Tuesday, 01 July 2008
❒ அகரவரிசைக்கு ஒரு மென்பொருள்
தமிழ் எழுதுகருவியான NHM Writer மற்றும் NHM Convertor ஆகியவற்றைத் தந்த நியூ ஹொரைசான் மீடியாவின் தொழில் நுட்பக் கலைஞர் திரு நாகராஜனின் புதிய படைப்பு NHM Lister
இது ஒரு ஆன்லைன் கருவி.
இதன் பயன்கள்.
யூனிகோடில் எழுதப் பட்ட தமிழ் பட்டியல்களை உருவாக்க, ஒரே சொடுக்கில் அகர வரிசைப் படுத்த உதவுகிறது. ஆங்கிலச்சொற்கள், எண்கள், சின்னங்களை நிராகரித்தோ இணைத்தோ பட்டியலை வரிசைப் படுத்த முடியும்.
தனிச் சொற்களின் எண்ணிக்கை, மொத்தச் சொற்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கிட்டுத் தருகிறது. அகர வரிசைப் படுத்தப் பட்ட பட்டியலை சொற்களின் எண்ணிக்கையுடனோ தனிச் சொற்களின் பட்டியலாகவோ copy செய்து கொள்ளலாம்.
பட்டியல்களை உருவாக்க, வரிசைப்படுத்த, சொற்களைக் கணக்கிட என பல்வேறு தேவைகளின் அடிப்படையில் நம்மில் பலருக்கும் இது போன்ற ஒரு கருவி அவசியமாக இருக்கும். இதன் பயன்கள், நிறைகுறைகள் பயனாளிகளின் தேவையின், பயன்பாட்டின் அடிப்படையில் இருக்கும்.
குறையாடுகள் ஏதேனும் இருந்தாலோ, இன்னும் தேவையான வசதிகள் பற்றியோ தெரிவித்தால் நண்பர் நாகராஜன் இக்கருவியை மேம்படுத்த உதவும்
http://software.nhm.in/Services/NHMLister/tabid/72/Defaul...
05:55 Posted in internet , இணையம் , கணித்தமிழ் | Permalink | Comments (1) | Email this | Tags: மென்பொருள், இணையம்
Monday, 31 December 2007
❒ கணித்தமிழுக்கு ஒரு கலக்கல் மென்பொருள்
தமிழ்ச்செயலிகள் என்ற அளவில் பல மென்பொருள்கள் உள்ளன. அவற்றின் செயல்பாடுகள் தன்னளவில் நிறைவுள்ளதாகவும் இருக்கின்றன. ஆனால் எந்தச் செயலியும் இதுவரை செய்யாத சாதனையைகளைச் செய்து கொண்டு ஒரு புதிய மென்பொருள் வந்திருக்கிறது.
விண்டோஸ் இயங்குதளத்தில் எந்த மென்பொருளை பயன்படுத்தினாலும் யூனிகோடில் தமிழ் போன்ற மொழிகளுக்கான வெளிப்பாட்டுக்கு பிராந்திய மொழிகளை (Regional Language Support) எனேபிள் செய்ய வேண்டும். விண்டோஸ் சிடி மூலம் சில செட்டிங்குகள் செய்ய வேண்டி இருக்கிறது... இது தவிர ஆபீஸ் செயலியிலும் தமிழ் தெரிய சில பிரச்சினைகள் இருந்து வருகின்றன. அதற்கும் சில மாற்றங்களை நாமாக செய்ய வேண்டி இருந்தது
இதற்கான தேவை இன்றி தானாகவே இந்திய மொழிகளை எனேபிள் செய்து தமிழை எழுதவும் வாசிக்கவும் வகை செய்கிறது இந்த மென்பொருள்... எழுதுகருவி!
நியூ ஹொரைசான் மீடியா நிறுவனம் வெளியிட்டுள்ள NHM Writer என்ற எழுதுகருவி தான் இந்த புதிய மென்பொருள்.
இதை நிறுவியதும் தமிழ்ரெடி! (தமிழ்ரெடி பிராஜக்டில் நண்பர்கள் இதையும் இணைத்துக் கொள்ளலாம்.)
பிற மென்பொருள்களைப் போல அல்லாமல் எகலப்பை போன்று எழுதுகருவியாகவே அனைத்துச் செயலிகளிலும் தமிழை எழுத வகை செய்கிறது....
யூனிகோடு மட்டுமல்லாமல் தமிழில் மேலும் பல எழுத்துருக்களையும் இந்த கருவி மூலம் எழுத முடியும். யூனிகோடு தவிர மேலும் முக்கியமான எட்டு எழுத்துருக்களில் எழுத இதில் வகை செய்யப் பட்டிருக்கிறது... கூடுதல் தேவைக்காக வேறு எந்த எழுத்துரு பயன்படுத்தவும் நாமாகவே XML வடிவத்தில் கோப்பை உருவாக்கி இணைக்க வகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்99, அஞ்சல்(பொனடிக்), தமிழ் தட்டச்சு, பாமினி ஆகிய தட்டச்சு முறைகளில் யூனிகோடு தவிர மேலும் எட்டு எழுத்துருக்களை (Bamini, Diacritic, Shreelipi, Softview, Tab, Tam, TSCII, Vanavil and Unicode) தட்டச்சு செய்ய முடியும். இந்த வகையில் மொத்தம் 36 விதமாக (4 type layouts x 9 font encoding) இதில் தட்டச்சு செய்ய முடிகிறது.
Key Preview என்னும் வசதி மூலம் உயிர்மெய் எழுத்துக்களை எழுதுவதற்கு அடுத்து எந்த விசையை அழுத்த வேண்டும் என்பது சொல்லித் தருகிறது. பலருக்கும் இந்த வசதி மிகவும் அவசியமானது. விசைப்பலகை ஆன்ஸ்கிரீன் திரைவடிவமும் எழுத்துக்களை உணர்ந்து கொள்ள வசதியாக அமைக்கப் பட்டிருக்கிறது.
இந்த மென்பொருளை நிறுவியதும் யூனிகோடு முறையில் தட்டச்சு செய்யும் படி அமைக்கப் பட்டிருக்கிறது... alt+1 தமிழ்99, alt+2 பொனடிக், alt+3 தட்டச்சு, alt+4 பாமினி.
பிற என்கோடிங்களை எளிதாக shortcut key அமைத்துக் கொள்ளலாம்.
விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, 2003 போன்ற பதிப்புகளில் செயல்படக் கூடியது.
சிறப்பாக வடிவமைக்கப் பட்ட ஆன்லைன் உதவிக்குறிப்பு இங்கே...
விரைவில் இதை தமிழிலும் தருவார்கள் என நம்புகிறேன்.
இத்தனை வசதிகளையும் வெறும் 850 kb அளவுக்குள்ளான சிறிய மென்பொருள் தருவது வியப்பான விஷயம்தான்.
இந்த மென்பொருள் இங்கே இலவசமாக பதிவிறக்க கிடைக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் வேறு சில மென்பொருட்களுடன் இது சிடியாக கிடைக்கும் என்று தெரிகிறது.
நண்பர்கள் பத்ரி, நாகராஜன் என் வாழ்த்துக்களும் நன்றியும்.
*
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
04:25 Posted in internet , இணையம் , கணித்தமிழ் | Permalink | Comments (20) | Email this | Tags: nhm writer, tamil99
Sunday, 02 December 2007
★ கணினி பயன்பாட்டில் சில குறிப்புகள்
1. படங்களைச் சுருக்குதல்:
நாம் பல தேவைகளுக்காக படங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்புகிறோம். வலைப்பதிவுகளில் படங்களை இணைக்க பதிவேற்றுகிறோம்... ஸ்கிரீன் ஷாட் எடுத்து அந்தப் படங்களையும் இம்மாதிரி செய்யும்போது படங்களின் அளவு பல நேரங்களில் படங்களின் அளவு கூட 1எம்பிக்கு மேல் இருக்கிறது. இதனால் பதிவேற்ற நேரம் அதிகம் பிடிக்கிறது... வலைப்பக்கத்தில் இந்தப் படம் இணைக்கப் பட்டால் அந்த வலைப்பக்கம் திறக்க அதிக நேரம் ஆகிறது.
இதற்கான தீர்வுகள்:
BMP கோப்பாக இணைப்பதை தவிர்க்க வேண்டும். ஜேபெக் அல்லது .ஜிப் ஆக அனுப்பலாம்.
படங்களின் தெளிவுக்கு இழப்பு ஏற்படாமல் படங்களை 50 சதவீதம் வரை .ஜேபெக் கம்பிரசன் செய்ய முடியும். அவ்வாறு செய்தால் படங்களின் அளவை மிகவும் குறைக்க முடியும். இதற்கு IrfanView போன்ற கிராபிக் எடிட்டர்கள் உதவும்.
http://www.irfanview.net/ தளத்திலிருந்து இம்மென்பொருளைப் பெற்றுக் கொள்ளலாம். இது ஒரு ஆடியோ, வீடியோ மற்றும் கிராபிக் எடிட்டர்.
இது போன்ற எடிட்டரில் எடிட் செய்ய வேண்டிய படத்தை திறந்து கொள்ளவும்.
படத்தின் நீள அகலங்கள், வெட்ட, கூட்ட, குறைக்க செய்து தேவைப்பட்டால் வண்ணம் மற்றும் எபக்டுகள் தந்தபின்
File --- save as
திறக்கும் பக்கத்தில் Show options dialog டிக் செய்திருந்தால் JPEG/GIF save options என்னும் சாளரம் இருக்கும். (இல்லை எனில் Show options dialog பெட்டியில் டிக் செய்யவும்)
அந்தச் சாளரத்தில் Save Quality ஸ்லைடரில் 50 சதவீதம் கொடுத்து படத்தை GIF அல்லது JPEG ஆக save செய்யவும்...தெளிவு குறைவாக இருந்தால் 60 சதவீதம் கொடுக்கலாம். இம்முறையில் படத்தின் கொள்ள்ளவை தேவையானபடி குறைத்துக் கொள்ள முடியும்.
நேரடியாக விண்டோசில் இருந்து ஒரு படத்தை மின்னஞ்சலில் அனுப்ப படம் இருக்கும் போல்டரைத் திறந்து அனுப்ப வேண்டிய படம் அல்லது படங்களைத் தேர்வு செய்தால் இடப்புறம்
File and Folder Tasks பகுதியில்
Email this file / Email the selected items கிளிக் செய்தால்
send picture via email என்ற சிறு பெட்டி தோன்றும்.அதில்
show more options பகுதியில் தேவையான அளவை தேர்வு செய்து
make all my pictures smaller தேர்வு செய்து ok செய்தால் உங்கள் மின்னஞ்சல் கிளையண்டில் ( அவுட்லுக்?) படம் அனுப்பத் தயாராக இருக்கும். இம்முறையில் படத்தின் நீள அகலங்கள் தேவையான குறிப்பிட்ட அளவுகளில் மாற்ற முடியும்.
2. வேர்ட் கோப்பை திருத்தங்களிலிருந்து பாதுகாத்தல்
நீங்கள் ஒரு வேர்ட் கோப்பில் பல தகவல்களைச் சேகரித்து வைத்திருக்கிறீர்கள்...உங்கள் கணினியைப் பயன்படுத்தும் வேறொருவர் அதில் மாற்றம் செய்து விடுகிறார்...அப்படி ஏதாவது திருத்தம் செய்யப் பட்டிருக்கிறதா, என்னென்ன மாற்றங்கள் என்பதை எப்படிக் கண்டறிவது?
வேர்ட் கோப்பினைத் திறந்து கொள்ளவும்.
Click *Tools*
Click *Protect Document*
திறக்கும் பெட்டியில் password இட்டு ஓகே செய்யவும்...
இனி கோப்பில் செய்யப் படும் மாற்றங்களை பார்க்க முடியும்.
Click *Tools*
*UnProtect Document*
password மூலம் நீங்கள் பழையபடி வழக்கமான கோப்பில் பணி செய்யலாம்...
10:50 Posted in star , இணையம் , கணித்தமிழ் | Permalink | Comments (4) | Email this | Tags: word, image
Tuesday, 24 July 2007
❒ மைக்ரோசாப்ட் பெயின்ட் - சில குறிப்புகள்
விண்டோஸ் இயங்கு தளத்தில் இருக்கும் வலைகலை மென்பொருள் பெயின்ட். இதில் மற்ற வரைகலை மென்பொருட்கள் மாதிரி லேயர், ஷேடோ எல்லாம் செய்ய முடியாது. படத்தை பெரிதாக ட்ரான்ஸ்பார்மேஷன் எதுவும் செய்ய முடியாது. ஆனால் ஒரு சாதாரண பிரஷ் கொண்டு காகிதத்தில் என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் பெயின்ட் கொண்டு கணினியில் செய்ய முடியும். ஷேடோ வேண்டுமென்றால் கூட தானாகவே வருவதற்கு மாறாக நாம் வரைந்தாக வேண்டும். எளிமையான, பயனுள்ள மென்பொருள்.
சில அடிப்படைக் குறிப்புகள்.
துவக்கம்:
image சுட்டியில் Attributes தேர்வு செய்தால் படத்தின் அளவை தீர்மானிக்கும் பெட்டி தோன்றும். அதில் அகல நீளங்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
பிரஷ், பென்சில், நேர்கோடு, வளைகோடு, அடிப்படை உருவங்கள் போன்றவை கொண்டு வரையலாம். ஸ்பிரேயரும் இருக்கிறது.
பிரஷ் அளவு தேர்வு செய்து கொள்ளலாம்.
சாய்கோட்டுப் படத்தின்மீது கிளிக் செய்தால் கோடுகளின் கனம் (Thickness) மாற்றம் செய்வதற்கான ஆப்ஷன் கிடைக்கும். இதை மாற்றினால் அது நேர்கோடு, வளைகோடு, வட்டம், சதுரம் போன்ற வடிவங்கள் வரையும் போதும் அதே கனத்தில் தான் வரையும்.
எழுத்துக்களை எழுதும்போது அது தனி வெள்ளைத் திரை பின்னணி அல்லது ஏற்கனவே இருக்கும் பின்னணி (transparent) என்று தேவையான ஆப்ஷன் தேர்வு செய்து கொள்ளலாம். தமிழ் எழுத்துக்கள் தேவை என்றால் அதற்கான பெட்டியில் எழுத்துரு தேர்வு செய்து கொள்ளலாம்.
தேவையான வண்ணத்தை கிளிக் செய்து பெறலாம். இன்னும் வித்தியாசமான வண்ணம் தேவை எனில் வண்ணத்தின்மீது இரட்டை கிளிக் செய்தால் வண்ணப் பெட்டி புதிதாக தோன்றும். அதில் define custom colors கிளிக் செய்தால் ஆயிரக்கணக்கான வண்ணமாறுபாடுகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
குறிப்பிட்ட பகுதியை வெட்டி இன்னொரு இடத்தில் ஒட்டலாம். அதற்கான தேர்வில் வரைதேர்வு, செவ்வக தேர்வு இருக்கிறது. இதிலும் பின்னணி வெள்ளை அல்லது transparent தேர்வு செய்யலாம்.
அழிப்பான், குறிப்பிட்ட பகுதி முழுவதற்கும் ஒரே சொடுக்கில் வண்ணம் தீட்டுதல், குறிப்பிட்ட வண்ணம் தேர்வு செய்தல் என்பனவற்றுக்கு சுட்டிகள்
இன்னும் படங்களை சுழற்ற, வேறொரு படத்தை கொண்டுவந்து இணைக்க, கறுப்பு வெள்ளையில் விதவிதமாக வரைய என்று பல ஆப்ஷன்கள் உண்டு.
கணினியில் மைக்ரோசாப்ட் பெயிண்ட் கொண்டு படம் வரைந்து இந்த போட்டியில் கலந்து கொள்ளுங்கள்.
05:25 Posted in கணித்தமிழ் | Permalink | Comments (0) | Email this | Tags: paint
Thursday, 24 May 2007
❒ வேர்டிலும் பவர்பாயிண்டிலும் தமிழ்
வேர்டிலும் பவர்பாயிண்டிலும் தமிழ் ஒழுங்காக தெரியவில்லையா?
இகலப்பை மூலம் வேர்டிலும் பவர்பாயிண்டிலும் எழுதும்போது பலரும் தமிழ் கட்டம் கட்டமாக மாறிப்போவதை கவனித்திருப்பீர்கள். இதன் காரணம் மற்றும் தீர்வு என்ன?
இயல்பாக விண்டோஸ் கணினியின் டிபால்ட் எழுத்துருவான லதாவே வேர்டிலும் வரும். அந்த எழுத்துரு ஆபீஸ் தொகுப்பு செயலிகளில் ஒழுங்காக வேலை செய்வதில்லை.
ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆபீஸ் தொகுப்பில் தமிழுக்காக தந்திருக்கும் எழுத்துரு Arial Unicode MS.
உங்கள் வேர்டு அல்லது பவர்பாயிண்ட் செயலியை திறந்து கொள்ளுங்கள். அதில் format - font சுட்டினால் வரும் பெட்டியில் Latin text font மற்றும் compex script font பகுதியில் Arial Unicode MS என்று செட் செய்து கீழே இருக்கும் default சுட்டியை தட்டவும். (பவர்பாயிண்டில் ok தட்டவும்.)
இப்போது நீங்கள் செயலியை மூடிவிட்டு மீண்டும் புதிதாக திறந்து எழுத ஆரம்பிக்கும் போது எல்லாம் ஒழுங்காக வரும்.
இகலப்பை மூலம் எழுத தமிழ் அழகாக வரும்.
தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து இந்திய மொழிகள் மற்றும் ஏராளமான உலக மொழிகளை வேறு எந்த எழுத்துருவும் பதிவிறக்காமல் இந்த Arial Unicode MS எழுத்துரு மூலம் எழுதலாம். அந்தந்த மொழிகளுக்கான விசைப்பலகை செயலி மட்டுமே தேவை. தமிழுக்கு எகலப்பை வேண்டும்.
உங்கள் கணினியில் MS ஆபீஸ் பொதி இருந்தும் Arial Unicode MS எழுத்துரு font folder ல் இயல்பாக நிறுவப் பட்டிருக்கவில்லை என்றால் பின்வரும் வழிமுறைப்படி அதை நிறுவ வேண்டும்.
முதலில் கணினியில்
Control Panel க்கு செல்லவும்.
விண்டோஸ் xp அல்லது 2000 எனில்
Change or Remove Programs
இதில்
Microsoft Office தேர்வு செய்து Change கிளிக் செய்யவும் (தவறுதலாக Remove கிளிக் செய்துவிடக் கூடாது.)
(விண்டோஸ் 98, Me எனில்
Install/Uninstall பட்டையில் Microsoft Office தேர்வு செய்யவும்.
Add/Remove கிளிக் செய்யவும்.)
புதிதாக வரும் Features to install பெட்டியில்
1. next கிளிக் செய்யவும்.
2. expand Office Shared Features கிளிக் செய்யவும்.
3. expand International Support கிளிக் செய்க.
4. Universal Font அருகில் உள்ள ஐகானை கிளிக் செய்யவும்.
5 . கிளிக் Run all from My computer on the shortcut menu.
6. கிளிக் Update.
இப்போது font folder ல் Arial Unicode MS நிறுவப் பட்டிருக்கும்.
-oOo-
குறிப்பு: Arial Unicode MS எழுத்துரு இல்லை என்றாலும் அதற்குப் பதிலாக வேறு ஏதேனும் ஒரு தமிழ் யூனிகோடு எழுத்துருவைப் பயன்படுத்தலாம். ஆனால் பல யூனிகோடு எழுத்துருக்கள் கணினியில் இருந்தாலும் இந்த குறிப்பிட்ட செய்முறையின் போது format - font பெட்டியில் சில குறிப்பிட்ட எழுத்துருக்கள் மட்டுமே செயல்படக்கூடியதாக இருக்கும். பெரும்பாலும் TSCu எனத்துவங்கும் யூனிகோடு எழுத்துருக்கள் செயல்படுவனவாக இருக்கும். அதில் TSCu_Paranar என்னும் எழுத்துரு நன்கு செயல்படுவதாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர். ஏரியல் யூனிகோடுக்கு மாற்றாக நான் சோதித்த போதும் அந்த எழுத்து சரியாக செயல்படுகிறது.
எனவே Arial Unicode MS இல்லை என்றால் அதற்கு பதிலாக TSCu_Paranar என்ற எழுத்துருவைப் பயன்படுத்தி மேற்கண்ட வழிமுறையின்படியே செயல்பட்டால் எழுத்துக்கள் சரியாக தெரியும்.
05:40 Posted in கணித்தமிழ் | Permalink | Comments (34) | Email this | Tags: word, ekalappai, tamil, தமிழ், எகலப்பை, வேர்ட்
Monday, 04 December 2006
மின்னூல்களை உருவாக்குவது எப்படி?
காகிதத்தில் அச்சிட்ட புத்தகங்களை வாசித்து வந்த நம்மால் இன்று கணினியில் மின்புத்தகங்களை வாசிக்க முடிகிறது. இணையப் பக்க (HTML) மின்னூல்கள், இயக்கத் தொகுப்பு (EXE) மின்னூல்கள் போன்றவை இருந்தாலும் இன்று மின்னூல் என பிரபலமடைந்துள்ளது PDF எனப்படும் (portable document format) மென்நூல் வடிவம் தான். இந்த மென்நூல் வடிவை உருவாக்கவும் வாசிக்கவும் அடோப் மென்பொருட்கள் தேவைப்படுகின்றன. PDF மின்நூலை உருவாக்க அடோப் அக்ரோபட் மென்பொருள் தேவைப்படுகிறது. வாசிக்க அடோப் ரீடர் பயன்படுகிறது.
மின்னூலை உருவாக்க பயன்படும் அடோப் அக்ரோபட் மென்பொருளை நாம் விலை கொடுத்து பெற்றுக் கொள்ள வேண்டும். அடோப் ரீடர் இலவச மென்பொருளாகும். ஆனால் இணையம் வழி இம்மென்பொருளின் இப்போதைய பதிப்பை பதிவிறக்க 20 mb இடம் வேண்டும்.
இணையத்தில் சில திறவூற்று மென்பொருட்கள் அடோப் மென்பொருட்களுக்கு இணையாக நமக்கு கிடைக்கின்றன.
பிரிண்டர் டிரைவராக செயல்பட்டு PDF கோப்புகளை உருவாக்கும் இலவச மென்பொருட்கள்:
தேவையான மென்பொருளை பதிவிறக்கி நிறுவிய பிறகு மின்னூலாக்க வேண்டிய கோப்பில் print கட்டளை கொடுத்து பிரிண்டர் தேர்வில் மென்பொருளை தெரிவு செய்தால் கோப்பு பிடிஎப் மென்நூலாக மாற்றப்படும்.
1. pdf995
இது மிக எளிய செயல்பாடு கொண்டது. print கட்டளை கொடுத்தவுடன் PDF ஆக மாற்றுகிறது.
2. PrimoPDF
இதில் மென்நூலுக்கு காப்பு பெயர் (password) தரும் வசதி உண்டு.
3. PDFCreater
ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை இணைத்து ஒரே PDF கோப்பாக மாற்றலாம். text file களை படக்கோப்புகளாக மாற்றவும் இந்த மென்பொருள் பயன்படுகிறது.
தனி மென்பொருட்கள்:
Swift PDF
இந்த மென்பொருள் படக்கோப்புகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றுகிறது. இதை சாதாரண மென்பொருட்களைப் போல நேரடியாக இயக்கலாம்.
*Foxit Reader
இது அடோப் ரீடரைப்போன்று PDF கோப்புகளை வாசிக்க பயன்படும் இலவச மென்பொருள். இது 1.5 mb அளவுள்ள எளிய மென்பொருள்.
பதினான்கு மடங்கு அதிக அளவுள்ள அடோப் ரீடரைவிட எளிதாக, வேகமாக இதை பதிவிறக்கி நிறுவிக்கொள்ளலாம். குறைந்த வேக இணையத் தொடர்புள்ளவர்களும் இதை பதிவிறக்கி நிறுவிக்கொள்ள முடியும்.
திறவூற்று மென்பொருள்கள் இலவசமாகக் கிடைப்பதோடு குறைந்த இடவசதியே தேவைப்படுவதால் எளிதாகப் பதிவிறக்க முடிகிறது. பயன்பாட்டுத் திறனிலும் சற்றும் குறைவில்லாத முழுப் பயன்பாட்டை தருகின்றன.
08:15 Posted in கணித்தமிழ் | Permalink | Comments (3) | Email this | Tags: தமிழ்ப்பதிவுகள், மின்னூல், ebook, pdf
Friday, 17 February 2006
அழகி- இப்போது இலவசம்
தமிழ் மென்பொருள் அழகி - சிறப்புக் கூறுகள்.
அழகி உலகின் முதலாம் 'இரு திரை' தமிழ் ஒலிபெயர்ப்பு மென்பொருள் என பெருமை கொள்கிறது. இந்த மென்பொருள் மூலம் தமிழில் ஒலிபெயர்ப்பு, தட்டச்சு, அச்சு, மின்னஞ்சல், மின்னுரையாடல், வலையாக்கம் செய்ய முடிகிறது. இதில் ஒலியியல், தமிழ் தட்டச்சு, தமிழ்நெட்99 - 3 வகை விசைப்பலகை முறைகளில் உள்ளீடு செய்யலாம்.
இதிலுள்ள ஈடிணையில்லா ஆங்கிலம்-தமிழ் சொல் இணைப்பு எளிய தமிழ் தட்டச்சுக்கு உதவும் முறையில் அழகியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.. உ-ம்: 'ஸ்ரீ' என்று டைப் செய்ய, sri, sree, shri, Mr என்று எப்படி வேண்டுமானாலும் டைப் செய்யலாம். naan, nalam, neenga - நான், நலம், நீங்க. 'n' என்ற எழுத்து முதலில் வரும்போது 'ந' எனவும் இடையிலும் இறுதியிலும் 'ன்' ஆகவும் வருகிறது. 'நன்றி' என்ற சொல்லை தட்டச்ச வழக்கமாகப் பயன்படுத்தும் nanRi மட்டுமல்லாமல் nandri என்றும் தட்டச்சலாம். இது போன்று ஆங்கிலத்தில் உள்ள சில சொற்களை அப்படியே டைப் செய்யலாம். உ-ம்: 'dear', 'easy', 'meals', 'queen' etc. இவற்றை 'diyar', 'eesi' என்றெல்லாம் டைப் செய்யத் தேவையில்லை. நீங்கள் ஏற்கனவே அடித்து வைத்திருக்கும் ஆங்கிலக் கோப்புகளை (உ-ம் : வலைப்பக்கங்கள், வேர்ட் ஆவணங்கள் etc.) அப்படியே தமிழில் ஒலிபெயர்க்கலாம். மீண்டும் டைப் அடிக்க வேண்டியதில்லை. மாற்று ஒலிபெயர்ப்பு - தமிழில் டைப் செய்து, ஆங்கிலத்தில் பெறலாம்.
MS-Word, Excel, Powerpoint, Access, Pagemaker, Photoshop, Outlook Express, Hotmail, MSN Messenger போன்ற எல்லா செயலிகளிலும் நேரடி ஒலிபெயர்ப்பு/தட்டச்சு செய்யலாம். தமிழில் Find/Replace - நேரடியாக Word, Excel etc. செயலிகளில் - சரளமாகச் செய்யலாம். தமிழில் 'வரிசைப்படுத்துதல்' - Excel, Access போன்ற செயலிகளில் - எளிதாய்ச் செய்யலாம். தமிழில் சொல் எண்ணிக்கை (Word count) பெறலாம். உங்கள் கோப்புகளின் பெயர்களையே தமிழில் வைத்துக் கொள்ளலாம்.
உங்கள் தமிழ் ஆக்கங்களை திஸ்கியிலிருந்து தாப் (TAB) எழுத்துருவுக்கு மாற்றம் செய்யலாம். திஸ்கி, தாப் எருத்துருக்களை யூனிகோடுக்கு மாற்றலாம், 'Bulk Unicode Convertor' (multiple files converter) உண்டு. வலைதளங்கள் அமைக்க இலவச தானியங்கி (dinamic font) தமிழ் எழுத்துரு (both Tscii/Unicode compliant) வழங்கப்படுகிறது.
அடிக்கடி உபயோகிக்கும் தமிழ் வாக்கியங்களை/பத்திகளை (உ-ம்: பாரதியார் கவிதைகள், பழமொழிகள்) எந்த விண்டோஸ் செயலியிலும், ஒரே ஒரு பட்டனைத் தட்டுவதன் மூலமே உட்புகுத்தலாம் என்பது இதன் மற்றொரு சிறப்பம்சம். இதில் தமிழ் கற்க/கற்பிக்க, 'சிறுவர் கீ-பாட்' உண்டு. மென்பொருளுடன் உள்ளடங்கிய விரிவான, தெள்ளத் தெளிவான உதவிக்கோப்புகள் நிறைய விவரங்களைக் கொண்டுள்ளன.
அழகியின் ami version பிப்ரவரி இறுதி வரை இலவசமாக வழங்கப்படுகிறது. பதிவிறக்கி நிறுவிப் பாருங்கள். பிடித்திருந்தால் முழுமையான அழகி புரபசனல் version ஐ வாங்கிப் பயன்படுத்துங்கள்.
இலவசப் பதிப்பை பதிவிறக்க இங்கே சுட்டவும்.
நேரடியாக அழகி புரபசனல் version வாங்க இங்கே சுட்டவும்
05:00 Posted in கணித்தமிழ் | Permalink | Comments (8) | Email this | Tags: Azhagi, Vishy, அழகி
Wednesday, 15 February 2006
தமிழ் மென்பொருள்கள்
ஜனவரி 16-31 தமிழ் கம்பியூட்டர் இதழுடன் தமிழ் மென்பொருள் குறுவட்டு ஒன்று வழங்கப்பட்டது. அதில் Panacea நிறுவனம் தயாரித்த, தமிழ்க்கணினி ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள்ள பல தமிழ் மென்பொருட்களும் எழுத்துருக்களும் அவற்றின் source code உடன் உள்ளன.
1. முகவரி
தமிழில் முகவரித்தொகுப்பு மென்பொருள்.
இதில் நமக்கு வேண்டிய முகவரிகளை குடும்பம், தனிப்பட்ட, நண்பன், அலுவலகம், சகதோழர், பொதுவானவை, அனைத்தும் என முறைப்படுத்தி சேகரிக்க முடிகிறது. திருமணநாள் நினைவூட்டல், பிறந்தநாள் நினைவூட்டல் மற்றும் பிற நினைவூட்டல்களை தனித்தனியாக பதிந்து வைக்க வசதி செய்யப் பட்டுள்ளது. முகவரிகளை ஏறுவரிசை இறங்கு வரிசையில் வைக்கவும் தேடவும் வசதி உள்ளது. முகவரிகளை தமிழ்99 முறை, தட்டச்சு முறை, ஒலியியல் முறைகளில் தட்டச்சு செய்ய முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
2. புலவன்-பாலம்
இது தமிழ் ஆங்கில அகராதியாகும்.
இதிலுள்ள புலவன் பகுதி தமிழ்-தமிழ் அகராதி. இது சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் வெளியிட்டுள்ள கழகத்தமிழ் அகராதியின் மென்பொருள் வடிவம். சொற்களை தமிழ்99 முறை, தட்டச்சு முறை, ஒலியியல் முறைகளில் தட்டச்சு செய்து தேடலாம்.
பாலம் என்பது தமிழ்-ஆங்கில அகராதி. இவற்றில் புதிய வார்த்தைகளை நாமே சேர்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
3. சங்கம் புரோ
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கான கணக்கியல் மென்பொருள் இது.
மகளிர் சுய உதவிக் குழுவின் கணக்கு வழக்குகளையும், உறுப்பினர்களின் பட்டியல், உறுப்பினர்களின் சேமிப்பு, உறுப்பினர்களின் கடன் பெறுதலையும், கடன் திருப்பிக் கொடுத்தலையும், உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கும் விவரங்களையும் இதில் பதிவு செய்யலாம். கணக்கு அறிக்கை பெற்றுக்கொள்ளலாம்.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சுய உதவிக் குழுக்களுக்கு அளிக்கும் பயிற்சி விவரங்களையும் பதிவு செய்து தங்களது தேவைக்கேற்ப அறிக்கைப் பெற்றுக்கொள்ளலாம்.
4. செல்வம்
தமிழ் கணக்குப் பதிவியல் மென்பொருள்.
இது கடைகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கான் கணக்குகளை பராமரிக்க உதவும் மென்பொருள். இதன் மூலமாக ஒருவர் தனது நிறுவனத்தின் கணக்குகளை அல்லது நிறுவனத்தின் வெவ்வேறு பிரிவுக்கான கணக்குகளைப் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த தகவல்களிலிருந்து ரொக்கக் கணக்கு, பேரேடுகள், குறிப்பேடுகள், இருப்பாய்வு, பெறுதல் மற்றும் செலுத்துதல், இலாப நட்டக் கணக்கு மற்றும் இருப்புநிலை ஆகியவற்றை பிரி வாரியாகவோ அல்லது மொத்தமாகவோ பார்வையிட்டுக் கொள்ளலாம் அல்லது அச்சுப் பிரதியாக எடுத்துக் கொள்ளலாம். இது தவிர ரொக்க மீதிப் பணம், தேய்மானம், வரவு செலவுத் திட்டக் கணக்கு வரவு செலவுத் திட்ட ஒப்பிடல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். விலையுயர்ந்த கணக்கியல் மென்பொருள்களுக்கு நிகராக தமிழிலேயே வடிவமைக்கப் பட்டுள்ள சிறந்த மென்பொருள்.
5. வள்ளுவன்
இது தமிழ் ஆவணக்காப்பு மென்பொருள்
இந்த மென்பொருளில் கோப்புகள், செய்தித்தாளில் வந்த செய்திகள், புத்தகங்கள் பெறுதல் கொடுத்தல் பற்றிய தகவல்களை குறிப்பு வார்த்தைகளைக் கொண்டு ஆவணப்படுத்திக் கொள்ளலாம்.
ஆவணப்படுத்தியக் கோப்புகளை குறிப்பு வார்த்தைகளைக் கொண்டு தேடிக்கொள்ளலாம். கணக்கற்ற கோப்புகளையும், செய்தித் தாள் செய்திகளையும் ஆவணப்படுத்திக் கொண்டு ஒரு குறிப்பு வார்த்தையைக் கொண்டு அது தொடர்புடைய அத்தனை ஆவணங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த மென்பொருளில் வெறும் செய்திகளை மட்டுமல்லாமல் அதன் சம்பந்தப்பட்ட படங்களையும், ஒலி, ஒளிப் படங்களையும் சேகரித்து வைத்து அதைத் திரும்பப் பார்வையிடவும் முடியும்.
6. வலையோடி
இது ஒரு வலை உலாவி
இது நெட்ஸ்கேப் நேவிகேட்டரின் தோற்றத்தில் இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ள வசதிகளோடு பயர்பாக்ஸ் உலாவியில் உள்ளபடி இணையப் பக்கங்களை அடுக்கிப்படிக்க முடிகிறது. நேவிகேட்டரில் உள்ளது போன்ற sidebar பல வசதிகளுடன் உள்ளது.
7. R4U
இந்த மென்பொருளில் தங்களுக்குத் தேவையான கோப்புகளை தமிழில் வடிவமைத்துக் கொள்ளலாம். இதில் Microsoft Word மென் பொருளில் உள்ள அனைத்து வசதிகளும் உள்ளது. இதன் மூலமாக Print preview செய்தல், Printout எடுத்தல், படங்களை உள்ளே சேர்த்தல், Alignment, Bullet மற்றும் Number உள்ளீடு செய்தல் எழுத்தின் வண்ணம் மற்றும் background வண்ணத்தை மாற்றுதல் டேபிள்களை உள்ளீடு செய்தல் போன்றவற்றை எளிதாகச் செய்ய முடியும். இதில் ஆங்கிலம் மற்றும் தமிழில் எளிதாக உள்ளீடு செய்யலாம். இதில் ஐந்து வகையான தமிழ் விசைப்பலகை இயக்கி உள்ளது. அவை Typewriter,Tamilnet 99,Romanised,Inscript,Modern Typewriter. இந்த மென்பொருளின் குறைபாடு என்பது இதில் tam தவிர யூனிகோடு உள்ளிட்ட பிற எழுத்துருக்களை பயன்படுத்த முடிவதில்லை.
8. Sarathy
இது tam, tab எழுத்துருக்களை விண்டோஸ் செயலிகளில் தட்டச்ச உதவும் விசைப்பலகை இயக்கி.
9. தமிழ் ஓலை
இந்த மென்பொருளில் சாதாராண வகையில் தங்களுக்குத் தேவையான கோப்புகளை தமிழில் வடிவமைத்துக் கொள்ளலாம். இந்த மென்பொருளில் மூன்று வகையான தமிழ் விசைப்பலகை இயக்கி உள்ளது. அவை 1. Monolingual -TAM, 2. Bi-Lingual - TAB, 3. Bi-Lingual - TISCII.
மற்றும் ஆங்கிலத்தில் கோப்புகளை வடிவமைக்கவும் இந்த மென்பொருளில் வசதி உள்ளது. வடிவமைத்த கோப்புகளை இடது, வலது, மைய வடிவங்களில் அமைத்துக் கொள்ளலாம்.
இந்த மென்பொருளில் TAM எழுத்துருவில் உள்ள கோப்புகளை TAB எழுத்துருவிற்கு மாற்றிக் கொள்ளவும், TAB எழுத்துருவில் உள்ள கோப்புகளை TAM எழுத்துருவிற்கு மாற்றிக் கொள்ளவும். TISCII எழுத்துருவில் உள்ள கோப்புகளை TAB எழுத்துருவிற்கு மாற்றிக் கொள்ளவும். TAB எழுத்துருவில் உள்ள கோப்புகளை TISCII எழுத்துருவிற்கு மாற்றிக் கொள்ளவும் முடியும்.
10. எழுத்துரு
இவை தவிர இத்தொகுப்பில் உள்ள 200 tam எழுத்து வடிவங்களும், 50 tab எழுத்து வடிவங்களும் DTP மற்றும் அச்சுத்துறையில் உள்ளவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடியவை.
இத்தொகுப்பில் உள்ள மென்பொருள்கள் மற்றும் எழுத்துருக்களில் எந்த மேம்பாட்டையும் செய்ய தமிழ் மென்பொருள் ஆர்வலர்களுக்கு உதவக்கூடிய வகையில் இவற்றின் source code கூடவே வழங்கப்பட்டிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
19:55 Posted in கணித்தமிழ் | Permalink | Comments (4) | Email this


