிற அளவுக்கு, இந்தப் படத்தை உருவாக்குவதில் உழைச் சிருக்கோம். இயல்பின் ஆழத்தையும் அதன் அர்த்தத்தையும் பிடித்துவிட்டேன் என்பதுதான் என் பெருமிதம்!''

#விகடனில் பாலா பேட்டி

*
அஜித் நடிக்க இருந்த படம் பாலாவுடன் மோதல் ஏற்பட்டு அவர் விலக ஆர்யா நாயகனானார்.
நாயகிக்கு பாவனா, கார்த்திகா என்றெல்லாம் பேசப்பட்டு பூஜாவில் முடிந்திருக்கிறது.
இரண்டு வருடங்களாக தாடி முடியுடன் ஆர்யா வேறு படங்களில் நடிக்க முடியாமல் சிக்கிக் கொண்டார்.
காசி நிர்வாணச் சாமியார்களும் அரவாணி ஒருவரும் உட்பட வித்தியாசமான பலரை இதில் நடிக்க வைத்துள்ளார் பாலா.

ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.
இளையராஜா இசையமைக்கிறார்.
சண்டைப்பயிற்சி : ஸ்‌ட‌ன்‌ட் ‌சிவா.
ஒளிப்பதிவு : ஆ‌ர்த‌ர் ‌வி‌ல்ச‌‌ன்.

காசியில் தொடங்கி தேனியில் முடிந்துள்ளது..
கிளைமேக்சில் நரமாமிசம் தின்னும் காட்சி இடம் பெறுவதாக செய்(வதந்)தி(?).

தயாரிப்பு சிவஸ்ரீ சீனிவாசன், தேனப்பன் தொடங்கி தற்போது பிரமிட் சாய்மீரா பொறுப்பேற்றுள்ளது.

06:40 Posted in சினிமா | Permalink | Comments (6) | Email this | Tags: பாலா, ஆர்யா, சினிமா

Thursday, 19 June 2008

❒ ரஜினியின் 20 அவதாரங்கள்

கமல் தசாவாதாரம் எடுத்தால் சும்மா விடுவார்களா ரஜினி பட இயக்குநர்கள்? குசேலன் படத்தில் நடிகராகவே நடிக்கும் ரஜினியை 20 விதமான வேடங்களில் ஒரே பாடல் காட்சியில் நடிக்க வைத்துள்ளாராம் பி.வாசு.

இந்தப் படத்தில் அஜித், விஜய், விக்ரம் கூட சில காட்சிகளில் நடிக்கப் போகிறார்களாம்.

மலையாளத்தில் மம்முட்டி-சீனிவாசன் இணைந்து நடித்த கதபறயும்போள் என்ற திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்த திரைப்படம் தமிழில் ரஜினி-பசுபதி நடிக்க 'குசேலன்' ஆகவும், தெலுங்கில் ரஜினி-ஜெகபதிபாபு நடிக்க 'கதாநாயகடு'வாகவும் வெளிவருகிறது.

மலையாளத்தில் சீனிவாசன் ஜோடியாக நடித்த மீனா தமிழில் பசுபதிக்கு ஜோடி சேருகிறார். நயன்தாரா, சினேகா உடபட பல நாயகிகள் ரஜினியுடன் நடித்திருக்கிறார்கள்

ஜூலை இறுதியில் குசேலன் வெளிவர இருக்கிறது.

Image and video hosting by TinyPic

12:05 Posted in சினிமா | Permalink | Comments (4) | Email this | Tags: ரஜினி, குசேலன், தசாவதாரம், rajini

Saturday, 14 June 2008

❒ தசாவதாரம் விமர்சனம் + விமர்சனங்கள்

தசாவதாரம்

Image and video hosting by TinyPicசோழர் காலத்து ரெளத்திரம் மிகுந்த வைணவ இளைஞன் முதல் ஜார்ஜ் புஷ் வரை 10 அவதாரங்களில் கம்பீரமாக வலம் வருகிறார் கமலஹாசன்!

இரண்டரை ஆண்டு கால எதிர்பார்ப்புடன் செல்லும் கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து சினிமா ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு 'தசாவதாரம்' படத்தின் துவக்கமே, சீட்டின் நுனிக்குச் செல்ல வைக்கிறது.

பனிரெண்டாம் நூற்றாண்டில் துவங்குகிறது கதை..! "சிவம் மட்டுமே கடவுள்; கோவிந்த பெருமாள் சிலையை அகற்றுங்கள்" என்று உத்தரவிடுகிறார், குலோத்துங்க சோழன். இது நடப்பது சிதம்பரத்தில்.

அப்போது, வெகுண்டெழும் ரெளத்திரம் கொண்ட வைணவ இளைஞன் ரங்கராஜன் நம்பி (கமல் நெ.1), சோழப் படை வீரர்களை பந்தாடுகிறான். அவனிடம், " 'ஓம் நமசிவாய' என்று சொன்னால் உயிர் பிச்சை; இல்லையேல் சிலையுடன் கட்டிக் கடலில் வீசப்படுவாய்" என்று சோழ மன்னன் சொல்ல, நம்பியும் "ஓம்" என்று ஆரம்பிக்கிறான். ஆனால், "நமோ நாராயணாய" என்று முடித்து, வீரச்சாவுக்கு ஒப்புக்கொள்கிறான்...

இப்போது 2004... அமெரிக்காவில் ஆராய்ச்சித்துறையில் முக்கிய விஞ்ஞானிகளுள் ஒருவராக பணிபுரிகிறார் கோவிந்த் (வேறு யார், கமல்தான்). அவர் வகிக்கும் ஆராய்ச்சிக் குழு, உலகை அழிக்கும் வைரஸ் கிருமி ஒன்றைக் கண்டுபிடிக்கிறது. அந்தக் கிருமியை நாச வேலைக்குப் பயன்படுத்துவதற்கு அக்குழுவின் தலைவர் முற்படுகிறார்.

இதையறிந்த கோவிந்த், வைரஸ் குப்பியை எடுத்துக் கொண்டு ஓடுகிறார்... ஓடுகிறார்.... அவரை அதிபர் புஷ்சின் உத்தரவுடன் எஃப்பிஐ ஒருபுறமும், கூலிப்படைகள் மறுபுறமும் துரத்துகின்றன. அந்தக் குப்பி, சிதம்பரத்துக்கு வந்து சேருகிறது...

இதற்கு இடையே, நிகழ்பவைதான் சுவாரஸ்யாமான திரைக்கதையும் கமலஹாசன்களின் அணிவகுப்பும்!

சோழர் காலத்து ரெளத்திர வைணவ இளைஞன், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், மனநிலை பாதித்த பாட்டி, ஜப்பானிய கராத்தே மாஸ்டர், பஞ்சாபி பாடகர், நியாயம் கோரும் தலித் இளைஞன், அமெரிக்க கொலை வெறியன்,

அப்பாவியாய் வார்த்தைகளை உதிர்க்கும் முஸ்லிம் இளைஞன், அசராத விஞ்ஞானி, தெலுங்குகார உளவுத்துறை அதிகாரி...

யப்பா... இவர்களில் எங்கே கமல் இருக்கிறார் என தேட வேண்டியிருக்கிறது. 'தத்ரூபம்' என்பதற்கு கமல் என்று பொருள் போலும்! ஃபேன்ஸி ட்ரெஸ் காம்பட்டிஷன் போல் ஆகிவிடாத ஒப்பனை மற்றும் வேறுபடுத்திக் காட்டுவதற்கான சிரத்தைக்காகவே, பத்து அவதாரங்களை தரிசிக்கலாம்.

வெவ்வேறு கதாப்பாத்திரத்துக்கும் அவற்றுக்கு உரிய பாவனை, சைகை மொழி, பேச்சு என ஒவ்வொன்றிலும் தனித்துவத்தைக் காட்டியிருப்பது மகத்துவம்.

பத்து கமலில், வைணவ இளைஞனும், தலித் இளைஞனும், பல்ராம் நாயுடும் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கிவிடுகின்றனர். கமலஹாசனின் கலையுலக வாழ்க்கையில், 'தசாவதாரம்' ஒரு மைல்கல்!

கமலஹாசனின் திரைக்கதை, அவரது அனுபவத்தையும், சினிமா அறிவையும் வெகுவாக வெளிப்படுத்துகிறது.

அடுத்து சபாஷ் பெறுபவர், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார். பத்து கதாப்பாத்திரங்களைக் குழப்பாமல், படத்தை நகர்த்தியதிலேயே அவரது முழு திறமையும் பளிச்சிடுகிறது.

கமலுக்கு உகந்த நாயகியாக, நடிப்பிலும் சளைக்காதவராக வரும் அசின், ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துவிடுகிறார்; வழக்கம்போல், ஊறுகாயாக காட்டப்பட்டுள்ளார், மல்லிகா ஷெராவத்.

நெப்போலியன், நாகேஷ், பி.வாசு, ரகுராம், சந்தான பாரதி, எம்.எஸ்.பாஸ்கர் என பலரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக பதிவு செய்துள்ளனர்.

பத்து அவதாரங்களுக்கு தனித்துவம் ஏற்படுத்தித் தந்த ஒப்பனையை பாராட்டியே ஆகவேண்டும். ரவி வர்மனின் ஒளிப்பதிவில் உலகத் தரம் மிளிருகிறது. படத்தின் கலை இயக்கம், படத்தொகுப்பு, நடனம், பாடல்கள், சவுண்ட் என அனைத்துப் பிரிவுகளிலும் முத்திரைப் பதிக்கப்பட்டுள்ளது.

கிராஃபிக்ஸை உருப்படியாக பயன்படுத்திய தமிழ்த் திரைப்படங்களில், தசாவதாரம் முன்னிலை வகிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இதற்கு 'சுனாமி' காட்சிகள் சான்று. ஹிமேஷ் ரேஷமையாவின் இசையில் 'முகுந்தா', 'கல்லை மட்டும் கண்டால்' ஆகியவை நச். தேவிஸ்ரீ பிரசாத்தின் ரீரெக்கார்டிங், ஸ்ட்ராங்க்!

கதைப்படி, பத்து கதாப்பாத்திரத்துக்கும் ஒரு நடிகர் மட்டுமே நடித்திருக்க வேண்டிய அவசியமில்லைதான். ஆனால், பத்து கதாப்பாத்திரத்திலும் ஒருவர் தான் நடித்தார் என்பது தெரியாத அளவுக்கு படமாக்கப்பட்டிருப்பதால், அந்தக் குறையைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை.

தொழில்நுட்பத்துக்கு இணையாக, கதைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தால், படம் முழுமையாக சோபித்திருக்குமோ என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியாது.

ஒட்டுமொத்தமாக பார்ப்போமோனால், எதிர்பார்த்தோருக்கு ஏமாற்றாமல் அளிக்கப்பட்ட தரிசனமே 'தசாவதாரம்'!

- எஸ்.சரவணன்
(மூலம் - வெப்துனியா)
யாகூ-தமிழ்

***

சமீபத்தில் தசாவதாரத்தை பார்த்து விமர்சிக்க வாய்ப்பு இல்லை ;)
அதனால் பிட் அடிச்சாச்சு.

தசாவதார விமர்சனங்களே சூடாக இருப்பதால் நிறைய பதிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. அவை அனைத்தையும் உடனுக்குடன் படிக்க இங்கே

*

10:20 Posted in சினிமா | Permalink | Comments (4) | Email this | Tags: கமல், தசாவதாரம்

Saturday, 22 March 2008

❒ தமிழ்நாயக ஆராதனையும் ஜெயமோகனும்

எம்.ஜி.ஆர். சிவாஜி என்னும் இரு தமிழ் சினிமா ஆளுமைகள் பற்றிய கட்டுரை ஒன்றை ஜெயமோகன் எழுதப்போக, அதை வைத்து பரபரப்பு விளம்பரம் தேடிக் கொண்டது ஆனந்த விகடன். இப்போது அந்த விவகாரம் பற்றிக் கொண்டு எரிகிறது.

தனது அனுபவத்தில் இந்த நடிகர்கள் குறித்து சினிமா ரசிகர்கள் பேசிக்கொள்ளும் விதம் குறித்தே ஜெயமோகன் எழுதியிருந்தார். சொல்லப்போனால் இதைவிட கீழ்த்தரமாகவே ரசிகர்கள் சினிமாக்காரர்கள் குறித்து பேசிக்கொள்வதை நானே கேட்டிருக்கிறேன். இப்போதைய மகாநாயகர்களைப் பற்றியும் இன்றளவும் இது போன்ற பேச்சுக்கள் ரசிகர்கள் மத்தியில் உண்டு. அப்படி ரசிர்கள் கருத்தாகவே அவரும் எழுதி இருந்தார். ஆனால் இதை எழுதி விட்டார் என்பதற்காக ஜெயமோகனை சினிமா உலகம் புறக்கணிக்க வேண்டும் என்றும் ஆனந்த விகடனுக்கு சினிமா சம்பந்தப்பட்ட செய்திகள் பேட்டிகள் கொடுக்க கூடாது என்றும் சினிமாக்காரர்கள் தீர்மானம் இயற்றி இருக்கிறார்களாம். வலைப்பதிவுகளுக்குத் தணிக்கை வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கை.

காவல்துறை அதிகாரிகளை, டாக்டர்களை, அமைச்சர்களை, வில்லன்களாக சித்தரித்து படம் எடுக்கும் இதே சினிமாக்காரர்களை சம்பந்தப் பட்டவர்கள் புறக்கணித்தால் என்ன ஆகும். சினிமாக்காரார்களுக்கு மருத்துவம் பார்க்க மாட்டோம் என்று மருத்துவர்களோ சினிமாக்காரர்களின் புகார்களை விசாரிக்க மாட்டோம் என்று காவல்துறையோ சொல்வது எத்தனை அபத்தமோ அது போன்ற நிலைதான் இவர்களின் முட்டாள்தனமும்.

படைப்புகள் குறித்து விமர்சனங்கள் இருந்தாலும் படைப்பிலக்கியவாதியாக தமிழ் இலக்கியச்சூழலில் தவிர்க்க முடியாதவர் ஜெயமோகன். அதே சமயம் ஜெயமோகன் எழுதும் பொதுவிமர்சனக் கருத்துகள் பல சமயங்களில் பொருட்படுத்தக்கூடியதாக இருப்பதில்லை.

இந்தக் குறிப்பிட்ட கட்டுரையைப் பொறுத்தவரை பெரிய முக்கியத்துவம் ஏதும் இல்லாவிட்டாலும் கூட அதில்பிழையான கருத்து எதையும் ஜெயமோகன் சொல்லி இருக்கவில்லை. ஆனால் ஆனந்த விகடனின் தேவையற்ற திரிபு அந்தக் கட்டுரைக்கு முக்கியத்துவத்தை உருவாக்கி விட்டது.

சினிமா நாயகர்களை ஆதர்ச நாயகர்களாக வரித்துள்ள தமிழ்சினிமா ரசிகனை வெறியேற்ற இவை போதுமானவை. உலக சினிமா சரித்திரத்தில் நடிகைக்கு கோயில் கட்டிய தமிழ்ப்பரம்பரை அல்லவா? வீட்டில் குடும்பமே பட்டினி கிடந்தாலும் ஆதர்சநாயகனின் கட்டவுட்டுக்கு பாலாபிசேகம் செய்யும் ரசிகப் பட்டாளம் இங்குண்டு.

ஆனாலும் ரசிகர்கள் போதுமான அளவில் இதை கண்டுகொள்ளாதது சினிமாக் காரார்களை வெறி கொள்ளச் செய்தது. இதன் விளைவுகளாகவே அவர்களின் மேற்கண்ட தீர்மானங்கள். 80 சதவீதம் ஆபாசக் குப்பைகளை உருவாக்கித் தள்ளும் தமிழ்சினிமா ஒரு எழுத்தாளனின் பேனாவுக்கு கடிவாளம் போட நினைக்கிறதாம். பத்திரிகைக்கு தடையாம். இணையத்துக்கு தணிக்கையாம்.

இருக்கும் தணிக்கையையே ஒழுங்காக பின்பற்றாத சினிமா மேதாவிகள் படைப்பிலக்கிய சிந்தனைக்கு தடைப்போடுவார்களாம். தங்களைத் தாங்களே புகழ்ந்து பாட்டெழுதிப் பூத்தூவிக் கொள்ளும் சினிமா நாயக அவதாரங்கள் இணைந்து இணையத்துக்கும் எழுத்தாளனுக்கும் எச்சரிக்கை விடுப்பார்களாம்.

வலைப்பதிவாளர் என்ற முறையில் ஜெயமோகன் மீது விடுக்கப் பட்டுள்ள இந்த கருத்தியல் வன்முறையை கண்டிக்கிறேன். வலைப்பதிவாளர்களை வம்புக்கிழுத்து கட்டற்ற இணையவெளியை கட்டுப் படுத்த நினைக்கும் கோமாளிக்கூட்டத்தை எச்சரிக்கிறேன்.

16:00 Posted in சினிமா | Permalink | Comments (12) | Email this | Tags: jeyamohan, ஜெயமோகன்

Wednesday, 19 March 2008

❒ ஏழாவது மனிதனின் மரணம்

ஏழாவது மனிதன் என்ற படத்தில் நாயகனாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமான ரகுவரன் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார்.

இவர் தனது நடிப்புத் திறமையால் தென்னிந்தியத் திரையுலகில் தனி இடம் பெற்றிருந்தார். நாயகனாக அறிமுகமானாலும் பின்னர் அவர் வில்லன் வேடங்களில் சக்கைப் போடு போட்டார். வில்லன் நடிப்புக்குத் தனி இலக்கணம் வகுத்து தனிப் பாதையில் நடந்து சென்ற ரகுவரன் பின்னர் குணச்சித்திர நடிப்பிலும் வெளுத்துக் கட்டி பன்முக நடிகர் என்ற பெயரைப் பெற்றார்.

முழுக்க முழுக்க பாரதி பாடல்களுடன் வெளியான ஏழாவது மனிதன் படத்தில் நாயகனாக அறிமுகமாகி ஒரு சில படங்களுக்குப் பின் பின்னர் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். புரியாத புதிர், ரட்சகன், முதல்வன், அமர்க்களம், பாட்சா என பல படங்களில் வில்லனாக முத்திரை பதித்தார். என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, அஞ்சலி போன்ற படங்களில் குணச்சித்திர நடிப்பில் கலக்கியவர் விஜய், மாதவன், விக்ரம் உள்ளிட்ட இப்போதைய நாயகர்களின் படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். எந்த வேடத்தில் நடித்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் ரகுவரனை தென்னிந்தியாவின் அல்பசினோ என்றழைத்தனர் அவரது ரசிகர்கள்.

இடையில் குடி, போதைப் பொருட்களுக்கு அடிமையாகி சீரழிந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டு கடுமையான சிகிச்சைக்குப் பிறகு அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட்டார்.

அதன் பிறகு மலையாள நடிகை ஜெயபாரதியுடன் அவர் குடும்பம் நடத்தி வந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

ரகுவரன் மீது அப்போது பிரபல நடிகையாக இருந்த ரோகிணி காதல் கொண்டார். நடிகை ரேவதியின் முயற்சியால் இவர்களது காதல் மேலும் வளர்ந்து, கல்யாணத்தில் முடிந்தது.

கல்யாணத்திற்குப் பின் ரகுவரன் முற்றிலும் மாறினார். அனைத்து கெட்ட பழக்கங்களையும் விட்டொழித்து விட்டு புதுமனிதனாக மாறி, தமிழ்த் திரையுலகில் மீண்டும் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கினார்.

ஆறு ஆண்டுகளாக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த இந்தக் காதல் தம்பதியின் வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது. ரகுவரன் மீண்டும் போதைப் பொருட்களை நாடத் தொடங்கியதால் அதிர்ச்சி அடைந்த ரோகிணி, தன் 5 வயது மகன் சாய்பிரசாத்துடன் தனியாகக் குடிபோய் விட்டார்.

மிதமிஞ்சிய போதை ரகுவரனின் உடலை அரிக்கத் தொடங்கியது. தீவிர சிகிட்சை மற்றும் நண்பர்களின் உதவியால் ஓரளவு மீண்டு படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

தொடக்கம் என்ற படத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வேடத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தில் ஒரு பாடலை தன் சொந்தக் குரலில் பாடியிருக்கிறார். 'எதுதான் முடியாது? உன்னால் எதுதான் முடியாது?..' என்று இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் பாடலை பாடிய ரகுவரனால் மட்டும் போதையை விடுத்து அதை சாதிக்க முடியாமல் போய்விட்டது.

05:35 Posted in சினிமா | Permalink | Comments (6) | Email this | Tags: raguvaran, ரகுவரன்

Friday, 07 March 2008

❒ இன்று முதல் உலகெங்கும்...

இன்டிபென்டன்ஸ் டே, டே ஆப்டர் டுமாரோ போன்றImage and video hosting by TinyPic பிரம்மாண்டமான படங்களை இயக்கிய ஹாலிவுட் இயக்குநர் Roland Emmerich இயக்கி உலகெங்கிலும் இன்று வெளியாகும் திரைப்படம் 10,000 B.C.



மெல்லிய காதல் இழையோடும் ஆக்ஷன் திரைப்படமாக பெரும்பாலும் இயற்கையான சூழ்நிலைகளில் எடுக்கப் பட்டுள்ளது



இந்த திரைப்படம் இன்றே தமிழிலும் வெளியாகிறது. தமிழகத்தில் 72 திரையரங்குகளில் தமிழ் பேசப்போகும் 10000 கி.மு. என்ற இந்த பிரம்மாண்ட படத்தின் டிரெய்லர் இதோ...



09:15 Posted in சினிமா | Permalink | Comments (2) | Email this

Tuesday, 15 January 2008

❒ சிவாஜி விழாவும் தமிழ்ப்பண்பாடும்

இப்போதைய சூடான செய்திகளில் ஒன்று சிவாஜி படவிழாவில் நடிகை ஸ்ரேயா அரைகுறை உடையணிந்து வந்தது பற்றி வழக்குப் போடப் பட்டிருப்பது குறித்தது.

சமீபத்தில் ஒரு இணைய தளத்தைக் காண நேரிட்டது. அதில் பல நடிகைகள் மேடை நிகழ்ச்சிகளில் குட்டைப் பாவாடையுடன் அமர்ந்திருக்கும்போது சில வக்கிரங்களால் மோசமான கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்சியளித்தன. இதில் படம் எடுத்தவர்களைக் குறை சொல்வதா? அல்லது பொது இடங்களில் அப்படிப் பட்ட உடைகளில் வரும் நடிகைகளைக் குறை சொல்வதா?

முதலில் நடிகைகள் ஏன் அப்படி வருகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

திரைப்படங்களில் நடிகைகள் எந்த அளவுக்கு அங்கங்கள் காட்ட வைக்க முடியுமோ அந்த அளவுக்கு ஆடைக்குறைப்பு செய்யப் படுகிறது. முதலில் கதைக்கு இது அவசியம் என்று வற்புறுத்தப் படுகிறார்கள். பின்னர் படத்தின் வெற்றிக்கு இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று நடிகைகள் அறிவுறுத்தப் படுகிறார்கள். படம் எடுப்பவர்கள், கதாசிரியர்கள், இயக்குநர்கள் அனைவரும் ஆண்களே!

படப்பிடிப்புகள் ஏராளமானவர்கள் முன்னிலையில் எடுக்கப் படுகின்றன. எனவே சம்பந்தப் பட்ட நடிகையின் உடல் தரிசனம் அங்கிருக்கும் அனைவருக்கும் கிட்டுகிறது. இப்படிக் கவர்ச்சியாக நடிக்கும் காட்சிகளின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியிடப் படுகின்றன. போஸ்டர்களாகவும் பேனர்களாகவும் காட்சிப் படுத்தப் படுகின்றன. அடுத்து இந்தக் காட்சிகள் திரைவழியே மக்களைச் சென்றடைகின்றன. அன்றாடம் தொலைக்காட்சி வழியாக இதே காட்சிகள் வீடுகளுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடுகின்றன.

இப்படி எல்லா விததிலும் திறந்த புத்தகமாக இருக்க வேண்டிய நிலையில் நடிகையாகிய பெண் தனது கூச்சங்கள் அனைத்தையும் உதறிப் போடுகிறாள். ஒரு நடிகையாக, தனது உடலழகைக் காட்ட வேண்டியது அவசியம் என்ற மனநிலை அவளுக்கு ஏற்படுகிறது. முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு என்று பொது இடங்களிலும் ரசிகர்களை மகிழ்விக்க அவள் உடலழகைக் காட்டும் உடைகளில் தோன்றுகிறாள்.

இதில் நடிகைகளைக் குற்றம் சொல்ல என்ன இருக்கிறது? கலாச்சாரக் காவலர்கள் செய்ய வேண்டியது, திரைப்படங்களில் பெண்ணைச் சித்தரிக்க வேண்டிய முறை பற்றிய பொறுப்புணர்வை முதலில் இயக்குநர்களுக்குக் கற்பியுங்கள். அதை விடுத்து சுயவிளம்பரத்துக்காக நடிகைகள் மீது பாய்வதில் அர்த்தமில்லை.

இந்த விழாவுக்கு காரணமான சிவாஜி என்ற திரைப்படத்தில் இதே ஸ்ரேயா நடித்துள்ள கைக்குட்டை துணியணிந்த காட்சிகளை விட அதிக கவர்ச்சியை மேடையில் காட்டி விடவில்லை. எல்லா நடிகைகளின் நிலையும் இதுதான்.

பொதுவாக இம்மாதிரி வழக்குப் போடுவது யாரென்று கவனித்தால் மதவாத உணர்வுள்ள ஆண்கள் தான் இதைச் செய்கிறார்கள். பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும் ஆணாதிக்க மனோபாவத்தின் நேரடி வெளிப்பாடு இது. உண்மையான அக்கறை இருந்தால் நடிகைகளை அப்படி நடிக்க வைக்கும் இயக்குநர்கள் மீது வழக்குப் போட்டு அவர்களைத் திருத்துங்கள்.

*
நடிகை குஷ்பு படப்பிடிப்புக்காக வைக்கப்பட்டிருந்த சிலைகள் முன் கால்மேல் கால்போட்டது, சானியா மிர்சா தேசியக் கொடிக்கு முன் காலை நீட்டியது என்பவையும் இதே போன்று வழக்குகளுக்கு ஆளாகி இருக்கின்றன. இந்த வழக்குகளைத் தொடர்ந்திருப்பவர்கள் யார் என்பதிலிருந்து நோக்கம் தேசபக்தியோ கடவுள் பக்தியோ அல்லாமல் மதவெறி சார்ந்த ஆணாதிக்கம் என்பதையும் வெளிப்படையாக புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரு அறிவுறுத்தல் என்பதற்கு மேல் எந்த அவசியமும் அற்ற நிகழ்வுகளை சுயஅரிப்புகளுக்கு இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

*

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பொங்கல் வெளியீடு இங்கே...

11:35 Posted in சினிமா , விமர்சனம் , விவாதம் | Permalink | Comments (13) | Email this | Tags: shivaji, shreya, sania mirza, kushbu, சிவாஜி, ஸ்ரேயா, குஷ்பு

Thursday, 18 October 2007

❒ சூப்பர்ஸ்டார்களின் காதலுக்கு மரியாதை

கதாநாயகர்கள் சினிமாவில் படாதபாடுபட்டு மற்றவர்களுடைய காதலை வாழவைப்பதும் காதலிக்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்வதும் பொதுவான சினிமா இலக்கணம். ஆனால் நிஜவாழ்க்கையில் அவர்களும் சாதாரண மனிதர்களாகவே இருந்து வருகிறார்கள். மற்ற விஷயங்களில் சாதாரண மனிதர்களைப்போல அவர்களுக்கும் உணர்வுகள் இருப்பதில் தவறில்லை. ஆனால் சினிமாவில் காதலையே பிரதானமாக சொல்லிவரும் சினிமா பிரபலங்கள் தங்கள் சொந்த வாழ்வில் அதை ஏன் கடைப்பிடிக்க மறுக்கிறார்கள்? சினிமாவில் கதாநாயகியின் அப்பா சாதியை அந்தஸ்தை காரணம் காட்டி காதலை தடுக்கும் போது பொங்கியெழும் கதாநாயக நடிகர்கள் தங்கள் சொந்த மகளின் காதலை வாழவைப்பதில் மட்டும் அதே அப்பா கதாபாத்திரமாக மாறி விடுகிறார்கள்.

Image and video hosting by TinyPicசமீபத்திய உதாரணம் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி.
சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, சிரீஷ் பரத்வாஜ் என்ற இளைஞனைக் காதலித்தார். அவர் வேறு சாதி என்பதால் சிரஞ்சீவி எதிர்ப்பு தெரிவித்தார். மகளைக் கல்லூரிக்கே போகவிடாமல் ஒரு வருடம் வீட்டுக்குள் பூட்டி வைத்தார்.

எதிர்ப்பின் வலிமை அதிகரிக்க அதிகரிக்க காதலின் வலிமையும் அதிகரிக்கும் என்ற இலக்கணப்படி காதல் வலிமைபெற்று சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா வீட்டை விட்டு ஓடிப்போய் தன் காதலனைக் கல்யாணம் செய்து கொண்டார்.

சிரஞ்சீவியின் செல்வாக்கு தங்களைப் பிரித்து விடும் என்ற பயத்தில் பத்திரிகையாளர்களைக் கூட்டி தங்கள் கல்யாணத்தை அறிவித்ததோடு போலீஸிடம் பாதுகாப்பும் கேட்டுள்ளனர்.

முன்பு தமிழக சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா பள்ளியில் படிக்கும் போது உடன் பயின்ற சிம்புவைக் காதலித்ததாக ஒரு கிசுகிசு பரவியதுண்டு. அதை திறம்படக் கத்தரித்துவிட்டார் சூப்பர்ஸ்டார். அதன்பிறகு சிம்பு மன்மதராசாவாக உலா வந்ததும் அதே ஐஸ்வர்யா சிம்புவுக்குப் போட்டியாகவே தனுஷைக் காதலித்ததும் இரண்டாவது காதலை வேறு வழியின்றி ஏற்று கல்யாணத்தை நடத்தி வைத்தார் சூப்பர்ஸ்டார்.

அறியாத வயதில் புரியாமல் வரும் காதலுக்காக பெற்றோர் பயப்படுவதில் நியாயமுண்டு. ஆனால் இன்றும் சாதியைக் காரணம் காட்டிக் காதலை மறுப்பது என்பது புரையோடிப்போன சமூக அவலங்களின் மிச்சமிருக்கும் எச்சங்கள் தான்.

16:10 Posted in சினிமா | Permalink | Comments (3) | Email this | Tags: superstar, love

Thursday, 04 October 2007

❒ கவர்ச்சித் தாரகை ஊர்வலம்

சர்வதேச ஹாட் ஸடார்களான பாரிஸ் ஹில்டன் மற்றும் லிண்ட்சே லேஹான் ஆகிய இருவரும் கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச நீச்சலுடை போட்டியில் கண் கவர் நீச்சலுடைகளை அணிந்து நடை போட வருகின்றனர்.Image and video hosting by TinyPic

சர்வதேச அளவில் பிரபலமான லிஞ்சரிகளை (அதாங்க ஜட்டி, பிரா வகையறாக்கள்) தயாரிக்கும் சிகே, வானிட்டி பேர், அவ்பாத் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து கோவாவில் மிஸ் பிகினி இந்தியா 2007 போட்டியை நடத்தவுள்ளன.

இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நடைபெறவுள்ள மிகப் பெரிய பிகினி போட்டி இது என்பதால்தான் இந்த எதிர்பார்ப்பு.

இதில், சர்வதேச அளவில் ஹாட்டஸ்ட் ஸ்டார்களான பாரிஸ் ஹில்டன், லிண்ட்சே லேஹான் உள்ளிட்ட சர்வல லோக சுந்தரிகள் பிகினி உடை அணிந்தும், லிஞ்சரிகளை அணிந்தும் பூணை நடை போடவுள்ளனர்.

சர்வதேச அளவில் பிரபலமான லிஞ்சரி ஐட்டங்கள் இந்த போட்டியின்போது பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

பாரிஸ் ஹில்டனும், லோஹனும் இந்தியாவுக்கு வரவுள்ளதை அவரவர் மேலாளர்கள் உறுதி செய்துள்ளனர். இருவரும் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை. இதனால் இருவரும் படு சந்தோஷமாக உள்ளனராம்.

இவர்கள் தவிர மேலும் சில கவர்ச்சிப் பிரபலங்களும் கோவாவில் கால் வைக்கக் கூடும் என்று தெரிகிறது.

ஸோ, கோவா, 'பால் கோவா' ஆகப் போகிறது!

-
தட்ஸ்தமிழ்

-oOo-

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, மாடல், தொலைக்காட்சித் தொகுப்பாளர் என்று தொடர்ந்து பாடகியாகவும் முத்திரை பதித்துள்ள Lindsey Lohan இன்று ஹாலிவுட் கவர்ச்சித் தாரகையாக உலாவரும் 21 வயதுப் புயல். இந்தப் புயல் பாரிஸ் ஹில்டனுடன் இணைந்து கோவாவைக் கலக்க வருகிறதாம். அதுவும் பிகினி விளம்பரத்துக்கான அழகு அணிநடைக்காக...

கலாச்சாரக் காவலர்களின் எதிர்ப்பு வழக்கம் போல இதற்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தமிழ் சினிமா இயக்குநர்கள் மூன்று பேர் கோவாவில் முகாமிடப் போவதாகவும் தகவல்.

படம் காட்டி ரொம்ப நாளாச்சு என்று கேட்ட நண்பருக்காக இங்கே இன்னொரு படம்!

06:15 Posted in சினிமா | Permalink | Comments (9) | Email this | Tags: Linsey Lohan, Paris Hilton, Goa

Monday, 17 September 2007

❒ நேற்றுப் பார்த்த பெரியார்!

கலைஞர் டிவியில் நேற்று கண்ட பெரியார் திரைப்படம் முந்தின நாள் கண்ட இரண்டு தமிழ் மசாலாத் திரைப்படங்களுக்கு நேர் எதிரிடையாக இருந்தது. பெரியார் பிறந்த நாளுக்கு முந்தைய நாளே படத்தை கலைஞர் டிவி ஒளிபரப்பி விட்டது.

நல்ல முயற்சி. பெரியாரின் வாழ்வை ஒட்டிய நிகழ்வுகளை நன்றாகத் தொகுத்திருக்கிறார்கள்.

பார்த்ததில் என்னை கவர்ந்தது பெரியாராக நடித்த சத்தியராஜின் இயல்பான நடிப்பு. பெரியாரின் துணைவிகள் நாகம்மை, மணியம்மையாக வரும் ஜோதிர்மயி, குஷ்பு ஒளரவு இயல்பாக நடித்துள்ளனர். மற்றவர்கள் இயல்பாக நடிக்க முயன்று? தோற்றுப் போயிருக்கிறார்கள். காமராஜ் பரவாயில்லை. பிற திராவிடத் தலைவர்களாக நடித்தவர்கள் கொஞ்சம் பயத்துடனே நடித்த மாதிரி தெரிகிறது. அதிகமாக நடுங்கியவர் கருணாநிதியாக நடித்தவர் தான் என்று தோன்றுகிறது.

திரைக்கதையில் எதையும் விட்டு விடக்கூடாது என்ற பதற்றம் தெரிகிறது. அதனால் சில காட்சிகள் மனதில் ஒட்டவில்லை. உணர்வுப்பூர்வமாக அமைய வேண்டிய பல காட்சிகள் மிகவும் சாதாரணமாக எடுக்கப் பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில் கொஞ்சம் துண்டு துண்டாக நிகழ்ச்சிகள் வருகின்றன. பெரியாரைப் புரிந்து கொள்ளச் செய்வது என்ற அளவில் அது சரியான அணுகுமுறைதான். ஆனால் படத்தின் நனவோட்டத்தை அது சற்றே பாதிக்கிறது.

படத்தில் இயக்குநரின் உழைப்புத் தெரிகிறது. ஆனால் சினிமா என்ற மாபெரும் ஊடகத்துக்கான களம் அமைப்பதில் கொஞ்சம் சறுக்கல் தான். ஆனால் நல்லதொரு, அவசியமான வரலாற்றுப் பதிவு என்பதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.
*
ஞாயிற்றுக்கிழமை முக்கியமான திரைப்பட நேரத்தில் ஒளிபரப்பப் பட்ட திரைப்படம். ஆனால் எத்தனை பெண்கள் இந்தப் படத்தைப் பார்த்திருப்பார்கள் என்று பார்த்தால் மிகுந்த ஏமாற்றம். எங்கள் தெருவில் உள்ள எந்தக் குடும்பத்திலும் பெண்கள் இந்தப் படத்தைப் பார்க்க விரும்பாமல் சானலை மாற்றி சன்டிவியில் ஓடிய அருணாச்சலத்தை 26 வது முறையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தமிழ்நாடு முழுவதும் இதுதான் நிலைமையாக இருந்திருக்கும்....ம்..

-oOo-

பார்த்து விட்டீர்களா? திரட்டிகளின் தொகுப்பு

12:45 Posted in சினிமா | Permalink | Comments (7) | Email this | Tags: periyar, cinema, பெரியார், சினிமா

Friday, 14 September 2007

❒ மோதுறாங்கோ மோதுறாங்கோ...

ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருந்தவங்க பிரிஞ்சா இப்படித்தான் மோதிக்குவாங்களோ? இப்படி ஏட்டிக்குப் போட்டியா செஞ்சு மத்தவங்களை திக்கு முக்காட வைக்கிறாங்களே? ஆரம்ப கோபம் மாறும், ஆறும்னு நம்பிட்டிருந்தவங்க ஏமாந்து போற மாதிரி நாளைக்கு அது நடக்கப் போகுது.

அதான் கலைஞர் டிவி நாளை ஆரம்பமாகுதுங்கோ.

காலை 10.30 க்கு போக்கிரி வெற்றி விழா.
மதியம் 1.30 க்கு பிரித்விராஜ், ஜோதிகா, பிரகாஷ்ராஜ் நடித்த மொழி...
மாலை வடிவேலுவோட இம்சை அரசன் 23ம் புலிகேசி... என்று தூள் கிளப்புது.

ஏட்டிக்குப் போட்டியா சன்டிவியில் நாளை

காலை 10 மணிக்கு நட்சத்திரக் கலைவிழா
மதியம் 1 மணிக்கு சூர்யா, ஜோதிகா, வடிவேலு நடித்த பேரழகன்.
மாலை சமீபத்திய அதிரடிப் படமான விஷால், ஷ்ரேயா ரெட்டி, ரீமாசென் நடித்த திமிரு.

***

பேரழன், புலிகேசி இரண்டும் எங்கூரு லோக்கல் கேபிளில் வந்து விட்டதால் மொழி, திமிரு பார்க்கலாம்னு ஐடியா!

***

அப்புறம் வந்தவங்க எல்லாம் ஒரு எட்டு இங்க போய் பார்த்துட்டு வ்ந்துருங்க...உங்க கருத்தையும் சொல்லிப்போடுங்க...

16:30 Posted in சினிமா | Permalink | Comments (5) | Email this | Tags: கலைஞர் டிவி, சன் டிவி, kalaignar tv, sun tv

Tuesday, 31 July 2007

❒ சஞ்சய் தாதாவுக்கு ஆறுவருடம்!

Image and video hosting by TinyPic
சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல் சிறை:
மும்பை தடா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு


ஜூலை 31, 2007

மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிபு வழக்கில் மொத்தம் 100 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். அவர்களில் சஞ்சய் தத்தும் ஒருவர்.

100 பேரில் இதுவரை 96 பேருக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டு விட்டது. சஞ்சய் தத், ருஸ்ஸி மல்லா, யூசுப் நுல்வல்லா, கெர்சி அட்ஜானியா ஆகிய நான்கு பேருக்கு இன்று மும்பை தடா நீதிமன்றம் தண்டனை விவரத்தை அறிவித்தது.

ஏகே-56 ரக துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்தது தான் சஞ்சய் தத் உள்ளிட்ட நான்கு பேர் மீதான குற்றச்சாட்டு ஆகும். நான்கு பேரும் ஆயுதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய மும்பை தடா நீதிமன்றம் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதையடுத்து அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டு நீதிமன்றத்தில் இருந்தே தத் நேரடியாக சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்படுவார்.

நீதிபதி பி.டி.கோடே தீர்ப்பை அறிவித்துப் பேசுகையில், நான்கு குற்றவாளிகளும் செய்துள்ள குற்றம் சாதாரணானதல்ல. பயங்கரவாத நடவடிக்கை. எனவே அவர்களுக்குத் தண்டனை வழங்காமல் இருக்க முடியாது.

குற்றவாளி ருஸ்ஸி மல்லா தாக்கல் செய்துள்ள நன்னடத்தை சான்றிதழ் ஏற்கப்படுகிறது. அவர் ஒரு வருடம் நீதிமன்றக் கண்காணிப்பில் வைக்கப்படுவார்.

குற்றவாளி ருஸ்ஸி மல்லா யூசுப் நுல்வல்லாவுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அவரது ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது.

சஞ்சய் தத்தின் நன்னடத்தை சான்றிதழை ஏற்க முடியாது. அவருக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது. அவரது ஜாமீனும் ரத்து செய்யப்படுகிறது.

அவரது தண்டனைக் காலத்தில் ஏற்கனவே அனுபவித்த 16 மாதங்களைக் கழித்துக் கொள்ள வேண்டும். (இதனால் 4 வருடம் 10 மாதம் தத் சிறையில் இருப்பார்)

கெர்சி அட்ஜானியாவுக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது என்று தனது தீர்ப்பில் தெரிவித்தார் நீதிபதி கோடே.

நீதிபதியிடம் கெஞ்சிய சஞ்சய் தத்

தீர்ப்பை நீதிபதி கோடே அறிவித்ததும் அதிர்ச்சி அடைந்த சஞ்சய் தத் நீதிபதியின் மேசை முன்பு சென்று கைகளை கூப்பியபடி சிறைக்குச் செல்ல கொஞ்சம் கால அவகாசம் தருமாறு கேட்டுக் கொண்டார். அப்போது அவரது கண்கள் கலங்கியிருந்தன. அவரது வக்கீல்களும் சஞ்சய் தத்தை சிறையில் அடைக்க கால அவகாசம் தருமாறு கோரினர்.

அதைக் கேட்ட நீதிபதி இதுகுறித்துப் பரிசீலித்து மாலை 3 மணிக்கு உத்தரவைத் தெரிவிப்பதாக கூறினார். அப்போது சஞ்சய் தத், அதுவரை என்னைச் சுற்றிலும் போலீஸார் நிற்பதற்குத் தடை விதிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதை ஏற்ற நீதிபதி, போலீஸார் நகருமாறு உத்தரவிட்டார்.

ஆனால் மாலையில் சஞ்சய் தத்தின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். இதையடுத்து சஞ்சய் தத்தை சிறையில் அடைக்க போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.

மகளிடம் போனில் அழுகை

தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் அமெரிக்காவில் இருக்கும் தனது மகள் திரிஷலா தத்துடன் பேச அனுமதிக்க வேண்டும் என கோரினார் சஞ்சய் தத். அதற்கு நீதிபதி அனுமதி அளித்தார். இதையடுத்து செல்ேபான் மூலம் சஞ்சய் தத் தனது மகளிடம் பேசினார்.

இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு அழைத்துச் சென்றனர். வேனில் அவரை போலீஸார் அழைத்துச் சென்றபோது நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த ரசிகர்கள், சஞ்சய் தத்தை நோக்கி சோகத்துடன் கையசைத்தனர். அதற்கு சஞ்சய் தத்தும் சோகமான முகத்துடன் கைகளை அசைத்தபடி சென்றார்.

இதற்கிடையே, தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப் போவதாக சஞ்சய் தத்தின் வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தீர்ப்புடன் மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 100 பேருக்கும் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டு விட்டது.

மும்பை தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 12 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது.

மற்றவர்களுக்கு குறைந்தது 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று தீர்ப்பு வழங்கப்பட்டதையொட்டி மும்பையில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

செய்தி: தட்ஸ்தமிழ்

மேலும்...

சற்றுமுன்: மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: சஞ்சய் தத்திற்கு ஆறு வருட சிறை தண்டனை

14:55 Posted in சினிமா | Permalink | Comments (3) | Email this | Tags: தீர்ப்பு

Monday, 30 July 2007

❒ திரிஷா! எது உண்மை?

Image and video hosting by TinyPic த்ரிஷா அழுகை.. தேற்றிய விஜய்

த்ரிஷாவுக்கும் அவரது அம்மா உமாவுக்கும் தனியாக டின்னர் கொடுத்து அசத்தியிருக்கிறார் விஜய். இந்த டின்னருக்குப் பெயர் சமாதான டின்னராம்.

சமீபத்தில் விஜய் நடித்த போக்கிரி படத்தின் வெள்ளி விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. ஏராளமான திரையுலக நட்சத்திரங்களுக்கு அழைப்புப் போனது. பலருக்கு விஜய்யே நேரிலும் போனிலும் அழைப்பு விடுத்தார்.

ஆனால், ஒரே ஒருவருக்கு மட்டும் அழைப்பில்லையாம். அது த்ரிஷா.

தனது பெயர் ஏகப்பட்ட நெகடிவ் செய்திகளில் (விசிடி, குடி, ஆட்டம், பளார் இன்னும் பல) அடிபட்டுக் கொண்டிருப்பதால் நொந்து போயிருந்த த்ரிஷாவுக்கு விஜய்யின் செயல் அதிர்ச்சியைத் தந்துவிட்டதாம்.

தரணியின் இயக்கத்தில் அடுத்த விஜய்யின் படத்தின் ஹீரோயினாக புக் ஆகியுள்ள நிலையில் தன்னை விஜய் தரப்பு ஓரங்கட்டுவதை பொறுக்க முடியாமல் தவித்துவிட்டாராம் த்ரிஷா.

நேரில் தான் அழைப்பில்லை.. விஜய்யிடம் இருந்து தபாலிலோ கூரியரிலோ இன்விடேசனாவது வரும், நிகழ்ச்சிக்குப் போய்விடுவோம் என தனது புரோகிராம்களை எல்லாம் கேன்சல் செய்துவிட்டு தயாராக இருந்திருக்கிறார் த்ரிஷா.

ஆனால், இன்விடேசன் கூட வரவில்லை. இதையடுத்து போனாவது வரும் என்ற நம்பிக்கையோடு மாலை வரை காத்திருந்தாராம். ஹூஹும்.. எதுவும் வரவில்லை.

அப்படியே அடக்கி வைத்த அழுகையை கொட்டித் தீர்த்துவிட்டாராம் த்ரிஷா. கேவிக் கேவி மகள் அழுவதைப் பார்த்து அம்மா உமா அவரை சமாதானப்படுத்த முயன்றிருக்கிறார். முடியவில்லை.

த்ரிஷாவின் தவிப்பும் அழுகையும் ஜாஸ்தியாகிக் கொண்டே போகவே ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் விஜய்க்கே போன் போட்டு இங்கே த்ரிஷாவின் மனசு படும் பாட்டை எடுத்துச் சொன்னாராம்.

இதையடுத்து போனை த்ரிஷாகிட்டே குடுங்க என்று சொல்லி, அவரிடம் காரணங்களை விளக்கியிருக்கிறார் விஜய். (என்ன காரணமோ நமக்குத் தெரியாதுப்பா). மேலும் மம்மி உமாவிடம் காரணங்களைச் சொல்லி புரிய வைத்திருக்கிறார்.

இதில் த்ரிஷாவும் உமாவும் சமாதானமாகிவிட்டார்களாம். இதைத் தொடர்ந்து ஒரு ஸ்டார் ஹோட்டலில் வைத்து விஜய்யை த்ரிஷாவும் உமாவும் சந்தித்துள்ளனர். அப்போது நேரிலும் விஜய் காரணங்களைக் கூறினாராம்.

இதைத் தொடர்ந்து அதே ஹோட்டலில் இருவருக்கும் எக்ஸ்க்ளூசிவாக சிறப்பு டின்னரும் கொடுத்தாராம் விஜய்.

விஜய்யின் அன்பால் த்ரிஷாவும் உமாவும் மனம் குளிந்து வீட்டுக்குப் போனார்களாம்.

செய்தி : தட்ஸ்தமிழ்

-oOo-

திரிஷா மோத ரெடியாகி விட்டார்!


தமிழ் சினிமாவிலுள்ள முன்னணி ஹீரோக்களுடன் திரிஷா மோத ஆரம்பித்து விட்டார் என்ற தகவல் கோடம்பாக்கம் முழுக்க பரவி வருகிறது. சமீபத்தில் வெளி வந்துள்ள கிரீடம் படத்திற்கு சென்னை திருவான்மியூரிலுள்ள ஒரு தியேட்டரில் கட்-அவுட் வைப்பதில் ஏற்பட்ட அஜீத்- திரிஷா ரசிகர்களின் மோதல் விவகாரம் அஜீத் தரப்பினருக்கு ஏகப்பட்ட கடுப்பினை உண்டாக்கியுள்ளது. அதே சமயம் ஹீரோவிற்கு மட்டும் தான் தியேட்டர் முழுக்க பேனர் கட் அவுட் வைக்க வேண்டுமா? ஹீரோயின்கள் இல்லையென்றால் படம் ஓடி விடுமா? இது திரிஷா தரப்பில் கேட்கப் பட்ட கேள்வி.

ஒரு வழியாக சமாதானம் என்று வந்தாலும் இனி அஜீத் தன் படங்களுக்கு திரிஷாவை நாயகியாக போட ஒப்புக் கொள்ளவே மாட்டார். அடுத்து இன்னொரு மேட்டர். ராசியான ஜோடி என்று பெயர் வாங்கியவர்கள் விஜய், திரிஷா. கில்லி, திருப்பாச்சி வெற்றிக்குப் பிறகு திரிஷா தெலுங்கில் பிசியானதால் விஜய்யுடன் ஜோடி சேர முடியவில்லை.

இந்நிலையில் தரணி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு திரிஷாதான் நாயகி என்று ஒப்பந்தமானது. இதற்கிடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. விஜய் படத்திற்கான பூஜையில் கூட திரிஷா கலந்து கொள்ளவில்லை. அதே போல் போக்கிரி வெற்றி விழாவிற்கு அழைப்பிதழ் கொடுத்திருந்தும் திரிஷா அம்மா கூட எட்டிப் பார்க்கவில்லை. இதனால் விஜய் தரப்பு திரிஷா மீது ஏகப்பட்ட கடுப்பில் இருக்கிறார்கள்.

செய்தி: தினமலர் செய்திமலர்.

10:25 Posted in சினிமா | Permalink | Comments (6) | Email this | Tags: trisha, சினிமா, திரிஷா

Friday, 27 July 2007

❒ தடாலடியார் தந்த தடாலடி

நண்பர்களே

நம்ம தடாலடியார் கவுதம் அவர்கள் நடத்திய தடாலடிப் போட்டியில் நாளை 'சங்கர்தாதா ஜிந்தாபாத்' திரைப்பட முதல் நாள் காட்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சென்னையில் இல்லாததால் சென்னை நண்பர்கள் யாருக்கேனும் வழங்க இருக்கிறேன்.

கவுதம் மற்றும் வலைப்பதிவு நண்பர்களுடன் ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் தியேட்டரில் சனிக்கிழமை 6.30 காட்சியில் சங்கர் தாதாவை காண விரும்பும் சென்னை வலைப்பதிவு நண்பர்கள் எனது மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்.
வாழ்த்துக்கள்.

10:10 Posted in சினிமா | Permalink | Comments (0) | Email this | Tags: சினிமா

Thursday, 26 July 2007